GEO - வேளாண்மைக் கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. _____ என்பது ஒரு வாணிபப்பயிர்

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    அரிசி

    (d)

    மக்காச் சோளம்

  2. கரிசல் மண் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    வறண்ட மண் 

    (b)

    உவர் மண் 

    (c)

    மலை மண் 

    (d)

    பருத்தி மண்

  3. இந்தியாவில் தங்க இழைப் பயிர் என அழைக்கப்படுவது______.

    (a)

    பருத்தி

    (b)

    கோதுமை 

    (c)

    சணல் 

    (d)

    புகையிலை 

  4. காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

    (a)

    மேற்கு வங்கம்

    (b)

    கர்நாடகா 

    (c)

    ஓடிசா 

    (d)

    பஞ்சாப்

  5. _______ ஆம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது.

    (a)

    1950

    (b)

    1952

    (c)

    1953

    (d)

    1951

  6. _______ வேளாண்மை பழங்குடி இன மக்களால் காடுகளில் ஒரு சிறிய பகுதியிலுள்ள மரங்களை அகற்றி சாகுபடி செய்யப்படுகிறது.

    (a)

    வறண்ட நில 

    (b)

    இடப்பெயர்வு 

    (c)

    தீவிர 

    (d)

    படிக்கட்டு முறை 

  7. கம்பு ________ ஐ பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிராகும்.

    (a)

    ஆசியா 

    (b)

    ஆப்பிரிக்கா 

    (c)

    ஐரோப்பா 

    (d)

    அமெரிக்கா 

  8. 4 x 2 = 8
  9. ’மண்’ – வரையறு.

  10. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன?

  11. கால்நடைகள் என்றால் என்ன?

  12. மண் சீரழிவு என்றால் என்ன?

  13. 5 x 1 = 5
  14. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்

  15. (1)

    மகாநதி 

  16. காபி

  17. (2)

    தங்கப் புரட்சி

  18. டெகிரி அணை

  19. (3)

    இந்தியாவின் உயரமான அணை

  20. ஹிராகுட் 

  21. (4)

    உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார்

  22. தோட்டக்கலை 

  23. (5)

    கர்நாடகா 

    2 x 2 = 4
  24. ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்

  25. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

  26. 2 x 1 = 2
  27. கூற்று : பழங்கள் காய்வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.
    காரணம் : உலகளவில் இந்தியா மா, வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு, காரணம் சரி

  28. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.
    காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்
    அ) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்
    ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல
    இ) கூற்று சரி, காரணம் தவறு
    ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

  29. 2 x 2 = 4
  30. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
    அ) காதர்
    ஆ) பாங்கர்
    இ) வண்டல் மண்
    ஈ) கரிசல் மண்

  31. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்
    அ) வெள்ளப் பெருக்கு கால்வாய்
    ஆ) வற்றாத கால்வாய்
    இ) ஏரிப்பாசனம்
    ஈ) கால்வாய்

  32. 2 x 5 = 10
  33. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரிக்கவும்.

  34. பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

  35. 1 x 10 = 10
  36. 1. வண்டல் மண் அதிகம் காணப்படும் பகுதிகளைக் குறிப்பிடுக.
    2. கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.
    3. சணல் விளையும் பகுதிகளைக் குறிக்கவும்.
    4. காபி மற்றும் தேயிலை விளையும் பகுதிகள் ஏதேனும் மூன்றை குறிக்கவும்.
    5. பாலை மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - GEO - வேளாண்மைக் கூறுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Social Science - GEO - Components of Agriculture Model Question Paper )

Write your Comment