11th Physics - Important 2 mark questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 50

    Answer all the questions

    25 x 2 = 50
  1. தரையில் ஒரு புள்ளியிலிருந்து ஓர் மரத்தின் உச்சியானது 60˚ ஏற்றக் கோணத்தில் தோன்றுகிறது. மரத்திற்கும் அப்புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் 50 m எனில் மரத்தின் உயரத்தைக் காண்க.

  2. ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் விழுக்காட்டுப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.

  3. அதிர்வடையும் கம்பியின் அதிர்வெண்(υ)ஆனது
    i. அளிக்கப்பட்ட விசை (F)
    ii. நீளம் (l)
    iii. ஒரலகு நீளத்திற்கான நிறை (m) ஆகியவற்றைப் பொறுத்தது எனக் கொண்டால், பரிமாண முறைப்படி அதிர்வெண் \(v ∝ {1\over l}\sqrt{F\over m}\) என நிரூபி

  4. சராசரி தனிப்பிழை என்பது யாது?

  5. கொடுக்கப்பட்ட வெக்டர் \(\vec r=3\hat i+2\hat j\) இவ்வெக்டரை ஓரலகு வெக்டராக மாற்றுக.

  6. எதிர்க்குறி x, y மற்றும் z அச்சுத்திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்கள் யாவை?

  7. 2 kg நிறையுடைய பொருளின்மீது பின்வரும் இரண்டு விசைகள் செயல்படுகின்றன. \(\overrightarrow { { F }_{ 1 } } =5\hat { i } +8\hat { j } +7\hat { k } \) மற்றும் \(\overrightarrow { { F }_{ 2 } } =3\hat { i } -4\hat { j } +3\hat { k } \) பொருளின் முடுக்கத்தைக் காண்க.

  8. ஒரு தூக்கி 5.0 ms-2முடுக்கத்துடன் கீழே இறங்குகிறது.லிப்டில்[தூக்கி]உள்ள நபரின் எடையில் ஏற்படும் சதவீத மாற்றம் யாது?

  9. A மற்றும் b  என்ற இரு நிறை தெரியாத வெவ்வேறு பொருள்கள் மோதிக் கொள்கின்றன. தொடக்கத்தில் பொருள் மோதிக் A ஓய்வு நிலையிலும் B ஆனது v வேகத்தையும் கொண்டுள்ளது.மோதலுக்கு பின் பொருள்  B ஆனது \(\frac { V }{ 2 } \) என்ற வேகத்தையும் பெற்று அதன் ஆரம்ப இயக்க திசைக்கு செங்குத்தாகச் செல்கிறது, மோதலுக்குபின் பொருள் A செல்லும் திசையைக் காண்க

  10. ஒரு பொருள் ஆய ஆச்சு அமைப்பின் x அச்சு வழியே இயங்குமாறு ஒரு நிலையான விசை \(\overrightarrow { F } =(2\hat { i } -\hat { j } +4\hat { k } )N,\)க்கு உட்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகிறது. எனில் x அச்சில் 4 மீ தொலைவிற்கு பொருளை நகர்த்தி செய்யப்பட்ட வேலை யாது?

  11. சீரான வடிவம் கொண்ட பொருட்களில் நிறைமையம் எங்கு அமையும் ? எ.கா தருக

  12. எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)

  13. புவிப் பரப்பிலிருந்து எறியப்பட்ட பொருள் ஒன்று சுழி அல்லாத இயக்க ஆற்றலுடன் \(\left[ K.E(r=\infty )=\frac { 1 }{ 2 } { Mv }_{ \infty }^{ 2 } \right] \)ஈறிலாத் தொலைவை அடைகிறது எனில் புவிப்பரப்பிலிருந்து அப்பொருள் எறியப்பட்ட வேகம் யாது?

  14. கலிலியோவின் கண்டுபிடிப்பு யாது?

  15. 100 cm பக்கத்தைக் கொண்ட ஒரு உலோக கனசதுரம் அதன் முழு பக்கங்களிலும் செயல்படும் சீரான செங்குத்து விசைக்கு உட்படுத்தப்படுகிறது. அழுத்தம் 106 பாஸ்கல் பருமன் 1.5 x 10-5m3 என்ற அளவு மாறுபாடு அடைந்தால், பொருளின் பருமக்குணத்தைக் கணக்கீடுக.

  16. பெர்னெளலி தேற்றத்தின் பயன்பாடுகள் யாவை?    

  17. நிலை மாறிகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  18. வெப்ப ஏற்புத்திறன் வரையறு.

  19. சராசரி மோதலிடைதூரத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

  20. இயக்கவியற்கொள்கையின் அவசியம் யாது?

  21. தனி ஊசலின் விதிகளைத் தருக?

  22. ஒரு தனிசீரிசை இயக்கத்தில் ஒரு துகள் 2cm தொலைவிற்கு பெரும இடப்பெயர்ச்சியடைகிறது. 2cm/s2 ல் சராசரி தொலைவிலிருந்து 0.5cm தொலைவில் முடுக்கம் அடைகிறது. சராசரிப் புள்ளியிலிருந்து 1cm தொலைவில் உள்ளதுபோது திசைவேகம் யாது?

  23. கீழ்க்கண்ட தொடர்புகளைக் கருதுக
    (a) y = x2 + 2 ∝ tx
    (b) y = (x + vt)2
    மேற்கண்டவற்றுள் எது அலையைக் குறிக்கிறது.

  24. நெட்டிலையின் அலைநீளம் வரையறு.

  25. x அச்சினை கிழக்குத் திசையாகவும் y அச்சினை வடக்குத்திசையாகவும் மேலும் z அச்சினை செங்குத்தான மேல் நோக்கிய திசையாகவும் கருதி கீழ்க்கண்டவற்றை வெக்டர் முறையில் குறிப்பிடுக.
    a) 5 மீட்டர் வட கிழக்கு மற்றும் 2 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
    b) 4 மீட்டர் தென்கிழக்கு மற்றும் 3 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
    c) 2 மீட்டர் வடமேற்கு மற்றும் 4 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடைகள் ( 11th Physics - Important 2 mark questions )

Write your Comment