11-Std Creative Five Marks Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    20 x 5 = 100
  1. கணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.

  2. புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.

  3. கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?

  4. கணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.

     
    சொத்துகள்
    = பொறுப்புகள் + முதல்
    அ] ரூ 20,000 = ரூ 15,000 + ?
    ஆ] ? = ரூ 5,000 + ரூ 10,000
    இ] ரூ 10,000 = ? + ரூ 8,000
  5. குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

    ரொக்கம் ரூ 2,000
    இயந்திரம் ரூ 50,000
    அறைகலன் ரூ 5,000
    கடனீந்தோர்கள் ரூ 13,000
    கடனாளிகள் ரூ 18,000
  6. திருமதி. பானுமதியின் குறிப்பேட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைக்களைப் பதிவு செய்க.

    டிசம்பர் 2017   ரூ
    3 ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது 84,500
    7 தனலட்சுமிக்கு கடனாக சரக்கு விற்றது 55,000
    9 கழிவு பெற்றது 3,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 1,09,000
    12 மகாலட்சுமியிடமிருந்து சரக்கு வாங்கியது 60,000
    15 ரேவதி அண்டு கோவிடமிருந்து 5 நாற்காலிகள் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது 2,000
    20 ரேவதி அண்டு கோவுக்கு ரொக்கம் செலுத்தி கடனைத் தீர்த்தது 2,000
    28 ஊதியம் வழங்கியது வாடகை செலுத்தியது 5,000
  7. கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.

    அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது  ரூ 25,000
    ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000
    இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000
    ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000
  8. கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு.இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து, பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க.

    2017 ஜூன்    ரூ 
    1 இரவி தொழில் தொடங்க முதலீடு செய்தது  5,00,000
    3 வங்கியில் செலுத்தியது  80,000
    5 கட்டம் வாங்கியது  3,00,00
    7 சரக்கு வாங்கியது  70,000
    10 சரக்கு விற்றது  80,000
    15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது  10,000
    25 மின்கட்டணம் செலுத்தியது  3,000
    30 ஊதியம் வழங்கியது  15,000
  9. கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து இயந்திரக் கணக்கைத் தயாரிக்கவும்.

    2012
    ஜனவரி 
      ரூ 
    1 கையிலிருந்த இயந்திரத்தின் மதிப்பு  4,000
    3 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது  4,000
    30 ராம் அவர்களிடமிருந்து இயந்திரம் வாங்கியது  6,000
  10. அசோக் என்ற வியாபாரியின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இரும்புகளிலிருந்து 31.12.2017 ஆம் நாளைய இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.

      ரூ.   ரூ.
    கட்டடம் 20,000 போக்குவரத்து செலவுகள் 3,500
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 3,000 சம்பளம் 5,600
    கடனாளிகள் 20,000 முதல் 40,000
    வங்கி ரொக்கம் 16,800 அறைகலன் 10,000
    வாடகைப் பெற்றது 5,000 மோட்டார் வாகனம் 5,000
    நன்கொடை அளித்தது 2,500 புனையுரிமை  2,000
    பெற்ற கடன் 42,000 நற்பெயர் 3,000
    காப்பீடு செலுத்தியது 1,600    
  11. திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

    2018 மார்ச் 1 சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது.
    5 ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது 
    12 திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. 
    18 சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது.
    20 சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது
  12. திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.

        ரூ 
    2017
    செப்டம்பர் 1
    கையிருப்பு ரொக்கம்  19,000
    3 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது  10,000
    4 வெங்கட்டிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது  18,000
    6 மோகனிடமிருந்து பெற்றது 4160,தள்ளுபடி அளித்தது  40
    8 மின்கட்டணம் செலுத்தியது  850
    9 வங்கியில் பணம் செலுத்தியது  20,000
    14 வெங்கட்டிற்கு ரூ. 17,600 செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. 4,800
    24 வேல்முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது  4,000
    26 சம்பளம் கொடுத்தது  4,000
    28 வங்கியிலிருந்து பணம் எடுத்தது 5,000
  13. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
    [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
    [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
    [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
    [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

  14. திரு. கணேசன் என்பவரின் ஏடுகளில் கண்டுபிடிக்கப்பட கீழ்க்காணும் பிழைகளைத் திருத்துக.
    அ] கொள்முதல் திருப்ப ஏடு ரூ 1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
    ஆ] சங்கரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 2,000 அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
    இ] விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ 1,500 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
    ஈ] கீதாவிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ 1,500 ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது. ஆனால் கீதா கணக்கில் எழுத்தெழுதப்படவில்லை.
    உ] அரைகலன் விற்றது ரூ 2,000 சரக்கு விற்றது என பதியப்பட்டுள்ளது.  

  15. திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

  16. குமரன் பிரதர்ஸ்  நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.

  17. பாரத் நிறுமம் கீழ்க்கண்ட செலவுகளைச் செய்ததது. முதலின, வருவாயின மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளாகப் பிரிக்கவும்.
    1. விற்பனையைப் பெருக்குவதற்கு விற்பனை மேலாளர் ஐப்பான் சென்றுவர பயணச் செலவு செய்தது  ரூ 60,000
    2. இயந்திரம் நிறுவுவதற்கு செலவு செய்தது ரூ 500.
    3. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்தது ரூ 6,00,000
    4. எரிபொருள் வாங்க செலவு செய்தது ரூ 500.   

  18. திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.

    பற்று இருப்பு  ரூ  வரவு இருப்பு ரூ
    கொள்முதல்  70,000 முதல் கணக்கு  56,000
    விற்பனைத் திருப்பம்  5,000 விற்பனை  1,50,000
    தொடக்கச் சரக்கிருப்பு   20,000 கொள்முதல் திருப்பம்  4,000
    தள்ளுபடி கொடுத்தது   2,000 தள்ளுபடி பெற்றது  1,000
    வங்கி கட்டணம்  500 கடனீந்தோர்      30,000
    சம்பளம்  4,500    
    கூலி  5,000    
    உள் ஏற்றிச் செல் செலவு  4,000    
    வெளி  ஏற்றிச் செல் செலவு 1,000    
    வாடகை மற்றும் வரி  5,000    
    ரொக்க கையிருப்பு    1,000    
    பொறியும் பொறித் தொகுதியும்   50,000    
    பற்பல கடனாளிகள்  60,000    
    வங்கியிருப்பு     7,000    
    விளம்பரம்  6,000    
      2,41,000   2,41,000
  19. 31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி பற்பல கடனாளிகள் ரூ 1,25.000.
    சரிக்கட்டுதல்கள்:
     1.ரூ 5,000 வாராக்கடன் போக்கெழுதுக.
    2.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
    3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
    சரிகட்டுப்பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.      

  20. கணினிமயக் கணக்கியல் முறையின் வகைகளை விளக்குக.ஏதேனும் மூன்றினை விளக்குக.  

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் 5 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Accountancy Important 5 mark Creative Questions 2019 )

Write your Comment