" /> -->

09/05/2020 test GHSS,KARATHOLUVU

12th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

ANSWER ALL QUATIONS 


Time : 00:45:00 Hrs
Total Marks : 25

    PARD D

    5 x 5 = 25
  1. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  2. 25 .(b) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றம் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கண்டறியவும்.

    விவரம் தொடக்க இருப்பு ரூ. இறுதி இருப்பு ரூ.
    கடனாளிகள் 60,000 55,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 5,000 1,000
    கடனீந்தோர் 25,000 28,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 3,000
    பிற தகவல்கள் ரூ.
    கடளாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது 1,30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 5,500
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 70,000
    சரக்களித்தோர் வழங்கிய தள்ளுபடி 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குரிய ரொக்கம் செலுத்தியது 7,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கான ரொக்கம் பெற்றது 14,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 1,200
    வாராக்கடன் 3,500
  3. முழுமை பெறா பதிவேடுகளைளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  4. வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 31.12.2017
    ரூ.
    31.12.2018
    ரூ.
    நிலம் மற்றும் கட்டடம் 2,40,000 2,40,000
    சரக்கிருப்பு 1,20,000 1,70,000
    கடனாளிகள் 40,000 51,500
    கடனீந்தோர் 50,000 45,000
    வங்கி ரொக்கம் 30,000 53,000

     31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    கூலி 65,000
    வெளித் தூக்குக்கூலி 7,500
    பற்பல செலவுகள் 28,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 6,00,000
    எடுப்புகள் 10,000

    அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  5. திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.

      ரூ.
    வங்கி இருப்பு 8,000
    சரக்கிருப்பு  80,000
    பற்பல கடனாளிகள்  50,000
    அறைகலன்  2,500
    கை ரொக்கம்  2,000
    பற்பல கடனீந்தோர்  25,000
    கொடுபட வேண்டிய செலவுகள்  1,000

    அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 09/05/2020 test GHSS,KARATHOLUVU

Write your Comment