Term 1 புள்ளியியலும் நிகழ்தகவும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. தரவின் சராசரியானது 25.6 மற்றும் அதன் மாறுபாட்டுக் கெழுவானது, 18.75 எனில், அதன் திட்ட விலகத்தைக் காண்க.

  2. பின்வரும் அட்டவணையில் ஒரு பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் உயரம் மற்றும் எடைகளின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி ஆகிய மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

      உயரம்  எடை 
    சராசரி  155 செ.மீ  46.50 கி.கி 
    விலக்க வர்க்கச் சராசரி  72.25 செ.மீ2 28.09 கி.கி2 

    இவற்றில் எது அதிக நிலைப்புத் தன்மை உடையது?

  3. ஒரு குடும்பத்தில் குறிப்பிட்ட வாரத்தில் உட்கொள்ளப்பட்ட கொய்யா மற்றும் ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    கொய்யாப் பழங்களின் எண்ணிக்கை  3 5 6 4 3 5 4
    ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை  1 3 7 9 2 6 2

    இங்கு, எந்த பழம் சீராக எடுத்துக்கொள்ளப்பட்டது?

  4. P(A) = 0.37, P(B) = 0.42, P(A\(\cap\)B) = 0.09 எனில், P(A\(\cup\)B) ஐக் காண்க.

  5. நன்கு கலைத்து அடுக்கப்பட்ட 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது ஓர் இராசா அல்லது ஓர் இராணி கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?

  6. இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?

  7. A மற்றும் B ஆகியவை P(A) = \(\frac{1}{4}\), P(B) = \(\frac{1}{2}\) மற்றும் P(A மற்றும் B) =\(\frac{1}{8}\) என இருக்குமாறு அமையும் இரண்டு நிகழ்ச்சிகள் எனில், பின்வருவனவற்றைக் காண்க.
    i) P(A அல்லது B)
    ii) P(A-ம் இல்லை மற்றும் B-ம் இல்லை)

  8. 52 சீட்டுகள் கொண்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்படுகின்றது அந்தச் சீட்டு இராசா அல்லது ஹார்ட் அல்லது சிவப்பு நிறச் சீட்டாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  9. 50 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில், 28 பேர் NCC-யிலும், 30 பேர் NSS-லும் மற்றும் 18 பேர் NCC மற்றும் NSS-லும் சேர்கிறார்கள். ஒரு மாணவர் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர்
    (i) NCC -யில் இருந்து, ஆனால் NSS-ல் இல்லாமல்
    (ii) NSS -ல் இருந்து, ஆனால் NCC-யில் இல்லாமல்
    (iii) ஒன்றே ஒன்றில் மட்டும் சேர்ந்து இருப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.

  10. A மற்றும் B ஆகிய இரு விண்ணப்பதாரர்கள் IIT -யில் சேர்வதற்காகக் காத்திருப்பவர்கள். இவர்களில் A தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.5, A மற்றும் B இருவரும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிகழ்தகவு 0.3 எனில், B தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அதிகபட்ச நிகழ்தகவு 0.8 என நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 10th கணிதம் Term 1 புள்ளியியலும் நிகழ்தகவும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 10th Maths - Term 1 Statistics And Probability Five Marks Questions )

Write your Comment