Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?

  2. பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக 
    (i) உலோக இடப்பெயர்ச்சி வினை 
    (ii) அலோக இடப்பெயர்ச்சி வினை 

  3. KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.

  4. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  5. சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என்றால் என்ன? இந்த சம ஆற்றல் பண்பு எவ்வாறு இழக்கப்படுகிறது. உதாரணத்துடன் கூறுக.

  6. n-வது வட்டப்பாதையில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றல் En=\(\frac { (-1312.8){ Z }^{ 2 } }{ { n }^{ 2 } } \) KJ mol-1 இச்சமன்பாட்டிலிருந்து நீ அறிவதென்ன?

  7. டி-சான்கோர்டாய்ஸ் வகைப்பாட்டினை எழுது.

  8. ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க

  9. கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.

  10. மாறாத அழுத்தத்தில், வெப்பநிலை மாற்றத்தால் கனஅளவில் ஏற்படும் மாற்றம் குறித்து எழுதுக.

  11. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  12. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

  13. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  14. பொட்டாசியம் குளோரைடில் அயனிப்பிணைப்பு உருவாதலை விளக்குக.

  15. 0.16 g எடையுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaC2 சேர்த்து வீழ்ப்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35 g சல்பரின் சதவீதத்தை கான்(30.04). 

  16. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

  17. அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது? 

  18. தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?

  19. 0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.

  20. சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.       

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Chemistry - Full Portion Three Marks Question Paper )

Write your Comment