Important Questions Part-IV

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 175

    Section - I

    10 x 1 = 10
  1. நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

    (a)

    50% குறையும்

    (b)

    50% அதிகரிக்கும்

    (c)

    25% குறையும்

    (d)

    300% அதிகரிக்கும்

  2. ஒரு முடுக்குவிக்கப்பட்ட இயக்கத்தில் நேர்க்கோட்டு பாதையில் இயங்கும் ஒரு பொருளுக்கு பின்வரும் கூற்றில் எது பொருந்தாது?

    (a)

    அதன் வேகம் மாறிக்கொண்டே இருக்கும்

    (b)

    அதன் திசைவேகம் எப்போதும் மாறும்

    (c)

    எப்போதும் புவியிலிருந்து வெளியே செல்லும்

    (d)

    ஒரு விசை எப்போதும் அதன் மீது செயல்படும்

  3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    (a)

    விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (b)

    குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    (c)

    இணைக் கற்றைகளை உருவாக்கும்

    (d)

    நிறக் கற்றைகளை உருவாக்கும்.

  4. குவி லென்சு என்பவை ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிப்பதால் இவை ____ 

    (a)

    விரிக்கும் லென்சு

    (b)

    குவிக்கும் லென்சு

    (c)

    தட்டக் குவிலென்சு

    (d)

    தட்டக்குழிலென்சு

  5. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    சுழி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்ப விரிவு இதில் குறைவானது

    (a)

    திடப் பொருள்

    (b)

    திரவப் பொருள்

    (c)

    வாயு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. மின்தடையின் SI அலகு ______.

    (a)

    மோ 

    (b)

    ஜூல்

    (c)

    ஓம் 

    (d)

    ஓம் மீட்டர் 

  8. ஒரு மின்சுற்றில் எப்பொழுது மின்னோட்டம் பாயும்?

    (a)

    ஒரு சுவிட்சு மூடப்படும்போது

    (b)

    ஒரு சுவிட்சு திறந்திருக்கும்போது

    (c)

    சுவிட்சு  முடியும் திறந்தும் இருக்கும்போது

    (d)

    ஏதுமில்லை

  9. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

    (a)

    330 மீவி-1

    (b)

    165 மீவி-1

    (c)

    330 x \(\sqrt{2}\) மீவி-1

    (d)

    320 x \(\sqrt{2}\) மீவி-1

  10. ஒளி அலைகள் 

    (a)

    குறுக்கலைகள் 

    (b)

    பரவ ஊடகம் தேவை 

    (c)

    அ மற்றும் ஆ 

    (d)

    340 மீவி-1 திசைவேகம் 

  11. Section - II

    10 x 2 = 20
  12. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?

  13. பொருள் எப்பொழுது 'ஓய்வு' அல்லது இயக்கத்தில் உள்ளது எனலாம்?

  14. போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

  15. கூட்டு நுண்ணோக்கியில் இரண்டு லென்சுகள் பயன்படுத்த காரணம் யாது?

  16. நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக

  17. பரும வெப்ப விரிவு என்பது யாது?

  18. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?

  19. கடத்தி-காப்பான் -வேறுபடுத்துக. 

  20. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

  21. எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.

  22. Section - III

    10 x 4 = 40
  23. இயந்திரப் பணியாளர் ஒருவர் 40 cm கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?

  24. 50 kg மற்றும் 10 kg எடைகள் கொண்ட இரு பொருள்கள் 10 மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையேயான புவி ஈர்ப்பு விசையைக் கணக்கிடுக. மேலும் அதன் தொலைவு 100% அதிகரிக்கப்படுமானால் விசையின் மாற்றத்தில் ஏற்படும் விழுக்காடு யாது? [புதியவிசை, தொடக்க விசையிலிருந்து 75% குறைவு] 

  25. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

  26. லென்சின் திறன் வரையறு. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  27. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  28. நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.

  29. ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு.

  30. கொடுக்கப்பட்ட மின்சுற்றுப் படத்திலிருந்து (i) தொகுபயன் மின்தடை, (ii) சூரின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டம், (iii) ஒவ்வொரு மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம், (iv) மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம், (v) ஒவ்வொரு மின்தடையாலும் ஆற்றல் பயனீடு இவற்றை காண்.

  31. இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 460C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (V0 = 331 மீவி-1 )

  32. கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?

  33. Section - IV

    10 x 7 = 70
  34. பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.

  35. மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.

  36. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

  37. தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்ய்யப்படுகிறது? படத்துடன் விவரி.

  38. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  39. வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.

  40. அ) மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிடமுடியும்? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?

  41. பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.

  42. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

  43. ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.

  44. Section - V

    5 x 7 = 35
  45. 5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.

  46. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்படவேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?

  47. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

  48. 1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.

  49. 500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 10th Standard Science  Tamil Medium Important Questions 2019-2020 )

Write your Comment