All Chapter 1 Marks

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 92
    Answer All The Following Questions:
    92 x 1 = 92
  1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

    (a)

    பொருளின் எடை

    (b)

    கோளின் ஈர்ப்பு முடுக்கம்

    (c)

    பொருளின் நிறை

    (d)

    அ மற்றும் ஆ

  2. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

    (a)

    கணத்தாக்கு விசை

    (b)

    முடுக்கம்

    (c)

    விசை

    (d)

    விசை மாற்றவீதம்

  3. விசையின் செயல்பாட்டால் இயக்க நிலையிலுள்ள பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்

    (a)

    இயந்திரவியல்

    (b)

    நிலையியல்

    (c)

    இயங்கியல்

    (d)

    ஏதுமில்லை

  4. ஈர்ப்பு, காந்த மற்றும் மின் காந்த விசைகள் இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள்

    (a)

    தொடு விசை

    (b)

    தொடா விசை

    (c)

    சமன் செய்யப்பட்ட விசை

    (d)

    சீரற்ற விசை

  5. A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

    (a)

    (b)

    B

    (c)

    C

    (d)

    D

  6. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    நேர்க்குறி (அ) எதிர்க்குறி

    (d)

    சுழி

  7. லென்சின் குவியதொலைவின் தலைகீழ் மதிப்பு

    (a)

    உருப்பெருக்கம்

    (b)

    திறன்

    (c)

    முக்கிய குவியம்

    (d)

    ஏதுமில்லை

  8. இதனை அடையும் ஒளிக்கதிர்கள் ஒளிவிலகல் அடையச் செய்யப்பட்டு விழிலென்சின் திறன்மீது குவிக்கப்படுகிறது.

    (a)

    லென்சு

    (b)

    கார்னியா

    (c)

    ஐரிஸ்

    (d)

    பாவை

  9. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    சுழி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  10. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  11. ஒரு பொருளானது வெப்பப்படுத்தப்படும் போது நிகழ்வது

    (a)

    வெப்பநிலை உயர்வு

    (b)

    பொருளின் விரிவு

    (c)

    நிலையில் மாற்றம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  12. ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொறுத்து மாறுபடும்

    (a)

    நீளத்தை

    (b)

    வெப்பநிலைமானி

    (c)

    பொருளின் தன்மை மற்றும் நிறை

    (d)

    அ) மற்றும் ஆ)

  13. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

    (a)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

    (b)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

    (c)

    மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

    (d)

    மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

  14. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

    (a)

    சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

    (b)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

    (c)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

    (d)

    மின்விளக்கு மின்னேற்றமடையும்

  15. ஒரு பக்க இணைப்பில் 430,210,100 மதிப்புள்ள மூன்று மின்தடைகள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மின்தடை

    (a)

    0.017 ஓம்

    (b)

    58.82 ஓம்

    (c)

    58.82 ஓம்

    (d)

    ஏதுமில்லை

  16. 1 ஆம்பியர் என்பது

    (a)

    1 கூலும் x 1 விநாடி

    (b)

    1 கூலும் / 1 விநாடி

    (c)

    1 விநாடி/ 1 கூலும்

    (d)

    ஏதுமில்லை

  17. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.

    (a)

    330 மீவி-1

    (b)

    660 மீவி-1

    (c)

    156 மீவி-1

    (d)

    990 மீவி-1

  18. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

    (a)

    17 மீ 

    (b)

    20 மீ

    (c)

    25 மீ

    (d)

    50 மீ

  19. ஒலி அலைகள் 

    (a)

    நெட்டலைகள் 

    (b)

    குறுக்கலைகள் 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    இவற்றில் ஏதுமில்லை 

  20. இறுக்கங்கள் தளர்ச்சிகளாக மாறுவது 

    (a)

    அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு 

    (b)

    அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு 

    (c)

    நெட்டலைகள் திசை மாற்றம் 

    (d)

    ஏதுமில்லை 

  21. மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.

