By QB365 on 13 Mar, 2020
11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (11th Standard Physics All Chapter Five Marks Important Questions 2020 )
11th Standard
இயற்பியல்
SI முறையில் ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு GSI = 6.6 × 10-11 Nm2 kg−2, எனில் CGS முறையில் அதன் மதிப்பைக் கணக்கிடுக?
கீழ்கண்டவற்றைப் பற்றி குறிப்பெழுதுக.
(a) அலகு
(b) முழுமைப்படுத்துதல்
(c) பரிமாணமற்ற அளவுகள்
1 நியூட்டன் -டைனாக பரிமாணங்களின் உதவியுடன் மாற்றுக:
ஒரு நீர்முழ்கிக் கப்பலில் பொறுத்தப்பட்டுள்ள ஒரு சோளார் கருவியின் சைகைகளின் உருவாக்கத்திற்கும், எதிரொளி வந்தடைவதற்கும் இடையேயான காலதாமதம் 110.3 செகண்டுகள். நீரில் ஒலியின் வேகம் 1450 ms-1 எனில் நீர்முழ்கிக்கப்பலிலிருந்து எதிரிக் கப்பலுக்கான தொலைவினைக் கணக்கீடு.
x- அச்சுத் திசையில் இயங்கும் துகளளொன்றின் திசைவேகம் – நேரம் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க.
t = 5 வினாடி மற்றும் t = 20 வினாடியில் துகளின் முடுக்கத்தினைக் கணக்கிடவும்.
தொடுகோட்டு முடுக்கத்திற்கான சமன்பாட்டைத் தருவி.
இரு பரிமாண கார்டீசியன் ஆய அச்சுக் கூறுகளைக் கொண்டு \(\hat { i }\) மற்றும் \(\hat { j }\) ஓரலகு வெக்டர்களின் தொகுபயன் திசையினை வரைக. மேலும் \(\hat { i }\) + \(\hat { j }\) ஒரு ஓரலகு வெக்டரா என ஆராய்க.
100 மீட்டர் உயரமுடைய மூன்று மாடிக் கட்டிடம் புவி மற்றும் நிலவில் உள்ளது எனக் கருதுக. ஒரே நேரத்தில் இவ்விரண்டு கட்டிடங்களின் மேலிருந்து இரண்டு நபர்கள் குதிக்கிறார்கள் எனில், அவர்கள் தரையை அடையும் போது அவர்களின் வேகம் எவ்வளவு எனக் காண்க. (g = 10 m s-2)
மையவிலக்கு விசையைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சுருக்கமாக விளக்குக.
15m s-1 வேகத்தில் இயங்கும் 10 kg நிறையுடையபொருள் சுவர் மீது மோதி
அ) 0.03 s
ஆ) 10 s
ஆகிய நேர இடைவெளிகளில் ஓய்வுநிலையை அடைகிறது. இவ்விரண்டு நேர இடைவெளிகளிலும் பொருளின் கணத்தாக்கு மற்றும் பொருளின் மீது செயல்படும் சராசரி விசை ஆகியவற்றைக் காண்க.
உந்த மாறாவிதிக்கு ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பழம் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி பழத்தைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்.
திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையைத் தருவி .அதற்கு சில உதாரணங்கள் தருக
ஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின் திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி.
சுருள்வில்லின் விசை - இடப்பெயர்ச்சி சுருள்வில்லின் நிலை ஆற்றல் - இடப்பெயர்ச்சி வரைபடம் விளக்குக.
செங்குத்து வட்ட இயக்கத்தினை படத்துடன் சமன்பாடுகளுடன் விவரி.
AB,CD என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான O வில் இணைக்கப்பட்ட சட்டங்கள் படத்தில் காட்டியுள்ளவாறு தரையில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கம்பி D என்ற புள்ளியில் கட்டப்பட்டுள்ளது. கம்பியின் தனித்த முனை E யானது விசை \(\vec {F}\) இனால் இழுக்கப்படுகிறது. விசை உருவாக்கிய திருப்பு விசையின் எண் மதிப்பையும். திசையையும்,
(i) E, D, O மற்றும் B புள்ளிக்களைப் பொருத்து
(ii) DE, CD, AB மற்றும் BG அச்சுகளைப் பொறுத்து காண்க.
m நிறை கொண்ட துகளானது v என்ற மாறாத திசை வேகத்துடன் இயங்குகிறது. ஏதேனும் ஒரு புள்ளியைப் பொருத்து இயக்கம் முழுவதிலும் இதன் கோண உந்தம் மாறாதது எனக் காட்டுக.
ஒரு திண்மப் பொருள் இயங்கும்போது நிறைமையம் பொருளோடு சேர்ந்தே இயங்குகிறது என்பதை நிரூபி.
திருபுத்திரங்களின் தத்துவத்தை விவரி?
ஈர்ப்பு நிலை ஆற்றலுக்கான கோவையைத் தருவி.
உயரத்தை பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?
வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.
புவி நிலை துணைக்கோள் மற்றும் துருவத் துணைக்கோள்- விரிவாக விளக்குக.
1. திரவத்துளி 2. திரவக்குமிழி 3. காற்றுக்குமிழி ஆகியவற்றின் உள்ளே மிகையழுத்தத்திற்கான கோவையைத் தருவி.
நிறை மாறா நிலையின் அடிப்படையில் பாய்மம் ஒன்றின் ஓட்டத்திற்கான தொடர் மாறிலிச் சமன்பாட்டைத் தருவி.
