அரையாண்டு மாதிரி வினாத்தாள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    12 x 1 = 12
  1. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    (a)

    4M

    (b)

    2M

    (c)

    M/4

    (d)

    M

  2. வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால் 

    (a)

    உண்மை வெப்ப விரிவு

    (b)

    பரப்பு வெப்ப விரிவு

    (c)

    பரும வெப்ப விரிவு

    (d)

    உண்மை வெப்ப விரிவு

  3. ஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் (\(\lambda \)) ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு யாது?

    (a)

    \(\lambda =\lambda \)

    (b)

    \(\lambda >\lambda \)

    (c)

    \(\lambda <\lambda \)

    (d)

    ஏதுமில்லை 

  4. நியூக்ளியான்கள் என்பவை 

    (a)

    அணுக்கள் 

    (b)

    எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்கள் 

    (c)

    எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்கள் 

    (d)

    புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் 

  5. இருமடிக் கரைசலில் உள்ள பகுதிப் பொருட்கள்

    (a)

    ஒன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    மூன்று 

    (d)

    நான்கு 

  6. X(S) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
    (i) Zn
    (ii) Ag
    (iii) Cu
    (iv) Mg
    சரியான இணையைத் தேர்ந்தெடு.

    (a)

    (i) மற்றும் (ii)

    (b)

    (ii) மற்றும் (iii)

    (c)

    (iii) மற்றும் (iv)

    (d)

    (i) மற்றும் (iv) 

  7. பின்வருவனவற்றுள் கீடோனை கண்டுபிடி.

    (a)

    CH3COCH3

    (b)

    CH3CHO

    (c)

    CH3COOH

    (d)

    CH3COOCH3

  8. ஊறுகாயில் உப்பு சேர்க்கப்படுவது  _________  காரணமே.

    (a)

    பரவல்

    (b)

    உயிரிமச் சுருக்கம்

    (c)

    உள்ளீர்த்தல்

    (d)

    கடத்தப்படுத்தல்

  9. மனித உடலின் மிக நீளமான செல் _________________ ஆகும்.

    (a)

    நியூரான் 

    (b)

    நியூரோகிளியா 

    (c)

    நரம்பு நாரிழைகள்

    (d)

    சைட்டான் 

  10. குழந்தை வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரத்தல் காரணமாக ______________ வளர்ச்சி அடைவார்கள்.

    (a)

    குள்ளத்தன்மை 

    (b)

    அக்ரோமெகலி 

    (c)

    அசுரத்தன்மை 

    (d)

    மிக்ஸிடிமா 

  11. காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு _______ ஆகும்.

    (a)

    1952

    (b)

    1958

    (c)

    1978

    (d)

    1980

  12. ஸ்கிராச்சு திருத்தியில் உள்ள பகுதிகள் எத்தனை?

    (a)

    4

    (b)

    2

    (c)

    3

    (d)

    1

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. வரையறு ஓரலகு விசை.

  15. நுண்நோக்கிகள் என்றால் என்ன?அவற்றின் வகைகள் யாவை?

  16. கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.

  17. கீழ்க்கண்ட மூலக்கூறுகளின் இருந்து வேற்றணு மூலக்கூறுகளை கண்டறிந்து அவற்றை அணுக்கட்டு எண்களின்படி வகைப்படுத்துக.
    C6H12O6,P4,NH3,HCl,N2,CO,O3,NH4Cl,CaCO3,O2,SO2

  18. மும்மடிக்கரைசல் என்றால் என்ன?

  19. பின்வருவனவற்றுள் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா இரட்டை, முப்பிணைப்பு கொண்ட சேர்மங்களை குறிப்பிடு.
    (i) C5H12
    (ii) C2H2
    (iii) C3H8
    (iv) C4H

  20. EEG என்றால் என்ன?

  21. மாலாவின் கன்னத்தில் மிகப்பெரிய வடு ஒன்று காணப்பட்டது. அது தன்னுடைய கல்லூரி நாட்களில் அவள் ஒரு தீவிபத்தினை சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்டது. மேலும் தன் கன்னத்திலும் வடுவினை நினைத்து வருத்தப்பட்டாள். மேலும் அவள் தன்னுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாள். மருத்துவரும், ''தாங்கள் இந்தவிடுவினை நினைத்து வருத்தப்பட வேண்டாம். இது பெறப்பட்ட பண்பாகும்.'' எனக் கூறி அனுப்பி விட்டார்.
    (அ) பெறப்பட்ட பண்பு என்றல் என்ன?
    (ஆ) மரபுப் பண்பு என்றால் என்ன?

  22. நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு உணவுப்பொருள்களுக்கு உதாரணம் தருக.

  23. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

  24. பகுதி - III

    ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    7 x 4 = 28
  25. காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்குவெட்டு பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையை கணக்கிடுக. (காப்பரின் பரப்புவெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)

  26. சமன்பாட்டினை சமன் செய் 
    \(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+?\)

  27. கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
    CaCO3 ➝ CaO + CO2
    அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
    ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறுநிறையைக் கணக்கிடு.
    இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது. 

  28. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
    b. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
    c. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

  29. விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?

  30. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.


  31. அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
    ஆ] அதன் வகைகளைக் கூறு.
    இ] உதாரணம் தருக.

  32. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  33. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?

  34. "நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகளாகும்." இக்கூற்றினை நியாயப்படுத்து. மேலும் செயல் ஒத்த உறுப்புகள் எவ்வாறு காணப்படுகிறது?

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    3 x 7 = 21
    1. சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.

    2. மூளையின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் அட்டவணைப்படுத்து.

    1. நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொகுதிகளின்  சிறப்பம்சங்களை எழுது.

    2. அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

    1.  கிட்டப்பார்வை [அல்லது] மையோபியா குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.

    2. ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 10th Science Half Yearly Model Question Paper )

Write your Comment