Term 1 ஒளியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள்

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    10 x 4 = 40
  1. ராஜா என்ற மாணவர், குவிலென்சு ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
    1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
    2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?

  2. ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?

  3. 6 செ.மீ உயரம் உடைய ஒரு பொருள் குழிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் உள்ளது. அதன் குவியதூரம் 10 செ.மீ தொலைவில் உள்ளது.அதன் குவியதூரம் 10 செ .மீ பிம்பத்தின் நிலை மற்றும் அளவு யாது?

  4. ஒரு குழி லென்சு 20 செ.மீ குவிய தொலைவு உடையது. 5 செ.மீ உயரமுடைய பொருள் ஒன்று எத்தொலைவில் வைக்கப்பட்டால், அது லென்சிலிருந்து 15 செ.மீ தொலைவில் பிம்பம் உருவாகும்? உருவாக்கப்படும் பிம்பத்தின் அளவைக் கணக்கிடுக.

  5. மையோபிக் நபரின்(கிட்டப்பார்வை) உள்ளவரின் கண்ணுக்கு முன் உள்ள தொலைவு நிலை 90 செ.மீ. குறைபாட்டை சரி செய்யத் தேவையான லென்சின் இயல்பு மற்றும் திறன் யாது?

  6. ஒரு பொருளானது ஒரு லென்சிலிருந்து 50 செ.மீ ல் வைக்கப்படும்போது லென்சிற்கு முன்னால் 10செ.மீ தொலைவில் மாய பிம்பம் உருவாகிறது. லென்சின் குவியதூரம் யாது? இது விரிக்கும் லென்சா? குவிக்கும் லென்சா?

  7. ஒளிவிலகல் எண் \({ \mu }_{ 2 }\) கொண்ட ஒரு குவிலென்சு, ஒலிவிலகல் எண் \({ \mu }_{ 1 }\) உடைய ஒரு ஊடகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லென்சின் மீது ஒரு ஒளியின் இணைக்கற்றைகள் விழுகின்றன. \({ \mu }_{ 1 }\) மற்றும் \({ \mu }_{ 2 }\) கீழ்கண்டவாறு இருந்தால், குவிலென்சிலிருந்து வெளிவரும் கதிர்களின் பாதையை வரைக.
    (a) \({ \mu }_{ 1 }>{ \mu }_{ 2 }\)
    (b) \({ \mu }_{ 1 }={ \mu }_{ 2 }\) 
    (c) \({ \mu }_{ 1 }<{ \mu }_{ 2 }\).

  8. மண்ணெண்ணெயின் ஒளிவிலகல் 1.44க்கு ஒப்பாக வைரத்தின் ஒளிவிலகல் 2.42 வைரத்தின் ஒளிவிலகல் எண் மண்ணெண்ணெய்க்கு ஒப்பாக யாது?

  9. கண்ணாடியில் ஒளியின்  வேகம் 2 x 108 ms-1 கண்ணாடி ஒளிவிலகல் யாது?

  10. காற்றில் ஒளியானது ஒரு வைரத்தில் நுழையும் கோணம் 450. விலகு கோணம் யாது? வைரத்தின் ஒளிவிலகல் எண் 2.42.

*****************************************

Reviews & Comments about 10th அறிவியல் Term 1 ஒளியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Term 1 Optics Four Marks Questions )

Write your Comment