10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 70
    10 x 7 = 70
  1. புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?

  2. கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்படவேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?

  3. மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc வைக் கணக்கிடுக.

  4. 1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.

  5. ஒரு ஒலி மூலமானது 50 மீவி-1 திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது. கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலி மூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன?(ஒலியின் திசைவேகம் 330 மீவி-1)

  6. மோல்களின் எண்ணிக்கையிலிருந்து நிறையைக் கணக்கிடுதல்.
    1. 0.3 மோல் அலுமினியம் (Al ன் அணுநிறை = 27)
    2. S.T.P இல் 2.24 லிட்டர் SO2
    3. 1.51 x 1023 மூலக்கூறு நீர்
    4. 5 x 1023 மூலக்கூறு குளுக்கோஸ் 

  7. 500 கி கரைசலில் 10% (w/w); யூரியா நீர்க் கரைசலைப் பெறத் தேவையான யூரியாவின் நிறையை கணக்கிடுக.

  8. 1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.

  9. 0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 7 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Book back 7 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment