Term 1 இயக்க விதிகள் நான்கு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசைகொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?

  2. 1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.

  3. இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?

  4. இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2:5, அவைகளின் ஆர விகிதம் முறையே 4:7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தை கணக்கிடுக.

  5. 8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள் வழவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன எனில், 2 கிகி நிறையுடை பொருள் பெரும் விசையினை கணக்கிடுக.

  6. கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தை கணக்கிடுக.

  7. பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாப்படுத்துக.

  8. 2 கிகி நிறையுள்ள ஒரு பொருள் 40 ms-1 சீரான திசைவேகத்தில் ஓய்வில் உள்ள மற்றொரு பொருள் மீது மோதுகிறது. இருபொருள்களும் 20 ms-1 திசைவேகத்தில் சேர்ந்து நகர்கின்றன. மற்றொரு பொருளின் நிறையைக் காண்க.

  9. 10 kg எடையுள்ள விசையானது 2 விநாடிகளுக்கு ஒரு நிறையுள்ள பொருள்மீது செயல்படுகிறது. திசைவேகம் 10 ms-1 ஐக் கொடுக்கிறது. எனில் பொருளின் நிறையை கிகி-ல் கூறு. [g =9.8 ms-1]

  10. 2000 கிகி உடைய ஒரு மகிழ்வுந்து 20 ms-1 ல் பயணம் செய்கிறது. அது கான்கீரிட் சுவரில் மோதி 0.05 வினாடிகளில் தாக்குகிறது. மகிழ்வுந்தின் மீது செலுத்தப்பட்ட கணத்தாக்கின் அளவு யாது?

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Term 1 இயக்க விதிகள் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 Laws Of Motion Four Marks Questions )

Write your Comment