All Chapter 8 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 160
    Answer All The Following Question:
    20 x 8 = 160
  1. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
    \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
    எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
    f(5)

  2. சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
    \(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
    எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
    f (2) - f(4)

  3. ஒரு பூந்தோட்டத்தில் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21, மூன்றாம் வரிசையில் 19 என்றவாறு ரோஜாச் செடிகள் ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன?

  4. ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10எனில், 20வது உறுப்பைக் காண்.

  5. y = 2x- 3x - 5 - யின் வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி 2x- 4x - 6 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.

  6. கொடுக்கப்பட்ட இருபடிச் சமன்பாடுகளின் வரைபடம் வரைக. அவற்றின் தீர்வுகளின் தன்மையைக் கூறுக.
    x- 9 = 0

  7. ஒரு சதுரங்க அட்டையில் 64 சம அளவுள்ள சதுரங்கள் உள்ளன.ஒவ்வொரு சதுரத்தின் பரப்பு 6.25செ.மீ2,அந்த அட்டையைச் சுற்றி 2 செ.மீ அகலத்தில் ஓரம் வர்ணம் பூசப்பட்டுள்ளது எனில் சதுரங்க அட்டையின் ஒரு பக்க அளவைக் காண்.

  8. இரு அடுத்தடுத்த இயல் எண்களின் பெருக்கற்பலன் 20 எனில், அந்த எண்களைக் காண்.

  9. PQ = 6.8 செ.மீ, உச்சிக்கோணம் 50° மற்றும் உச்சிக்கோணத்தின் இரு சமவெட்டியானது அடிப்பக்கத்தை PD = 5.2 செ.மீ என D-யில் சந்திக்குமாறு அமையும் \(\Delta \)PQR வரைக.

  10. P ஐ மையமாகக் கொண்ட 3.4 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திற்கு R என்ற புள்ளியில் தொடுகோடு வரைக.

  11. படத்தில் O என்பது செவ்வகம் ABCD யில் உள்ளே உள்ள புள்ளி எனில், OB2 + OD2 = OA2 + OC2 என நிரூபிக்க.

  12. ㄥACD = 90° மற்றும் CD丄AB. \(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { AB }{ AD } \) என நிரூபிக்க.

  13. (-3, 2), (5, 4), (7, -6) மற்றும் (-5, -4) என்பன ஒரு நாற்கரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனை புள்ளிகள் எனில், நாற்கரத்தின் பரப்பு காண்க.

  14. A(2, 3), B(4, k) மற்றும் (6, -3) ஒரே நேர்க்கோட்டில் அமைவன எனில் k-யின் மதிப்பு காண்க.

  15. sin 3A =cos(A-26o),இங்கு 3A ஒரு குறுங்கோணம், A ன் மதிப்பைக் காண்க.

  16. ஒரு ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் ஒரு முனையிலிருந்து ஆற்றின் மறுகரையில் இறக்கக் கோணங்கள் முறையே 30o,45o எனில், ஆற்றின் அகலத்தை காண்.(பாலத்தின் உயரம் 3 மீ எனக் கொள்க)

  17. ஒரு உலோகக் கோளம் உருக்கப்பட்டு சிறிய கோளங்களை செய்யப்படுகிறது. ஒவ்வொரு சிறிய கோளத்தின் ஆரமும் பெரிய கோளத்தின் ஆரத்தில் நான்கில் 1 பங்கு எனில் எத்தனை சிறிய கோளங்கள் செய்ய முடியும்?

  18. ஒரு மர உருளையிலிருந்து இரண்டு அரைக்கோளங்கள் இரு முனைகளிருந்தும் குடைந்து எடுக்கப்படுகிறது. உருளையின் உயரம் 10 செ.மீ, ஆரம்  3.5செ.மீ எனில் அந்த உருவத்தின் மொத்த புறப்பரப்பு என்ன?

  19. குழு A  50 20 10 30 30
    குழு B  40 60 20 20 10

    எந்த குழு அதிக சீர்மைத்தன்மை கொண்டுள்ளது.

  20. ஒரு 52 சீட்டுக் கட்டிலிருந்து ஒரு ஸ்பேடு அல்லது ஒரு ஹார்ட் சீட்டு எடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு கணிதம் அனைத்துப்பாட எட்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 10th Standard Mathematics All Chapter Eight Marks Important Questions 2020 )

Write your Comment