Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  2. வகைப்பாட்டியல் மற்றும் இதை தொடர்பு தொகுப்பமைவியலின் நோக்கம் யாது?

  3. ஏன் தட்டைப்புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகின்றன?

  4. கரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்?

  5. சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?

  6. உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?

  7. வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?

  8. மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக

  9. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

  10. புரோட்டோபிளாசத்தின் கூழ்ம தன்மை எதன் அடிப்படையில் அமைகிறது?  

  11. எந்த நிலையில் DNA அளவானது 2C யிலிருந்து 4C ஆக பெருக்கமடைகிறது?

  12. நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக

  13. பச்சை சுரப்பி என்றால் என்ன? பணியை குறிப்பிடுக.

  14. அகச்சட்டகம் என்பது யாது?

  15. தேவையான தூண்டுதல் கிடைத்தவுடன் செயல்மிகு மின்னழுத்தம் ஏற்படும்.ஆனால் தேவைக்குக் குறைவான தூண்டுதலில் ஏற்படாது.இக்கோட்பாட்டின் பெயர் என்ன?

  16. மின்முனைப்பியக்க மீட்சி -வரையறு.

  17. கிளாக்கோமா ஏற்படக் காரணம் யாது?

  18. கீழ் வருவனவற்றைப் பெயரிடுக 
    i) தேன்கூட்டின் மிகப்பெரியத் தேனீ 
    ii) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனீ கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல்.

  19. லிங்கா முத்துக்கள் என்பவை யாவை?

  20. மண்புழு உரம் தயாரித்தலில், மண்புழு உரம் அறுவடைக்கு தயாராக உள்ளது என்பதை  எவ்வாறு அறியலாம்?

  21. துணை செல்கள் பற்றி எழுதுக.

  22. வளையத் துளைக்கட்டை என்பது யாது?

  23. வரையறு:சவ்வூடுபரவல் திறன்.

  24. அம்மோனியாவாதல் என்றல் என்ன?

  25. மனோகார்ப்பிக் பலப்பருவ தாவரங்கள் என்பது யாது? எ.கா. தருக

*****************************************

Reviews & Comments about 11th உயிரியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Biology - Full Portion Two Marks Question Paper )

Write your Comment