    (a)

    தூண்டப்பட்ட கதிரியக்கம் 

    (b)

    தன்னிச்சையான கதிரியக்கம்

    (c)

    செயற்கைக் கதிரியக்கம்

    (d)

    அ மற்றும் இ 

  22. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______ 

    (a)

    ரேடியோ அயோடின் 

    (b)

    ரேடியோ கார்பன் 

    (c)

    ரேடியோ கோபால்ட் 

    (d)

    ரேடியோ நிக்கல் 

  23. மீ மாறுநிலை(Super Critical mass) என்பது 

    (a)

    மாறுநிலை நிறை < பிளவுப் பொருட்களின் நிறை 

    (b)

    பிளவுப் பொருட்களின் நிறை = மாறுநிலை நிறை 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    பிளவுப்பொருட்களின் நிறை > மாறுநிலை நிறை 

  24. உட்கருவின் ஆற்றல் மட்டுமே மாற்றம் அடையும் சிதைவு 

    (a)

    பீட்டா சிதைவு

    (b)

    \(\alpha \) சிதைவு 

    (c)

    \(\gamma \)  சிதைவு 

    (d)

    மூன்றும் 

  25. 1 amu என்பது ____.

    (a)

    C - 12 ன் அணுநிறை 

    (b)

    ஹைட்ரஜனின் அணுநிறை 

    (c)

    ஒரு C - 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை 

    (d)

    O - 16 ன் அணு நிறை 

  26. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் ______.

    (a)

    11.2 லிட்டர் 

    (b)

    5.6 லிட்டர் 

    (c)

    22.4 லிட்டர் 

    (d)

    44.8 லிட்டர் 

  27. வேதி வினையில் ஈடுபடும் ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் 

    (a)

    அணு 

    (b)

    மூலக்கூறு 

    (c)

    மோல் 

    (d)

    அவகாட்ரோ மூலக்கூறு 

  28. C6H122 என்ற மூலக்கூறின் நிறை.

    (a)

    1.4 x 10-21கி 

    (b)

    1.09 x 10-21கி 

    (c)

    15.025 x 1023 கி 

    (d)

    16.023 x 1023 கி 

  29. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு _____.

    (a)

    ஆக்ஸிஜனேற்றி

    (b)

    ஆக்ஸிஜன் ஒடுக்கி

    (c)

    ஹைட்ரஜனேற்றி

    (d)

    சல்பர் ஏற்றி

  30. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _______ எனப்படும்.

    (a)

    வர்ணம் பூசுதல்

    (b)

    நாகமுலாமிடல்

    (c)

    மின்முலாம் பூசுதல்

    (d)

    மெல்லியதாக்கல்

  31. பொட்டாசியம்______ தொடரில் உள்ளது.

    (a)

    முதல் 

    (b)

    இரண்டாம் 

    (c)

    மூன்றாம் 

    (d)

    நான்காம் 

  32. பின்வருவனவற்றுள் எது ஆவர்த்தன பண்பு?

    (a)

    அயனியாக்கும் ஆற்றல் 

    (b)

    அணு ஆரம் 

    (c)

    எலக்ட்ரான் கவர்தன்மை 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  33. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது _______ கலவை.

    (a)

    ஒருபடித்தான

    (b)

    பலபடித்தான

    (c)

    ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

    (d)

    ஒருபடித்தானவை அல்லாதவை

  34. 25% ஆல்கஹால் கரைசல் என்பது ______.

    (a)

    100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (b)

    25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (c)

    75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

    (d)

    25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

  35. வெள்ளை விட்ரியால் எனப்படுவது

    (a)

    CaSO4.7H2O

    (b)

    MgSO4.7H2O

    (c)

    K2SO4.7H2O

    (d)

    ZnSO4.7H2O

  36. நீர் வெறுக்கும் சேர்மங்கள் ______________ ஆக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆக்சிஜனேற்றி 

    (b)

    ஒடுக்கி 

    (c)

    கார்பாக்சில் நீக்க கரணி

    (d)

    உலர்த்தி 

  37. ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.

    (a)

    வெப்பம்

    (b)

    மின்னாற்றல்

    (c)

    ஒளி

    (d)

    எந்திர ஆற்றல்

  38. X(S) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
    (i) Zn
    (ii) Ag
    (iii) Cu
    (iv) Mg
    சரியான இணையைத் தேர்ந்தெடு.

