பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 100

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    14 x 1 = 14
  1. எவ்விடத்தில் எத்தியயோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?

    (a)

    டெல்வில்லி

    (b)

    ஆரஞ்சு நாடு

    (c)

    அடோவா

    (d)

    அல்ஜியர்ஸ்

  2. சென்டோ (CENTO) என்பது

    (a)

    மணிலா ஒப்பந்தம்

    (b)

    பாக்தாத் ஒப்பந்தம்

    (c)

    வார்சா ஒப்பந்தம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  3. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

    (a)

    1827

    (b)

    1829

    (c)

    1826

    (d)

    1927

  4. ______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.

    (a)

    அயன மண்டல இலையுதிர் காடுகள் 

    (b)

    அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் 

    (c)

    முட்புதர்க் காடுகள் 

    (d)

    மலைக் காடுகள் 

  5. கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் அசாம் மாநிலத்தில் _____ குஜராத்தில் உள்ள _______ இணைக்கின்றது.

    (a)

    கவுஹாத்தி, பரோடா 

    (b)

    சில்சர், போர்பந்தர் 

    (c)

    திஸ்பூர், அகமதாபாத் 

    (d)

    திக்பாய், சூரத் 

  6. ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

    (a)

    குடியரசுத் தலைவர் 

    (b)

    ஆளுநர் 

    (c)

    முதலமைச்சர் 

    (d)

    சட்டமன்ற சபாநாயகர் 

  7. ________ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் 6 வது இடத்தில் உள்ளது.

    (a)

    அமெரிக்கா 

    (b)

    ஜப்பான் 

    (c)

    இந்தியா 

    (d)

    பாகிஸ்தான் 

  8. திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

    (a)

    மருது சகோதரர்கள்

    (b)

    பூலித்தேவர்

    (c)

    வீரபாண்டிய கட்டபொம்மன்

    (d)

    கோபால நாயக்கர்

  9. ரௌலட் சட்டம் இயற்றபட்ட ஆண்டு _____ 

    (a)

    1914

    (b)

    1918

    (c)

    1919

    (d)

    1927

  10. தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்விழ்ச்சியின் பெயர் _________.

    (a)

    ஒகேனக்கல் 

    (b)

    ஆகாய கங்கை 

    (c)

    குற்றாலம் 

    (d)

    சுருளி 

  11. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

    (a)

    இந்தியா மற்றும் நேபாளம்

    (b)

    இந்தியா மற்றும் பாகிஸ்தான்

    (c)

    இந்தியா மற்றும் சீனா

    (d)

    இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

  12. பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் சீனாவில் ______ நகரில் அமைந்துள்ளது.

    (a)

    மும்பை 

    (b)

    டோக்கியா  

    (c)

    ஷாங்காய் 

    (d)

    மாஸ்கோ 

  13. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

    (a)

    மதிப்புக் கூட்டு வரி (VAT)

    (b)

    வருமான வரி

    (c)

    பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

    (d)

    விற்பனை வரி

  14. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது _____.

    (a)

    தூத்துக்குடி

    (b)

    கோயம்புத்தூர்

    (c)

    சென்னை

    (d)

    மதுரை

  15. பகுதி - II

    எவையேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    10 x 2 = 20
  16. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

  17. நெல்சன் மண்டேலா பற்றி விவரித்து எழுதவும்

  18. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  19. Dr. அன்னிபெசண்டின் பங்களிப்பு சிறுகுறிப்பு வரைக (அ) இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் அன்னிபெசன்டின் பங்களிப்பு யாது? 

  20. நீதிபதிகளின் நியமனம் குறித்து சில வரிகளில் எழுதுக.

  21. ஆட்கொணர் பேராணை என்றால் என்ன?

  22. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

  23. TRIPs மற்றும் TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.

  24. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

  25. சேரன்மாதேவி குருகுலம் குறித்த கருத்துமாறுபாடு என்ன?

  26. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் முக்கிய மலைகள் யாவை?

  27. அணிசேரா இயக்கம் என்றால் என்ன?

  28. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  29. சிறுகுறிப்பு தருக.
    1. நுகர்வோர் பொருட்கள்
    2. மூலதன பொருட்கள்

  30. பகுதி - III

    ஏதேனும் 10 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 42க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    10 x 5 = 50
  31. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

  32. இந்திய காலநிலையை பாதிக்கும் ஏதேனும் இரண்டு காரணிகளைப் பற்றி விவரிக்கவும்.

  33. இந்திய மண் வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரிக்கவும்.

  34. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் - விவரிக்க.

  35. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக

  36. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உள்ள குறைபாடுகளை விளக்குக.

  37. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?

  38. 1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.(அ) 1857 பெருங்கலகம் தோல்வியடைய காரணங்களை ஆராய்க.

  39. சுயராஜ்யக் கட்சியைப் பற்றி விரிவாக எழுதுக.

  40. தமிழ்நாட்டின் தோட்ட வேளாண்மை பற்றி விளக்குக.

  41. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றி எழுதுக.

  42. கருப்பு பணம் என்றால் என்ன ? அதற்கான காரணங்களை எழுதுக

  43. வரிவிதிப்புக் கொள்கைகளை விவரி.

  44. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    2 x 8 = 16
    1. ஸ்டாலின் கிரேடு போர்
      அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போது தாக்கியது?
      ஆ) ஸ்டாலின் கிரேடின் முக்கிய உற்பத்திப் பொருள்கள் யாவை?
      இ) ஸ்டாலின் கிரேடைத் தாக்குவதற்கு ஹிட்லர் தீட்டிய திட்டத்தின் பெயரென்ன?
      ஈ) ஸ்டாலின் கிரேடு போரின் முக்கியத்துவமென்ன?

    2. தியோபந்த் இயக்கம்
      அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
      ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் யாவை ?
      இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
      ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கல்  சமய ஆணையைப் பிறப்பித்தனர்?

    1. இந்தோ-சீனாவின் காலனிய எதிப்புப் போராட்டம்
      அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
      ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
      இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
      ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?

    2. பெர்லின் அவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
      அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
      ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றார்?
      இ) 1961 ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
      ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 10th சமூக அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 10th Social Science - Model Question Paper 2019 - 2020 )

Write your Comment