Important Questions Part-V

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 175

    Section - I

    10 x 1 = 10
  1. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    (a)

    4M

    (b)

    2M

    (c)

    M/4

    (d)

    M

  2. புவியை நோக்கிப் பொருள்கள் விழும் இயக்கம்

    (a)

    புவிஈர்ப்பு சுழற்சி

    (b)

    எடையற்ற நிறை

    (c)

    புவி ஈர்ப்பு முடுக்கம்

    (d)

    புவி ஈர்ப்பு விசை

  3. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

    (a)

    குவி லென்சு

    (b)

    குழி லென்சு

    (c)

    குவி ஆடி 

    (d)

    இரு குவிய லென்சு

  4. முக்கிய அச்சு லென்சின் பரப்பினை சந்திக்கும் புள்ளி

    (a)

    வளைவு ஆரம்

    (b)

    வளைவு மையம்

    (c)

    குவிய தூரம்

    (d)

    துருவம்

  5. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

    (a)

    A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C

    (b)

    A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C

    (c)

    A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C

    (d)

    A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C

  6. வாயுக்களின் அடிப்படை விதிகள்

    (a)

    பாயில் விதி

    (b)

    சார்லஸ் விதி

    (c)

    அவகேட்ரோ விதி

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

    (a)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

    (b)

    மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

    (c)

    மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

    (d)

    மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

  8. ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது

    (a)

    மின்தடை குறைகிறது

    (b)

    மின்னோட்டம் உயர்கிறது

    (c)

    மின்னோட்டம் மாறாது

    (d)

    மின்னோட்டம் குறைகிறது

  9. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

    (a)

    330 மீவி-1

    (b)

    165 மீவி-1

    (c)

    330 x \(\sqrt{2}\) மீவி-1

    (d)

    320 x \(\sqrt{2}\) மீவி-1

  10. அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு நிகழ்வில் 

    (a)

    இறுக்கங்கள்,இறுக்கங்களாகவே எதிரொலிக்கும் 

    (b)

    தளர்ச்சிகள்,இறுக்கங்களாக மாறும் 

    (c)

    இறுக்கங்களின் திசை மாறாது 

    (d)

    இவையனைத்தும் 

  11. Section - II

    10 x 2 = 20
  12. 5N மற்றும் 15 N விசை மதிப்புடைய இரு விசைகள் எதிரெதிர் திசையில் ஒரே நேரத்தில் பொருள் மீது செயல்படுகின்றன. இவைகளின் தொகுபயன் விசை மதிப்பு யாது? எத்திசையில் அது செயல்படும்?

  13. ஒரு மின் தூக்கி ஓய்வு நிலையில் உள்ளபோது, உள்ளே இருக்கும் ஒரு நபரின் எடை 50 N. மின்தூக்கி மேலே உயரும்போது அவர் உணரும் எடையின் அளவு யாது? [முடுக்கம் =9.8 ms-2]

  14. விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?

  15. ராலே ஒளிச்சிதறல் என்றால் என்ன?

  16. பாயில் விதியைக் கூறுக.

  17. பரப்பு வெப்ப விரிவு என்பது யாது?

  18. மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் இரண்டு மின்சாதனங்கள் பெயரினை கூறு.

  19. LED பயன்படும் சில சாதனங்களைக் கூறு.

  20. அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

  21. அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?

  22. Section - III

    10 x 4 = 40
  23. இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 ms-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசைகொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?

  24. 50 kg மற்றும் 10 kg எடைகள் கொண்ட இரு பொருள்கள் 10 மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையேயான புவி ஈர்ப்பு விசையைக் கணக்கிடுக. மேலும் அதன் தொலைவு 100% அதிகரிக்கப்படுமானால் விசையின் மாற்றத்தில் ஏற்படும் விழுக்காடு யாது? [புதியவிசை, தொடக்க விசையிலிருந்து 75% குறைவு] 

  25. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  26. மண்ணெண்ணையின் ஒளிவிலகல் 1.44 அதன் வழியே ஒளியின் திரைவேகம் யாது?

  27. துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தை கணக்கிடுக.

  28. வெப்ப சமநிலை என்றால் என்ன?

  29. இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 2 Ω. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 9 Ω. இரு மின் தடைகளின் மதிப்புகளையும் கணக்கிடு.

  30. மின்சுற்று என்றால் என்ன?

  31. ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க?

  32. ஓய்வு நிலையில் உள்ள,100 Hz ஒலிமூலத்தை நோக்கி ஒரு கேட்குநர் இருமடங்கு ஒலிவேகத்தில் நகர்கிறார்.அவர் உணர் அதிர்வெண்ணில் அளவு என்ன?

  33. Section - IV

    10 x 7 = 70
  34. உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.

  35. திருப்புத்திறன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படும் சில அமைப்புகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  36. ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.

  37. குழிலென்சின் வழியாக ஒளிவிலகல் ஏற்படுவதை படத்துடன் விவரி. பொருளின் நிலை, பிம்பங்கள் உருவாக்கப்படும் நிலை குறித்து விவரி.

  38. நல்லியல்பு வாயு சமன்பாட்டினை தருவி.

  39. திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.

  40. வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (படம் தேவையில்லை)

  41. பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.

  42. எதிரொலி என்றால் என்ன?
    அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
    ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
    இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?

  43. அலையின் திசைவேகத்தை வரையறுத்து தொடர்பினை விவரி.

  44. Section - V

    5 x 7 = 35
  45. புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?

  46. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்படவேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?

  47. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

  48. 1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.

  49. ஒரு ஒலி மூலமானது 50 மீவி-1 திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது. கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலி மூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன?(ஒலியின் திசைவேகம் 330 மீவி-1)

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020  ( 10th Standard Science  Tamil Medium Important Questions All Chapter 2020 )

Write your Comment