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (iv) 

  39. பட்டியல் I பட்டியல் II
    i. வெப்பச்சிதைவு  அ) 2AgBr ⇾ 2Ag + Br
    ii. ஒளிச்சிதைவு  ஆ) HNO3 + NH4OH ⇾ NH4NO3 + H2O
    iii. மின்னாற் சிதைவு  இ) 2HgO ⇾ 2Hg + O2
    iv. நடுநிலையாக்கல்  ஈ) 2NaCl ⇾ 2Na + Cl2
    (a)
    (i) (ii) (iii) (iv)
    4 1 2 3
    (b)
    (i) (ii) (iii) (iv)
    2 4 1 3
    (c)
    (i) (ii) (iii) (iv)
    3 1 4 2
    (d)
    (i) (ii) (iii) (iv)
    4 3 2 1
  40. அமிலத்தின் pH மதிப்பு 

    (a)

    7-ஐ விட குறைவு 

    (b)

    7-ஐ விட அதிகம் 

    (c)

    7-க்கு சமம் 

    (d)

    14-ஐ விட அதிகம்

  41. IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு______.

    (a)

    ஆல்

    (b)

    ஆயிக் அமிலம்

    (c)

    ஏல்

    (d)

    அல்

  42. பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?

    (a)

    C3H8 and C4H10

    (b)

    C2H2 and C2H4

    (c)

    CH4 and C3H6

    (d)

    C2H5OH and C4H8OH

  43. IUPAC விதிகளின்படி, கார்பாக்சிலிக் அமிலங்களின் இரண்டாம் நிலை பின்னொட்டு 

    (a)

    ஏல் 

    (b)

    ஆல் 

    (c)

    ஓன் 

    (d)

    ஆயிக் 

  44. அசிட்டால்டிஹைடின் வேதி வாய்ப்பாடு

    (a)

    CH3CHO

    (b)

    CH3CH2OH

    (c)

    CH3COOCH3

    (d)

    CH3-O-CH3

  45. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________பகுதியில் காணப்படுகிறது

    (a)

    புறணி

    (b)

    பித்

    (c)

    பெரிசைக்கிள்

    (d)

    அகத்தோல் 

  46. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.

    (a)

    ஆரப்போக்கு அமைப்பு

    (b)

    சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

    (c)

    ஒன்றிணைந்தவை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  47. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை ________ வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.

    (a)

    சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை 

    (b)

    ஒருங்கமைந்தவை 

    (c)

    ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை 

    (d)

    ஆரப்போக்கு அமைந்தவை 

  48. பசுங்கணிகங்கள் ஒரு _________ வடிவ செல் நுண்ணுறுப்பாகும் 

    (a)

    தட்டு 

    (b)

    சதுர 

    (c)

    நீள் உருண்டை 

    (d)

    வட்ட 

  49. அட்டையின் இடப்பெயர்ச்சி _____ மூலம் நடைபெறுகிறது.

    (a)

    முன் ஒட்டுறுப்பு

    (b)

    பக்க கால்கள்

    (c)

    சீட்டாக்கள் 

    (d)

    தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

  50. பாலூட்டிகள் _______ விலங்குகள்.

    (a)

    குளிர் இரத்த 

    (b)

    வெப்ப இரத்த

    (c)

    பாய்கிலோதெர்மிக்

    (d)

    இவை அனைத்தும் 

  51. அட்டைகளில் ___________ காணப்படுகின்றன. 

    (a)

    இதயம்

    (b)

    நுரையீரல்

    (c)

    உண்மையான இரத்தக் குழாய்கள்

    (d)

    கழிவு நீக்க உறுப்பு

  52. முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல  ________ ல் ஆக்கப்பட்டவை.

    (a)

    நியூரான்கள்

    (b)

    நெப்ரான்கள்

    (c)

    கார்டெக்ஸ்

    (d)

    எபிடைமிஸ் 

  53. மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

    (a)

    எண்டோகார்டியம்

    (b)

    எபிகார்டியம்

    (c)

    மையோகார்டியம்

    (d)

    மேற்கூறியவை அனைத்தும்

  54. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

    (a)

    பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

    (b)

    சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

    (c)

    நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

    (d)

    இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்

  55. ஊறுகாயில் உப்பு சேர்க்கப்படுவது  _________  காரணமே.

    (a)

    பரவல்

    (b)

    உயிரிமச் சுருக்கம்

    (c)

    உள்ளீர்த்தல்

    (d)

    கடத்தப்படுத்தல்

  56. இரத்தத்தின் _________ பிளாஸ்மா ஆகும்.

    (a)

    55%

    (b)

    44%

    (c)

    35%

    (d)

    50%

  57. அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை ______.

    (a)

    மூளை, தண்டு வடம், தசைகள்

    (b)

    உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம்

    (c)

    தசைகள், உணர்வேற்பி, மூளை

    (d)

    உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்

  58. ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?

