Volume I- Model Test Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை எழுதுக.
Time : 02:00:00 Hrs
Total Marks : 80

    5 மதிப்பெண் வினாக்கள் 

    16 x 5 = 80
  1. ஒரு எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg. 1 mg ல் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்.

  2. ஒரு சமுத்திர (ocean) கண்காணிப்பு அமைப்புக் கப்பலில் ஒரு ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. எதிரிக் கப்பலிலிருந்து எதிரொளிக்கப்பட்ட ரேடியோ அலைகளின் காலதாமதம் 5.6 s. இரு கப்பல்களுக்குக்கிடையேயான தொலைவினைக் கணக்கீடு.

  3. வெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm,  2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க. 

  4. இரு வெவ்வேறு நேரங்களில் சமதளத்தில் செங்குத்தாக நிறுத்தப்பட்ட கம்பத்தின் வெவ்வேறு நேரங்களில் ஏற்படும் நிழல்களின் முனையிலிருந்து சூரியினின் ஏற்றக்கோணம் 60° மற்றும் 30° ஆக பெறப்படும் புள்ளிகள் 45 m தொலைவில் உள்ளன எனில் கம்பத்தின் உயரத்தை கணக்கிடுக. \(\left[ \sqrt { 3 } =1.73 \right] \)   

  5. சீரற்ற வட்ட இயக்கத்தின் தொகுபயன் முடுக்கத்திற்கான கோவையைப் பெறுக.

  6. சீரற்ற இயக்கத்தில் உள்ள பொருள்களின் திசை வேக மாற்றத்தால் ஏற்படும் இயக்க வகை யாது? அதன் வகைகளை விவரி.

  7. கிடைத்தளத்துடன் 60° கோணத்தில் சாய்ந்துள்ள, சாய்தளத்தின்மீது m நிறையுள்ள பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. அப்பொருள் \(g \over 2\) என்ற முடுக்கத்துடன் கீழ்நோக்கிச் சறுக்கி சென்றால் அப்பொருளின் இயக்க உராய்வு குணகத்தைக் காண்க.

  8. நிலா, புவியினை வட்டப்பாதைக்கு ஒத்த ஒரு பாதையில் 27.3 நாட்களில் முழுமையாகச் சுற்றி வருகிறது. புவியின் ஆரம் 6.4 × 106 m எனில் நிலாவின் மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்தைக் காண்க.

  9. சமதளப் பரப்பில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு பொருட்களில் விசை எவ்வாறு செயல்படுகிறது? இது நியூட்டனின் 3ம் விதியை எவ்வாறு உறுதிப்படுத்திக்கிறது?

  10. ஒரு பரிமாண மிட்சி மோதலில் பொருட்களின்  திசைவேகத்திற்கான சமன்பாட்டைத் தருவித்து , அதன் பல்வேறு நேர்வுகளை விவரி. 

  11. 2 Kg நிறையுள்ள ஒரு துகள் \({ v }_{ i }=(2\hat { i } -3\hat { j } )m/s\)திசை வேகத்தில் இயங்குகிறது. 2 kg நிறையுள்ள மற்றொரு துகளின் திசை வேகம் \(\overrightarrow { { v }_{ i } } =(3\hat { j } +6\hat { k } )m/s\) யுடன் முழுமீட்சியற்ற மோதலை அடைகிறது. துகளின் திசைவேகம் மற்றும் வேகத்தைக் கண்டுபிடி. 

  12. மீட்சியளிப்பு குணகம் 'e' என்பதை விவரி. 

  13. 50 kg நிறையுள்ள ஒரு மனிதர் நிலையான நீரின் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் 300 kg நிறையுடைய படகில் ஒரு முனையில் நின்று கொண்டிருக்கிறார். அவர் தரையில் நிலையாக உள்ள ஒருவரை பொருத்து படகின் மறுமுனையை நோக்கி 2 m s-1 என்ற மாறா திசைவேகத்தில் நடந்து செல்கிறார். (a) நிலையான உற்றுநோக்குபவரை பொருத்தும் (b) படகில் நடந்து கொண்டிருக்கும் மனிதரைப் பொருத்தும் படகின் திசைவேகம் என்ன?

    [தகவல்: படகுக்கும் மனிதருக்கும் இடையே உராய்வு உள்ளது. ஆனால் படகுக்கும் நீருக்கும் இடையே உராய்வு கிடையாது.]

  14. பளு தூக்கி ஒன்றின் கரத்தின் நீளம் 20 m அக்கரமானது செங்குத்து அச்சோடு 30o கோணத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 2 டன் எடையானது கரத்தால் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. பளுதூக்கியின் கரம் பொருத்தப்பட்ட நிலையான புள்ளியைப் பொருத்து புவியீர்ப்புவிசை ஏற்படுத்திய திருப்பு விசையைக் காண்க.
    [தகவல்: 1 டன் =1000 kg; g=10 m s-2, கரத்தின் எடை புறக்கணிக்கத்தக்கது]

  15. 500 g நிறையும் 10 cm ஆரமும் கொண்ட வட்டத்தட்டு ஒன்று தன்னிச்சையாக படத்தில் காட்டப்பட்டது போல நிலையான அச்சைப் பொருத்துச் சுழல்கிறது. எடையற்ற மற்றும் மீட்சித் தன்மையற்ற கம்பியானது வட்டத்தின் விளம்பில் சுற்றுகள் சுற்றப்பட்டு மற்றொரு முணையானது 100 g நிறையுடன் இணைக்கப்பட்ணைக்கப்பட்டுள்ளது. 100 g நிறையின் முடுக்கத்தை காண்க. [தகவல் : கம்பியானது வட்டத்தட்டின் விளிம்பில் நழுவவில்லை. மாறாக வட்டத்தட்டுடன் சுழல்கிறது g = 10 m s-2]

  16. திருபுத்திரங்களின் தத்துவத்தை விவரி?

*****************************************

Reviews & Comments about +1 இயற்பியல் தொகுதி 1 மாதிரிதேர்வு வினாத்தாள் ( +1 Physics Volume I- Model Test Question Paper )

Write your Comment