11th chemistry-important 3 marks

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

chemistry

USE ONLY BLUE PENS
Time : 00:45:00 Hrs
Total Marks : 300
    100 x 3 = 300
  1. திட்ட வெப்ப அழுத்த நிலைகளில் 50 g கால்சியம் கார்பனேட்டை முற்றிலுமாக எரிப்பதால் உருவாகும் கார்பன் டைஆக்ஸைடின் கனஅளவு எவ்வளவு?

  2. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

  3. பின்வருவனவற்றிற்கான சமன்பாடுகளை எழுதுக 
    (i) உலோக இடப்பெயர்ச்சி வினை 
    (ii) அலோக இடப்பெயர்ச்சி வினை 

  4. கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
    கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
    மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?

  5. வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.

  6. கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
    (அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
    (i) KMnO4 + H2O2
    (ii) CrCl3 + H2O →
    (iii) CaO + H2O →

  7. பின்வரும் வேதி வினைகளுக்கு சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளை எழுதுக.
    (i) நைட்ரஜன் வாயு உடன் லித்தியம் வினைபுரிதல்
    (ii) திட சோடியம் பைகார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
    (iii) ஆக்சிஜன் வாயு உடன் ருபீடியம் வினைபுரிதல்
    (iv) CO2 உடன் திண்ம பொட்டாசியம் ஹைட்ராக்சைடு வினைபுரிதல்
    (v) கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்துதல்
    (vi) ஆக்சிஜன் வாயு உடன் கால்சியம் சேர்த்து வெப்பப்படுத்துதல்.

  8. பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
    (i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
    (ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற

     

  9. தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.

  10.  ஒரு வாயு 15oCயில் 1atm அழுத்தத்தில் பெற்றுள்ள கனஅளவு 2.58 dm3வெப்பநிலை 38oCயாக 
    1atm அழுத்தத்தில் உயர்ந்தால் அதன் கனஅளவு அதிகரிக்குமா? எனில் அதன் இறுதி
    கனஅளவைக் கணக்கிடு

  11. வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.

  12. பின்வரும் தரவுகளிலிருந்து CaCl2 படிகத்தின் படிக கூடு ஆற்றலை கணக்கிடுக 
    Ca (s)+Cl2(g) → CaCl2(s) ΔHf0 = − 795 kJ mol−1
    பதங்கமாதல் Ca(s) → Ca(g) ΔH10 = + 121 kJ mol−1
    அயனியாதல் Ca(g) → Ca2+(g) + 2e ΔH02 = + 2422 kJ mol−1
    பிளத்தல் Cl2(g) → 2Cl(g) ΔH03 = + 242.8 kJ mol−1
    எலக்ட்ரான் நாட்டம் Cl (g) + e → Cl (g) ΔH40 = −355 kJ mol−1

  13. 4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .

  14. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  15. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  16. A2(g) + B2(g) ⇌ 2AB(g); \(\Delta\)H -எதிர்குறி என்ற வினையில் கொடுக்கப்பட்டுள்ள மூலக்கூறு சாட்சிகள் பல்வேறு வினைக்கலவைகளை பிரதிபலிக்கிறது.(A – பச்சை , B – நீலம்) மூடிய அமைப்பு
     
    i) KP மற்றும் KC சமநிலை மாறிலியினை கணக்கிடுக.
    ii) காட்சி (X), (Y)ல் குறிப்பிட்டுள்ள வினைக்கலவையில், வினையானது எந்த திசையில் நடைபெறும்?
    iii). சமநிலையில் உள்ள கலவையில், அழுத்தத்தை அதிகரித்தால் என்ன விளைவுநிகழும்?

  17. ஒரு மூடிய ஒரு லிட்டர் கலனில், ஒரு மோல் PCl5 வெப்பப்படுத்தப்படுகிறது. சமநிலையில் 0.6 மோல் குளோரின் இருந்தால் சமநிலைமாறிலி மதிப்பினைகணக்கிடுக.

  18. SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.

  19. HI சிதைவடைதலை அறிந்து கொள்ள , ஒரு மாணவன் காற்று நீக்கப்பட்ட 3L குடுவையில் 0.3 மோல் HI வாயுவினை நிரப்புகிறான் , 500oC ல் வினையினை நிகழ்த்துகிறான். சமநிலையில் HIன் செறிவு 0.05M என அவன் அறிந்துகொள்கிறான். இவ்வினைக்கு Kp மற்றும் Kமதிப்புகளை கணக்கிடுக.

  20. NO2ன் தொடக்க அழுத்தம் 1atm மற்றும் O2ன் தொடக்க அழுத்தம் 1atm ஐ கொண்ட 2000C வெ ப்பநிலையில், NOன் ஆக்ஸிஜனேற்ற வினை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமநிலையில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனஅறியப்படுகிறது. KPன் மதிப்பினை கணக்கிடு.

