10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. உலர்ந்த தாவரப்பொருளை நீரில் வைக்கும் போது உப்பிவிடும். இதற்கான நிகழ்ச்சி என்ன? வரையறை செய்க.

  2. முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
    i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
    ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
    ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
    iii.“D” என்பது எத்தனை இணை நரம்புகள்?

  3. சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?

  4. நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன ?

  5. கவிதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்’ என அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.

  6. புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?

  7. “பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது” இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.

  8. மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?

  9. கீழ்க்காணும் கழுவுகளை எவ்வாறு கையாளுவாய்?
    அ) வீட்டுக் கழிவுகளான காய்கறி கழிவுகள்.
    ஆ) தொழிற்சாலைக்கு கழிவுகளான கழிவு உருளைகள்.
    இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?

  10. "Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 4 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Book back 4 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment