+1 Chemistry Pre Model Test Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல் தொகுதிI

Time : 01:30:00 Hrs
Total Marks : 75
    விரிவான விடையளி :
    15 x 5 = 75
  1. ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
    i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
    ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
    iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
    iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O

  2. எளிய விகித வாய்ப்பாட்டினை தீர்மானிப்பதில் உள்ள நிலைகளை பட்டியலிடுக.

  3. பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
    He+ (g) → He2+ (g) + e-
    சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

  4. போர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.

  5. சோடியத்தின் முதல் அயனியாக்கும் ஆற்றலானது மெக்னீசியத்தை விட குறைவு; ஆனால் அதன் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மெக்னீசியத்தை விட அதிகம், ஏன்?

  6. (i) மேற்கண்ட எல்கட்ரான் நாட்ட வேறுபாடுகளை விளக்கு.
    (ii) எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.

  7. பொதுவாக பயன்படுத்தப்படும் உப்பில் உள்ள ஒரு முதல் தொகுதி உலோகம் (A) ஆனது (B) உடன் வினைபுரிந்து (C) என்ற சேர்மத்தினைத் தருகிறது. இச்சேர்மத்தில் ஹைட்ரஜன் -1 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. (B) ஆனது (C) என்ற வாயுவுடன் வினைப்பட்டு அனைத்துக் கரைப்பானான (D) ஐத் தருகிறது. சேர்மம் (D) ஆனது (A) உடன் வினைப்பட்டு (E) என்ற ஒரு வலிமையான காரத்தினைத் தருகிறது. A, B, C, D மற்றும் Eயைக் கண்டறிக. வினைகளை விளக்குக

  8. தற்காலிக கடினத்தன்மையும் அதனை நீக்கும் வழிமுறையையும் எழுதுக.

  9. இரண்டாம் தொகுதி தனிமங்களின் முக்கியமான பொதுப்பண்புகளை விளக்குக

  10. பின்வருவனவற்றின் பயன்களை எழுதுக.
    அ] பெரிலியம் 
    ஆ] மெக்னீசியம் 
    இ]கால்சியம் 
    ஈ] ஸ்டிரான்சியம் 
    உ] பேரியம் 
    ஊ] ரேடியம் 

  11. வாண்டர் வால்ஸ் மாறிலிகளை கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி

  12. நல்லியல்புத் தன்மையில் இருந்து விலகுதல் என்றால் என்ன?விளக்குக.

  13. C2H5OH(l)+3O2(g)\(\rightarrow \)2CO2(g)+ 3H2O(l) என்ற வினைக்கு திட்ட என்தால்பி மாற்ற மதிப்பை கணக்கிடுக.C2H5OH(l),2CO2(g) மற்றும் H2O(l) ஆகியவற்றின் திட்ட உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே 277,-393.5 மற்றும் -285.5kJ mol -1

  14. விரிவடைதல், மற்றும் சுருங்குதல் செயல்முறையின் போது செய்யப்படும் வேலையை கணக்கிடுக

  15. வினைகளின் தன்னிச்சை தன்மை மீது வெப்ப நிலையின் விளைவை எடுத்துக்காட்டுடன் விவரி.

*****************************************

Reviews & Comments about +1 வேதியியல் மாதிரி தேர்வு வினாத்தாள் ( +1 Chemistry Pre Model Test Question Paper )

Write your Comment