  21. 717K வெப்பநிலையில் பின்வரும் வினைக்கு Kcன் மதிப்பு 48.
    H2(g) + I2(g) ⇌⇌ 2HI(g)

  22. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
    373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

  23. ஒரு மோல் ஹைட்ரஜன் மற்றும் ஒரு மோல் அயோடின் கலக்கப்பட்டு சமநிலை அடைய 0.4 மோல் HI காணப்படுகிறது. சமநிலை மாறிலியைக் கணக்கிடுக.
    கொடுக்கப்பட்ட தரவுகள்
    [H2] = 1 மோல்
    [I2] = 1 மோல்
    சமநிலையில், [HI] = 0.4 மோல் Kc= ?

  24. NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.

  25. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

  26. சமநிலை மாறிலி எனப்படுவது எது?

  27. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

  28. சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?

  29. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  30. பின்வரும் சமநிலை வினைகளின் சமநிலை மாறிலிகளைத் தொடர்புபடுத்துக.
    \((i){ N }_{ 2 }+{ O }_{ 2 }\rightleftharpoons { 2NO;K }_{ 1 }\\ (ii)2NO+{ O }_{ 2 }\rightleftharpoons 2NO_{ 2 };{ K }_{ 2 }\\ (iii){ N }_{ 2 }+2O_{ 2 }\rightleftharpoons { 2NO }_{ 2 };{ K }_{ 3 }\)
     

  31. பின்வரும் வினையினைக் கருதுக.
    \(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக. 

  32. 1 atm NO மற்றும் 1 atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்டு NO ன் வளிமண்டல ஆக்ஸிஐனேற்ற வினை 
    \(2NO(g)+{ O }_{ 2 }(g)\rightleftharpoons 2NO_{ 2 }(g)\)
    ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52 atm எனில் இவ்வினைக்கான Kp ன் மதிப்பை காண்க.    

  33. சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை  எழுதுக. 

  34. HF மூலக்கூறு உருவாதலை விளக்குக

  35. அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.

  36. முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  37. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக
    i. சைக்ளோ ஹெக்ஸா-1,4-டையீன்
    ii. எத்தைனைல் சைக்ளோ ஹெக்ஸேன்

  38. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii. p-டைகுளோரோ பென்சீன்
    iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  39. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

  40. 0.2175 g நிறையுள்ள, சல்பரை கொண்டுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் முறைப்படி அளந்தறியப்பட்டு 0.5825g BaSO4 யைக் கொடுக்கிறது எனில் அச்சேர்மத்தில் உள்ள S ன் சதவீதத்தினை கணக்கிடுக.

  41. 0.16g எடையுள்ள கரிம சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaCl2 சேர்த்து வீழ்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35g சல்பரின் சதவீதத்தை காண் (30.04)

  42. 0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.

  43. 0.40g எடையுள்ள அயோடின் பதிலீடு செய்யப்பட்ட கரிம சேர்மம் 0.125g AgIயை காரியஸ் முறைப்படி தருகிறது எனில், அயோடினின் சதவீதத்தைக் காண்க.

  44. 0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக.

  45. பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

  46. கார்பன் அயனிப் பிணைப்பை உருவாக்காமல் சகப்பிணைப்பை உருவாக்குவதேன்?

  47. மூலக்கூறு மாதிரிகள் என்பவை யாவை? அவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  48. இயங்கு சமநிலை மாற்றியம் (அ) டாட்டாமெரிசம் எவ்வாறு ஏற்படுகின்றன?

  49. வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?

  50. சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?

  51. வடிவ மாற்றியன்கள் எந்த நிலையில் மட்டும் சாத்தியமாகிறது? ஏன்?

  52. கைரல் மூலக்கூறு என்பது என்ன? கைரல் தன்மைக்கும் ஒளிசுழற்றும் தன்மைக்கும் உள்ள தொடர்பு என்ன?

  53. பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?

  54. பின்வரும் கரிமச் சேர்மம் வகைகளுக்கு ஒவ்வொன்றிற்கும் இரு எ.கா.தருக.
    i. பென்சீன் வளைய அமைப்பை பெற்றிருக்காத அரோமேட்டிக் சேர்மம்.
    ii.அரோமேட்டிக் பல் இன வளையச்சேர்மம்
    iii. அலிசைக்ளிக் மற்றும் அலிபாட்டிக் திறந்த அமைப்புடையவை. 

  55. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii.p-டைகுளோரோ பென்சீன்
    iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  56. 0.16 g எடையுள்ள கரிமச் சேர்மம், காரியஸ் குழாயில் சூடுபடுத்தப்படுகிறது. உருவான H2SO4, BaC2 சேர்த்து வீழ்ப்படிவாக்கப்படுகிறது. வீழ்படிவான BaSO4 எனில் 0.35 g சல்பரின் சதவீதத்தை கான்(30.04). 

