By QB365 on 18 May, 2020
10 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் பகுதி - V (10th Standard Science Model Question Paper Part - V)
10th Standard
அறிவியல்
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?
A
B
C
D
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C
A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C
A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
நவீன தனிம வரிசை அட்டவணையில் சிறிய மற்றும் பெரிய தொடர்கள் யாவை?
Mg,Mg+,Mg2+
Mg+,Mg2+,Mg
Mg2+,Mg+,Mg
Mg2+,Mg,Mg+
பின்வருவனவற்றுள் நீர்மமற்ற கரைசல் எது?
நீரில் உள்ள சர்க்கரை
நீரில் உள்ள பொதுவான உப்பு
காப்பர் சல்பைடில் உள்ள சல்பர்
இவற்றுள் எதுவுமில்லை
சிதைவு வினைகள் பின்வரும் எவ்வாற்றல்களின் இயல்பை பொறுத்து அமைகின்றன?
வெப்பம்
ஒளி
மின்
இவை அனைத்தும்
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?
நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+
கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
ஆரப்போக்கு அமைப்பு
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
ஒன்றிணைந்தவை
இவற்றில் எதுவுமில்லை
_________________ ஆனது மையப் பகுதியில் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளுடன் காணப்படும்.
சிறுமூளை
பெரு மூளை
தலாமஸ்
டயான் செஃபலான்
உணவில் தேவையான அளவு __________________ இல்லாததால் எளிய காய்ட்டர் ஏற்படுகிறது.
கால்சியம்
அயோடின்
மக்னீசியம்
இரும்பு
மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______ என அழைக்கப்படுகின்றன.
அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
மரபுப் பண்பு மாற்றம் செய்ய்யப்பட்டவை
திடீர் மாற்றம் அடைந்தவை
(அ) மற்றும் (ஆ)
தேவையான நிரல்களை தேர்ந்தெடுக்க நாம் எந்த பொத்தானை அழுத்த வேண்டும்?
நிரல் பொத்தான்
மறுதொடக்க பொத்தான்
எனது கணினி
'Start' பொத்தான்
பகுதி - II
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
குவிலென்சின் வளைவுமையத்தில் பொருள் வைக்கப்படும் போது ஏற்படும் பிம்பத்தின் தன்மையை படம் வரைத்து காட்டு.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?
வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு, வெப்பஉமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
கடின மற்றும் மென் சோப்பு என்பவை யாவை?
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்காலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
புற்றுநோய் கட்டிகளின் வகைகள் யாவை?
தாஜ்மகால் எவ்வாறு அமிலமழையினால் பாதிக்கப்பட்டுள்ளது?
பகுதி - III
எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.
பரப்பு வெப்ப விரிவு குணகம்-வரையறு. இதற்கான சமன்பாடு என்ன?
வீட்டில் உபோயோகப்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுமா?ஏன்?
கால்சியம் கார்பனேட்டில் உள்ள ஒவ்வொரு தனிமத்தின் சதவீத இயைபைக் காண்க.
(Ca = 40, C = 12, O = 16).
எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படாத நிலைக்கு உட்படுத்தும். ஏன்?
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
அருண் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் . திடீரென ஒரு செடியின் மீது ஒரு தும்பி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அதன் இறக்கைளை உற்று நோக்கினான். காக்கையின் இறக்கையும் தும்பியின் இறக்கையும் ஒரே மாதிரி உள்ளதாக நினைத்தான். அவன் நினைத்தது சரியா? உங்கள் விடைக்கான காரணங்களைக் கூறுக.
குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன ?
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
பகுதி - IV
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.
நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.
அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளைத் தருக.
CH3–CH2–CH2–OH. என்ற சேர்மத்திற்கு பெயரிடும் முறையை வரிசை கிரமமாக எழுதுக.
சாறேற்றத்தினை படத்துடன் விளக்குக.
திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?