இரு கோள வடிவ சோப்பு குமிழிகள் இணைகின்றன. V என்பது அவற்றிலுள்ள காற்றின் பருமனில் மாற்றம் A என்பது மொத்த பரப்பளவின் மாற்றம் எனில் 3PV + 4AT = 0 காட்டு . T என்பது பரப்பு இழுவிசை p என்பது வளி அழுத்தம்.
திரவத்தின் வெவ் வேறு மட்டங்களில் உள்ள மூலக்கூறுகளுக்கிடேயேயான விசைகள் பற்றி எழுதுக.
8 km தொலைவிலிருந்து மிதிவண்டியின் மூலம் பள்ளிக்கு வரும் மாணவியின், மிதிவண்டியின் சக்கரத்தின் காற்றழுத்தம் 27oC இல் 240 kPa. அம்மாணவி பள்ளியை அடைந்தவுடன் சக்கரத்தின் வெப்பநிலை 39oC எனில் சக்கரத்தின் காற்றழுத்தத்தின் மதிப்பினைக் காண்க.
வெப்பத்தின் இயந்திரச் சாமானத்தை விவாதிக்க ஜூலின் ஆய்வை விவரி.
பல்வேறு வெப்ப இயக்கவியல் நிகழ்வுகளின் வெப்பம்,வெப்பநிலை, அக ஆற்றல், அழுத்தம் எவ்வாறு இருக்கும் என அட்டவணைப்படுத்துக.
அக ஆற்றல் கோட்பாட்டினை எடுத்துக்காட்டு படத்துடன் விவரி.
அறை ஒன்றினுள் 3:1 விகிதத்தில் அக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் உள்ளன. அறையின் வெப்பநிலை 270C அக்ஸிஜன் (O2) மற்றும் ஹைட்ரஜன் (H2) இவற்றின் மூலக்கூறு நிறைகள் முறையே 32 g mol-1 மற்றும் 2 g mol-1 ஆகும். வாயு மாறிலி R = 8.32 J mol-1 K-1 எனில் பின்வருவனவற்றைக் கணக்கிடுக.
a) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இருமுடி மூலவேகம்.
b) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்.
c) ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலின் விகிதம்.
300 k வெப்பநிலை மற்றும் 1 வளி மண்டல அழுத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூலக்கூறு ஒன்று காற்றில் பயணிக்கிறது. ஆக்ஸிஜன் மூலக்கூறின் விட்டம் 1.2 × 10−10m எனில் அதன் சராசரி மோதலிடைத்தூரத்தைக் காண்க.
ஒரு காற்றுக் குமிழியின் பருமன் 1.0 cm3.இது 12oC வெப்பநிலையில் 40m ஆழத்திலிருந்து மேலே உயர்கிறது. 35oC வெப்ப நிலையில் பரப்பை அடையும் போது அதன் பருமன் யாது?
ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியையிடம் வெப்ப இயக்கவியலின் முதல் விதியை ஞாபகம் வைத்துக் கொள்ள எளிதாக வலி முறையை உதாரணம் அல்லது குறிப்புகள் தருமாறு ஒரு மாணவன் கேட்டான். ஆசிரியை 12ம் வகுப்பு பாடம் எடுக்கும் பொது [ஐன்ஸ்டீன் ஒளிமின் சமன்பாடு] திடீரென ஒரு யோசனை தோன்றியது. அது என்னவாக இருக்கும்?
(i) சுந்திர இயக்கக்கூறுகள் என்றால் என்ன?
(ii) ஓரணு மூலக்கூறின் Cp - Cv மற்றும் ⋎ விற்கான சமன்பாட்டைத் தருவி
U வடிவக்குழாயில் திரவ தம்பத்தின் அலைவுகளைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
தனி ஊசல் சோதனைகளில், தோராயமாக சிறிய கோணங்களை பயன்படுத்துவோம். இச்சிறிய கோணங்களை விவாதிக்க.
சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் சுருள்வில்லைனைத் தருவி.
ஒரு சுருள்வில் 10cm க்கு அமுக்கப்படுகிறது. அதன் திருப்புவிசை 10N உருவாகிறது. நிறையுள்ள பொருள் அதன் மீது 9 kg வைக்கப்படுகிறது. சுருள்விழின் விசை மாறிலி யாது? பொருளின் எடையினால் சுருள் வில்லில் ஏற்படும் தொய்வு யாது?பொருளானது சமநிலைப்புள்ளியிலிருந்து விளக்கப்பட்டால் அதன் அலைவுக்காலம் என்ன?
கீழ்க்கண்டவற்றுள் மேற்சுரங்கள் ஏற்படுவதை விளக்குக.
(a) மூடிய ஆர்கன் குழாய்
(b) திறந்த ஆர்கன் குழாய்
(c) ஒத்ததிர்வு காற்றுதாம்பா கருவி
மீட்சித் தன்மை கொண்ட ஊடகத்தில் நெட்டிலையின் திசைவேகத்தைத் தருவி.
ஆக்சிஜன், நைட்ரஜன் அடர்த்திகளின் தகவு 16:14 எந்த வெப்பநிலையில் ஆக்சிஜனில் செல்லும் ஒலியின் திசைவேகமானது,17o C இல் நைட்ரஜனில் செல்லும் ஒலியின் திசைவேகத்திற்கு சமமாகும்?
(a) 'ஸ்டெதஸ்கோப்பின்' பின்னணியில் உள்ள இயற்பியல் தத்துவம் யாது?
(b) ஒளியின் செறிவு மற்றும் ஒலி அலைகள் இவற்றை ஒரு குழந்தைக்கு புரியுமாறு எங்ஙனம் எடுதுரைப்பாய்?