  57. 0.185 g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுடன் சேர்ந்து 0.320 g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க(Ag=108, Br=80).

  58. 0.3 g எடையுள்ள கரிமச் சேர்மம், கெல்டால் முறையில் 30 ml 0.1 N H2SO4 த்தால் NH3 நடுநிலை செய்யப்பட்டது எனில், நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.

  59. n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?      

  60. ஈத்தின் பேயரின் காரணியுடன் எவ்வாறு வினைபுரிகிறது?        

  61. புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக        

  62. C2H5Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாடு உடைய (A) என்ற சேர்மம் KOH உடன் வினைபுரிந்து (B) என்ற சேர்மத்தையும் ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தையும் தருகின்றன. (A), (B), (C)ஐக் கண்டறிக.
     

  63. A என்ற எளிய ஆல்கீன் HCl உடன் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. மேலும் (B) ஆனது அம்மோனியாவுடன் வினைபுரிந்து C2H7N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (C)ஐத் தருகிறது. (C)யானது கார்பைலமின் வினைக்கு உட்படுகிறது. (A), (B) மற்றும் (C)ஐக் கண்டறிக.

  64. C3H6 என்ற (A) ஹைட்ரோ கார்பன் HBr உடன் வினைபுரிந்து (B) ஐத் தருகிறது. (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C3H6O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. (A), (B) மற்றும் (C) ஐக் கண்டறிக. வினைகளை விளக்குக.

  65. (A) மற்றும் (B) ஆகியன C2H4Cl2 என்ற வாய்ப்பாடுடைய இரு மாற்றியங்கள். சேர்மம் (A) ஆனது நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H4O என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய (C) ஐத் தருகிறது. சேர்மம் (B) நீர்த்த KOH உடன் வினைபுரிந்து C2H6O2 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினை உடைய (D) ஐத் தருகிறது. A, B, C மற்றும் D ஐக் கண்டறிக, வினைகளை விளக்குக.

  66. காட்டர்மான் வினையை எழுதுக.

  67. பென்சீன் டையசோனியம் குளோரைடு பொட்டாசியம் அயோடைடுடன் புரியும் வினை யாது?

  68. பால்ஸ்கீமன் வினையை எழுதுக. 

  69. உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.

  70. அசிட்டால்டிஹைடு PCI5 உடன் புரியும் வினை யாது? 

  71. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

  72. பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
    (i) எத்திலின் குளோரைடு 
    (ii) எத்திலிடின் டைகுளோரைடு 

  73. குளோரோ பென்சீன் பின்வரும் வினைகளை எழுதுக
    அ. ஹலேஜனேற்றம் 
    ஆ. நைட்ரோ ஏற்றம் 
    இ.சல்போனேற்றம் 
    ஈ.ஃபிரீடல்கிராஃப்ட் வினை 

  74. மக்காத மாசுபடுதிகளைக் கூறி, அவற்றின் விளைவுகளை எழுதுக.

  75. காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?

  76. கார்பன்டையாக்சைடு எவ்வாறு உருவாகிறது? அதன் தீய விளைவுகள் யாவை?

  77. ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.

  78. துகள் மாசுபடுத்திகளை குறைக்கும் உத்திகள் படியிலிடு.

  79. தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.

  80. சுற்றுச்சூழல் மீதான ஓசோன் படல சிதைவின் தாக்கங்கள் யாவை?

  81. நீர் மாசுபடுதல் என்றால் என்ன?

  82. தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?

  83. வேதி நேர் மாசுபடுதிகளின் தீய விளைவுகள் படியிலிடு.

  84. மொத்த கரைந்த திண்மங்கள் உள்ளடக்கியவை எவை? அவற்றின் தீய விளைவுகள் யாவை?

  85. மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?

  86. ஒரு குறிப்பிட்ட கரைசலுக்கு, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 0.093oC என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் செறிவை மோலாலிட்டியில் கணக்கிடுக. நீரின் மோலால் உறை நிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol -1

  87. (அ) 300 மி.லி மற்றும் (ஆ) 1 லிட்டர் கரைசலில் 5.6 கிராம் KOH கரைந்துள்ளது எனில், அக்கரைசல்கள் ஒவ்வொன்றின் மோலாரிட்டியைக் கணக்கிடுக.

  88. 2.82 கிராம் குளுக்கோஸ் ஆனது 30 கிராம் நீரில் கரைக்கப்பட்டள்ளது. குளுக்கோஸ் மற்றும் நீரின் மோல் பின்னங்களை கணக்கிடுக.

