Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    15 x 4 = 60
  1. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

  2. ஒரு பொருளானது ஒரு லென்சிலிருந்து 50 செ.மீ ல் வைக்கப்படும்போது லென்சிற்கு முன்னால் 10செ.மீ தொலைவில் மாய பிம்பம் உருவாகிறது. லென்சின் குவியதூரம் யாது? இது விரிக்கும் லென்சா? குவிக்கும் லென்சா?

  3. வெப்ப சமநிலை என்றால் என்ன?

  4. ஒரு மின்சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது 420 வாட் மின்திறனை நுகர்கிறது. குறைந்த பட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 180 வாட் மின் திறனை நுகர்கிறது. அதற்கு 220 வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவுகளை கணக்கிடு.

  5. ஒரு 6A மின்னோட்டம் உலோகக் கம்பியின் வழியாக பாய்கிறது. 2 நிமிடங்கள் மின்னோட்டம் பாய்ந்தால் ஏற்படும் மின்சுமை யாது?

  6. X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது -காரணங்களை எழுதுக.

  7. கார்பன்டை ஆக்சைடின் (CO2) கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.

  8. ’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.

  9. ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?

  10. அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்ற போது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும் ?

  11. இருப்பால் தன்மை கொண்ட மலர்களில் உள்ள மகரந்தத்தினை நீக்கிவிட்டால் அந்த மலரால் விதைகளை உருவாக்க முடியுமா?

  12. சடுதி மாற்றம் வரையறு.

  13. ராதா நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். மருத்துவர் அவளை மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.ஷீலாவும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரே.மருத்துவர் ஷீலாவை இன்சுலின் ஊசியினை தினமும் போட வேண்டும் என கூறினார். மருத்துவர்கள் செய்தது சரியா? நீ என்ன நினைக்கிறாய்.

  14. உயிர் சிதைவடையும் பொருட்களினால் சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுமா? காரணம் கூறு.

  15. கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் - Full Portion நான்கு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 10th Science - Full Portion Four Marks Question Paper )

Write your Comment