Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

  2. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
    5213.0

  3. அதிர்வடையும் கம்பியின் அதிர்வெண்(υ)ஆனது
    i. அளிக்கப்பட்ட விசை (F)
    ii. நீளம் (l)
    iii. ஒரலகு நீளத்திற்கான நிறை (m) ஆகியவற்றைப் பொறுத்தது எனக் கொண்டால், பரிமாண முறைப்படி அதிர்வெண் \(v ∝ {1\over l}\sqrt{F\over m}\) என நிரூபி

  4. m k s -அமைப்பு என்பது யாது?

  5. ஒரு திருகு அளவியைப் பயன்படுத்தி ஒரு கம்பியின் தடிமன் 5 mm என அளக்கப்படுகிறது.
    (i) விகிதப்பிழை
    (ii) விழுக்காடுபிழை கணக்கீடு

  6. எதிர் முடுக்கம் என்றால் என்ன?

  7. கணத்தாக்கை தொகையிடல் மூலம் எவ்வாறு கணக்கிடலாம்?

  8. படத்தில் உள்ள பொருளின் மீது செயல்படும் சுருள்வில் விசையைக் காண்க. [பொருள் உராய்வற்றப் பரப்பின் மீது உள்ளது எனக் கருதுக.

  9. வாயு நிரப்பப்பட்ட கலனில் ஒரு மூலக்கூறு அதன் சுவரினை 350 m/s வேகத்துடன் செங்குத்துக்கோட்டுடன் 45° கோணத்தை உண்டாக்கி மீண்டும் அதே வேகத்துடன் திருப்பி அனுப்பப்படுகிறது. மோதலினால் உந்தம் மாறாமல் இருக்குமா?
     

  10. இரு சமமான அளவு பாட்டில்களில் ஒன்றை நீர் நிரப்பியும் மற்றொன்றை காலியாகவும் கொண்டு சாய்தளத்தில் கீழ்நோக்கி உருளுமாறு அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் எது சாய்தளத்தின் அடிப்பகுதியை முதலில் அடையும்? விளக்குக.

  11. வேகவைத்த முட்டையையும், வேகாத முட்டையையும் அதனை சுற்றிப்பார்த்து வேவ்வேறு கண்டறிவாய்?

  12. நிலைமத் திருப்புத் திறனை காண்பதற்கு தேவையான தேற்றங்களின் அவசியம் யாது?

  13. புதியதாக கண்டறியப் பட்ட ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய தகவல் தரப்பட்டுள்ளதாக கருதுக. அக்கோள்களின் அரை நெட்டச்சுக்கும் சுற்றுக்காலத்திற்கும் உள்ள தொடர்பு யாது?

    கோள்  சுற்றுக்காலம்
    (ஆண்டுகளில்)
    நெட்டச்சு அளவு
    (AU)
    குறிஞ்சி
    முல்லை 
    மருதம்
    நெய்தல்
    பாலை 

    2
    3
    4
    5
    6

    8
    18
    32
    50
    72
  14. உன் மாவட்ட தலைநகரத்தில் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு காண்க. (குறிப்பு - கூகுள் தேடுதல் மூலம் குறுக்குகோட்டு மதிப்பு பெறுக) g ன் மதிப்பு சென்னையிலிருந்து கன்னியாகுமரியில் எவ்வாறு மாறுபடுகிறது?

  15. பாய்ஸன் விகிதத்தை வரையறு.

  16. ஒரு சர்க்கரைக் கட்டியின் ஒரு முனை காப்பியில் வைக்கப்பட்டால் சர்க்கரைக் கட்டியினுள் காப்பி மேலேறுகிறது. ஏன்?

  17. இழுவிசைத் தகைவு என்பது யாது?  

  18. ஜூல் இயந்திர ஆற்றலை, வெப்ப ஆற்றலாக மாற்றினாரா? விளக்குக.

  19. வெப்ப நிலை மாறா நிகழ்வில் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாட்டை விளக்குக.

  20. 100°C மற்றும் 300°C வெப்பநிலை வேறுபாட்டில் செயல்படும் மீள் நிகழ்வில் வெப்ப இயந்திரம் ஒன்றின் பயனுறுதிறனை  அதிகரிக்க விரும்பும் ஒருவர் பின்வரும் இரண்டு வழிமுறைகளில் எவ்வழிமுறையை மேற்கொள்கிறது மிகுந்த பயனளிக்கும்.
    a) வெப்ப மூலத்தின் வெப்பநிலையை மாறாமல் வைத்துக்கொண்டு மூலத்தின் வெப்ப ஏற்பியின் நிலையை 100°C யிலிருந்து மற்றும் 50°C க்கு குறைத்தல்
    b) வெப்ப ஏற்பியின்  மூலத்தின் வெப்பநிலையை மாற்றாமல் வைத்துக்கொண்டு. வெப்பமூலத்தின் வெப்பநிலையை 300°C இலிருந்து 350°Cக்கு உயர்த்துதல்.

  21. "கதிர் வீச்சு" குறிப்பு வரைக. 

  22. இரு சுருள்வில்கள் தொடர் இணைப்பில் உள்ள தொகுப்பை பற்றி சிறு குறிப்பு வரைக.

  23. கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?

  24. நெட்டலை என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  25. A மற்றும் B என்ற இரு இசைக்கலவைகள் இணைந்து 4 விம்மல்களைத் தோற்றுவிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இழு விசையில் உள்ள 0.96m நீளமுள்ள சுராமானிக் கம்பி இசைக்கவை B யுடன் ஒத்ததீர்வு பெறுகிறது. இசைக்கலவையின் அதிர்வெண்களைக் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Physics - Full Portion Two Marks Question Paper )

Write your Comment