  89. தூய கரைபொருள் மற்றும் கரைப்பானிலிருந்து பின்வரும் கரைசல்களை நீ எவ்வாறு தயாரிப்பாய் என்பதை விளக்குக.
    (அ) 1L கனஅளவுடையடைய 1.5 M CoCl2 இன் நீர்க்கரைசல்.
    (b) 500 mL கனஅளவுடைய 6.0 % (V/V) நீர்ம மெத்தனால் கரைசல்.

  90. 27°C வெப்பநிலையில் A எனும் தூய திரவத்தின் ஆவிஅழுத்தம் 10.0 torr. 20 கிராம் A இல் 1 கிராம் B ஐ கரைப்பதன்மூலம் ஆவிஅழுத்தம் 9.0 torr க்கு குறைக்கப்படுகிறது. A யின் மோலார் நிறை 200 எனில், B யின் மோலார் நிறையை கணக்கிடுக.

  91. 2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறைநிலைத் தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையைக்காண்க.

  92. 6gகிராம்லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2) கரைசலுடன் ஐசோடானிக் கரைசலாக உள்ள குளுக்கோஸ் கரைசலில், ஒரு லிட்டரில் கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?

  93. 500 மி.லி 2.5 M HCl கரைசலைப் பெறுவதற்கு, 4M HCl மற்றும் 2M HCl கரைசல்களை எந்த கன அளவுகளில் கலக்க வேண்டும்?

  94. 0.24 g வாயுவானது 1.5 atm அழுத்தத்தில் 1 லிட்டர் நீரில் கரைகிறது. மாறாத வெப்பநிலையில், அழுத்தத்தை 6 atm க்கு அதிகரிக்கும்போது கரைக்கப்படும் வாயுவின் எடையை கணக்கிடுக.

  95. 2% எளிதில் ஆவியாகாத கரைபொருளை கொண்டுள்ள நீர்க் கரைசலானது, கரைப்பானின் கொதிநிலையில், 1.004 bar அழுத்தத்தை கொண்டுள்ளது. P0 மதிப்பு 1.013 bar ஆக இருக்கும்போது கரைபொருளின் மோலார் நிறை என்ன?

  96. 0.75 கிராம் எடையுடைய பெயர் தெரியாத சேர்மமானது 200 கிராம் நீரில் கரைக்கப்படுகிறது. கொதிநிலை ஏற்ற மதிப்பு 0.15 K மற்றும் மோலால் கொதிநிலை ஏற்ற மாறிலி மதிப்பு 7.5 K Kg mol-1 எனில், அச்சேர்மத்தின் மோலார் நிறையை கணக்கிடுக.

  97. குளிர்ப்பிரதேசங்களில் பயணிக்கும் கார்களின் ரேடியேட்டர்களில், உறைதடுப்பானாக எத்திலீன் கிளைக்காலை (C2H2O2) பயன்படுத்த முடியும். கார் ரேடியேட்டர்களில், பயன்படுத்தப்பட்டுள்ள, 20 நிறை சதவீத கிளைக்காலின் நீர்க் கரைசலிலிருந்து பனிக்கட்டி படிகங்கள் உருவாகி பிரியும்போது உள்ள வெப்பநிலையை கணக்கிடுக. நீரின் Kf = 1.86 K Kg mol-1 மதிப்பு மற்றும் எத்திலீன் கிளைக்காலின் மோலார் நிறை 62 g mol-1.

  98. 200 கிராம் நீரில் 1 கிராம் NaCl ஐ கரைப்பதன்மூலம், 0.24 K உறைநிலைத் தாழ்வு ஏற்படுத்தப்பட்டது. வாண்ட் ஹாஃப் காரனியை கணக்கிடுக. மோலால் உறைநிலைத் தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kg mol-1

  99. திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது யாது? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  100. திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.

  101. கரைத்திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  102. நல்லியல்புக் கரைசல்கள் என்பவை யாவை?

  103. ஒரு நல்லியல்புக் கரைசலின் திறன்களை பட்டியலிடு.

  104. இயல்புக் கரைசல்கள் என்பன யாவை? அதன் விலகல் தன்மை குறித்து எழுதுக.

  105. கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?

  106. 2 கிராம் மின்பகுளி அல்லாத கரைபொருளை 75 கிராம் பென்சீனில் கரைக்கும்போது, பென்சீனின் உறைநிலையானது 0.20 K குறைகிறது. பென்சீனின் உறை நிலைத்தாழ்வு மாறிலி 5.12 K Kg mol-1. கரைபொருளின் மோலார் நிறையை காண்க.

  107. வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.

  108. வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு. 

  109. வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.

  110. சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.       

  111. 6 கிராம் லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2 ) கரைசலுடன்  ஐசோடானிக் கரைசலாக உள்ள  குளுக்கோஸ் கரைசலில் , ஒரு லிட்டரில்  கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?            

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் -3 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th chemistry-important 3 marks questions )

Write your Comment