    (a)

    முகுளம்

    (b)

    பெருமூளை

    (c)

    பான்ஸ்

    (d)

    ஹைபோதலாமஸ்

  59. நியூரோ கிளியா என்பவை  _________________ என்றும் அழைக்கப்படுகிறது.

    (a)

    நரம்பு நாரிழைகள் 

    (b)

    கிளியல் செல்கள்

    (c)

    நரம்பு செல் 

    (d)

    நியூரான் 

  60. _________________ ல் அதிகமான இரத்த நாளங்கள் காணப்படுகின்றன.

    (a)

    டியூரா மேட்டர்

    (b)

    மையலின் உறை 

    (c)

    பையா மேட்டர் 

    (d)

    அரக்னாய்டு உறை  

  61. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்_______.

    (a)

    சைட்டோகைனின்

    (b)

    ஆக்சின்

    (c)

    ஜிப்ரல்லின்

    (d)

    எத்திலின்

  62. அவினா முளைக்குருத்து உறை ஆய்வு _______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

    (a)

    டார்வின்

    (b)

    N ஸ்மித்

    (c)

    பால்

    (d)

    F.W வெண்ட்

  63. ______________  என்பது உடல் திசுக்களில் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது.

    (a)

    வளர்ச்சி ஹார்மோன் 

    (b)

    தைராய்டை தூண்டும் ஹார்மோன் 

    (c)

    அட்ரினோ கார்டிக்கோட்பிக் ஹார்மோன் 

    (d)

    கொனடோட்ராபிக் ஹார்மோன் 

  64. தைமஸ் சுரப்பி _________________ என்ற ஹார்மோனை சுரக்கிறது. 

    (a)

    தைமோசின் 

    (b)

    ஈஸ்ட்ரோஜன் 

    (c)

    டெஸ்ட்டோஸ்டிரோன் 

    (d)

    புரோஜெஸ்ட்ரான் 

  65. பாலிலா இனப்பெருக்க முறையான மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யும் உயிரினம் _______.

    (a)

    அமீபா

    (b)

    ஈஸ்ட்

    (c)

    பிளாஸ்மோடியம்

    (d)

    பாக்டீரியா

  66. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது _____.

    (a)

    பிட்யூட்டரியின் முன்கதுப்பு

    (b)

    முதன்மை பாலிக்கிள்கள்

    (c)

    கிராஃபியன் பாலிக்கிள்கள்

    (d)

    கார்பஸ் லூட்டியம்

  67. தூண்டாதல்  _________ ல் காணப்படுகிறது.

    (a)

    ஸ்பைரோகைரோ 

    (b)

    பிரையோபில்லம் 

    (c)

    ஈஸ்ட் 

    (d)

    ஹைட்ரா

  68. அண்ட சாதனமானது __________  பக்கவாட்டு செல்களைக் கொண்டுள்ளது.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  69. டி.என்.ஏ வின் முதுகெலும்பாக ______ உள்ளது.

    (a)

    டீ ஆக்ஸி ரைபோஸ் சர்க்கரை

    (b)

    பாஸ்பேட்

    (c)

    நைட்ரஜன் காரங்கள்

    (d)

    சர்க்கரை பாஸ்பேட்

  70. பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை  இழத்தல்________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    நான்மய நிலை

    (b)

    அன்யூபிளாய்டி

    (c)

    யூபிளாய்டி

    (d)

    பல பன்மய நிலை

  71. மனிதனில் ஒற்றை மய செல்களில்________ ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

    (a)

    44

    (b)

    46

    (c)

    23

    (d)

    22

  72. மனிதர்களின் ஓவ்வொரு செல்களிலும்________ ஜோடி குரோமோசோம்கள் காணப்படுகின்றன.

    (a)

    23

    (b)

    22

    (c)

    20

    (d)

    12

  73. "பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை" கோட்பாட்டை முன்மொழிந்தவர்.

    (a)

    சார்லஸ் டார்வின் 

    (b)

    எர்னஸ்ட் ஹெக்கல்

    (c)

    ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

    (d)

    கிரிகர் மெண்டல்

  74. தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை_______.

    (a)

    ரேடியோ கார்பன் முறை 

    (b)

    யுரேனியம் காரீய முறை 

    (c)

    பொட்டாசியம் ஆர்கான் முறை 

    (d)

    அ மற்றும் இ 

  75. உயிர் பிறப்புக் கோட்பாடு _________ அவர்களால் உருவாக்கப்பட்டது.

    (a)

    ஹால்டேன் 

    (b)

    பாஸ்டர் 

    (c)

    டார்வின் 

    (d)

    லாமார்க் 

  76. _________ என்பது எச்ச உறுப்பு அல்ல.

    (a)

    தண்டுவட எலும்பின் வால் பகுதி 

    (b)

    குடல்வால் 

    (c)

    அடர்த்தியான ரோமம் 

    (d)

    கண்ணிமைப் படலம் 

  77. DNA வை வெட்டப் பயன்படும் நொதி _______.

    (a)

    கத்தரிக்கோல் 

    (b)

    ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் 

    (c)

    கத்தி 

    (d)

    RNA நொதிகள் 

  78. rDNA என்பது ____.

    (a)

    ஊர்தி DNA 

    (b)

    வட்ட வடிவ DNA 

    (c)

    ஊர்தி DNA  மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை 

    (d)

    சாட்டிலைட் DNA 

  79. _________ வின் அதிக மகசூல் தரும் நெல்வகை பீட்டா.

    (a)

    சீனா 

    (b)

    மெக்ஸிகோ 

    (c)

    இந்தோனேஷியா 

    (d)

    சீனா 

  80. டி.என்.ஏ விரல் ரேகைத் தொழில் நுட்பம் முறையினை _________  என்பர் வடிவமைத்தார்?

    (a)

    டாக்டர் அயான் வில்மட் 

    (b)

    அலக் ஜெஃப்ரெ 

    (c)

    சாலமன் 

    (d)

    டாக்டர் நார்மன் 

  81. நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலைத் தாக்கும் புற்றுநோய் வகை 

    (a)

    கார்சினோமா 

    (b)

    சார்க்கோமா 

    (c)

    லுயூக்கேமியா

    (d)

    லிம்போமா 

  82. அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது 

    (a)

    ஞாபக மறதி 

    (b)

    கல்லீரல் சிதைவு 

    (c)

    மாயத் தோற்றம் 

    (d)

    மூளைச் செயல்பாடு குறைதல் 

  83. ______ இரத்த சர்க்கரை அளவு குறைப்பதில் உதவுகின்றது.

    (a)

    சர்க்கரைவள்ளி கிழங்கு

    (b)

    தக்காளி

    (c)

    பீட்ருட்

    (d)

    கரும்புச்சர்க்கரை

  84. எய்ட்ஸ் _____ மண்டலத்தினை பாதிக்கிறது.

    (a)

    சுற்றோட்ட

    (b)

    நரம்பு

    (c)

    நோய் தடைகாப்பு

    (d)

    செரிமான

  85. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?

    (a)

    கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.

    (b)

    கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்  

    (c)

    கழிவுகளை மறுசுழற்சி செய்தல் 

    (d)

    மேலே உள்ளவை அனைத்தும் 

  86. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது

    (a)

    காடுகள் அழிப்பு 

    (b)

    காடுகள்/மரம் வளர்ப்பு 

    (c)

    அதிகமாக வளர்த்தல் 

    (d)

    தாவரப் பரப்பு நீக்கம்

  87. உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்துதலில் ______ பெரிய நாடு இந்தியவாகும்.

    (a)

    நான்காவது

    (b)

    ஏழாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    இரண்டாவது

  88. நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியை விட அதிகமாக உள்ளதால் _____ நீரின் இயக்கத்தினால் கூட டர்பனை இயக்கி மின் உற்பத்தி செய்ய முடியும்.

    (a)

    மிக மெதுவான

    (b)

    வேகமாக

    (c)

    மெதுவாக

    (d)

    மிக வேகமாக

  89. அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது?

    (a)

    Paint

    (b)

    PDF

    (c)

    MS Word

    (d)

    Scratch

  90. நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது?

    (a)

    Script area

    (b)

    Block palette

    (c)

    Stage

    (d)

    Sprite

  91. பிளாக்குகளைத் தேர்வு செய்ய பயன்படுவது _________ஆகும்.

    (a)

    ஸ்டேஜ் 

    (b)

    ஸ்கிரிப்ட்

    (c)

    Block Pallete

    (d)

    ஸ்கிரிப்ட் எடிட்டர்

  92. பல கோப்புகளை உள்ளடக்கிய பெட்டகம் _________ஆகும். 

    (a)

    ஸ்கிரிப்ட் எடிட்டர்

    (b)

    பெயிண்டு

    (c)

    நோட்பேடு

    (d)

    கோப்புத் தொகுப்பு 

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஒருமதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 (10th Standard Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment