11th Public Exam March 2019 Important One Marks Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    50 x 1 = 50
  1. 1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.

    (a)

    0%

    (b)

    4.4%

    (c)

    16%

    (d)

    8.4%

  2. சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?

    (a)

    Cu+ 2H2SO4 → CuSO4 + SO2+2H2O

    (b)

    C+ 2H2SO4 → CO2+2SO2+2H2O

    (c)

    BaCl2 + H2SO4 → BaSO4+2HCl

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

    (a)

    7.5 g ஈத்தேன்

    (b)

    8 g மீத்தேன்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை

  4. கீழ்கண்டவற்றைக் கவனி:
    I. அழுத்தம் II. வெப்பநிலை 
    இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?

    (a)

    I. மட்டும் 

    (b)

    II. மட்டும் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இரண்டும் இல்லை 

  5. அவகாட்ரோ எண்ணின் அலகு

    (a)

    g mol-1

    (b)

    kg/mol

    (c)

    amu 

    (d)

    அலகு இல்லை 

  6. போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

    (a)

    n = 6 இல் இருந்து n = 1

    (b)

    n = 5 இல் இருந்து n = 4

    (c)

    n = 5 இல் இருந்து n = 3

    (d)

    n = 6 இல் இருந்து n = 5

  7. பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே  பெற்றிருப்பது எது?

    (a)

    \(d_{Z^{2}}\),dxy

    (b)

    dxy,dyz

    (c)

    \(d_{Z^{2}}\),\(d_{x^{2}-y^{2}}\)

    (d)

    dxy,\(d_{x^{2}-y^{2}}\)

  8. பின்வருவனவற்றுள்,  ஹெய்சன் பர்கின் நிச்சயமற்றத் தன்மையினைக் குறிப்பிடாத  சமன்பாடு எது?

    (a)

    \(\Delta x.\Delta p\ge \frac{h}{4\pi}\)

    (b)

    \(\Delta x.\Delta v\ge\frac{h}{4\pi m} \)

    (c)

    \(\Delta E.\Delta t \ge \frac{h}{4\pi}\)

    (d)

    \(\Delta E.\Delta x\ge \frac{h}{4\pi}\)

  9. l=2 என்ற மதிப்பினை உடைய ஆர்பிட்டால்

    (a)

    s -ஆர்பிட்டால்

    (b)

    p-ஆர்பிட்டால்

    (c)

    d-ஆர்பிட்டால்

    (d)

    f-ஆர்பிட்டால்

  10. பின்வரும் நீல்ஸ்போரின் அணு மாதிரி கருதுகோள்கள் கவனி.
    I. எலக்ட்ரானின் ஆற்றல் வரையறுக்கப்பட்ட மதிப்புகளைப் பெற்றிருக்கும்.
    II. எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி சில குறிப்பிட்ட ஆற்றலுடைய ஆர்பிட் எனும் வட்டப்பாதையில் மட்டும் சுற்றி வருகின்றன.
    III. ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றிவரும் எலக்ட்ரானின் கோண உந்த மதிப்பு ஆனது \(\frac {h }{4}\pi\)ன் முழு எண் மடங்காக இருக்கும்.
    IV. எலக்ட்ரானது ஒரு குறிப்பிட்ட நிலை வட்டப்பாதையில் சுற்றி வரும் வரையில் அதன் ஆற்றலை இழப்பதில்லை. இவற்றுள் தவறான கூற்று எது?

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  11. ஜகன் மதிப்பேடு தொடர்புடைய ஜகன் சார்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    குவாண்டம் எண்கள்

    (b)

    அணு ஆர்பிட்டால்கள்

    (c)

    ஆரப்பங்கீட்டு சார்பு

    (d)

    இவை அனைத்தும்

  12. வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான் (differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.

    (a)

    p-தொகுதி தனிமங்கள்

    (b)

    d-தொகுதி தனிமங்கள்

    (c)

    s-தொகுதி தனிமங்கள்

    (d)

    f -தொகுதி தனிமங்கள்

  13. நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    சோடியம்

    (c)

    ஆர்கான்

    (d)

    புளூரின்

  14. Na, Mg மற்றும் Si ஆகியவைகளின் முதல் அயனியாக்கும் ஆற்றல் முறையே 496, 737 மற்றும் 786 kJ mol-1 ஆகும்.AI-ன் அயனியாக்கும் ஆற்றல் பின்வரும் எந்த மதிப்பிற்கு அருகில் இருக்கும்

    (a)

    760kj mol-1

    (b)

    575kj mol-1

    (c)

    801kj mol-1

    (d)

    419kj mol-1

  15. பின்வரும் தனிம ஜோடிகளுள் மூலைவிட்ட தொடர்பினை காட்டுவது எது?

    (a)

    Be மற்றும் Mg

    (b)

    Li மற்றும் Mg

    (c)

    Be மற்றும் B

    (d)

    Be மற்றும் Al

  16. பின்வருவனவற்றுள் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பினால் ஏற்படும் விளைவு

    (a)

    அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை அதிகரிக்கச் செய்யும்

    (b)

    அணு ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (c)

    அயனி ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  17. பின்வருவனவற்றை கவனி
    I. அணு ஆரம்  II. எலக்ட்ரான் நாட்டம்  III. எலக்ட்ரான் கவர்தன்மை  IV. எலக்ட்ரான் நாட்டம் இவற்றில் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  18. கூற்று (A): F ஐவிட Cl- எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகம்
    காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை

    (a)

    கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

    (b)

    (A) என்பது சரியான கூற்று (R) என்பது தவறான விளக்கம்

    (c)

    (A) சரி, (R) சரி, (R) என்பது சரியான விளக்கம்

    (d)

    (A) தவறு, (R) தவறு

  19. A, B மற்றும் C தனிமங்களின் முதல் அயனியாக்கும் ஆற்றல் (IE1) மற்றும் அயனியாக்கும் ஆற்றல் (IE2) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    தனிமம்  A B C
    IE1 kJ mol-1 2370 522 1680
    IE2 kJ mol-1 5250 7298 3381

     மேற்கண்ட எந்த தனிமம் அதிக வினைபுரியும் உலோகம்?

    (a)

    A

    (b)

    B

    (c)

    C

    (d)

    A மற்றும் C

  20. ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு

    (a)

    1.2g

    (b)

    2.4g

    (c)

    3.6g

    (d)

    \(\sqrt{4.8}g\)

  21. 1.5 N H2O2 ன் கனஅளவுச் செறிவு

    (a)

    1.5

    (b)

    4.5

    (c)

    16.8

    (d)

    8.4

  22. H2O மற்றும் H2O2 மூலக்கூறுகள் உள்ள ஆக்ஸிஜன் அணுவின் இனக்கலப்பாதல் முறையே

    (a)

    SP மற்றும் SP3

    (b)

    SP மற்றும் SP

    (c)

    SP மற்றும் SP2

    (d)

    SP3 மற்றும் SP3

  23. கனநீர் பயன்படுவது

    (a)

    அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி

    (b)

    அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவும் இல்லை

  24. அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள் 

    (a)

    நிறமற்றது

    (b)

    மரச்சாம்பல்

    (c)

    மணமுடையது

    (d)

    சுவையுடையது

  25. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதாக இழந்தால் அது

    (a)

    எதிர்மின் தன்மை உடையது

    (b)

    நேர்மின் தன்மை உடையது

    (c)

    எலக்ட்ரான் சேர்த்தல்

    (d)

    அயனித் தன்மை

  26. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

    (a)

    ஆக்சி டியூட்ரியம் 

    (b)

    நீர்

    (c)

    கனநீர்

    (d)

    மேற்கூரிய அனைத்தும் 

  27. H2O2 பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

    (a)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த நீர் நீக்கி

    (b)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி 

    (c)

    H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஒடுக்கி

    (d)

    மேற்கண்ட அனைத்தும் சரி

  28. கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
    \({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)

    (a)

    Na

    (b)

    Li

    (c)

    Rb

    (d)

    K

  29. பெரிலியத்தின் சூழலைப் பொருத்து , பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

    (a)

    நைட்ரிக் அமிலம் இதை செயலற்றதாக்குகிறது

    (b)

    Be2C ஐ உருவாக்குகிறது

    (c)

    இதன் உப்புகள் அரிதாக நீராற்பகுக்கப்டுகின்றன.

    (d)

    இதன் ஹைட்ரைடு எலக்ட்ரான் குறைவுள்ளது,மற்றும் பலபடி அமைப்புடையது.

  30. நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் _____ என அறியப்படுகிறது?

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    சுட்ட சுண்ணாம்பு

    (c)

    சுண்ணாம்பு பால்

    (d)

    நீற்ற சுண்ணாம்புக் கரைசல்

  31. இரண்டாம் தொகுதியில் மேலிருந்து கீழ்ச் செல்ல அயனி ஆராய்க.

    (a)

    பொதுவாக குறைகிறது

    (b)

    பொதுவாக அதிகரிக்கிறது

    (c)

    அதிகரித்து பின்னர் குறைகிறது

    (d)

    மாற்றமடைவதில்லை

  32. பின்வரும் சேர்மங்களை நன்கு கவனி:
    I.கால்சியம் ஆக்ஸைடு
    II.கால்சியம் ஹைட்ராக்சைடு
    III.கால்சியம் நைட்ரேட்
    IV.கால்சியம் சல்பேட்
    இவற்றுள்,சுட்ட சுண்ணாம்பு எனப்படுவது.

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  33. கடல் நீரில் அதிக அளவில் கரைந்துள்ள மூன்றாவது தனிமம்

    (a)

    பெரிலியம்

    (b)

    பேரியம்

    (c)

    கால்சியம்

    (d)

    மெக்னீசியம்

  34. பின்வருவனவற்றுள் சரியானது எது?

    (a)

    லித்தியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Li3N ஐ தருகிறது.

    (b)

    மெக்னீசியம் நைட்ரஜனுடன் நேரடியாக இணைந்து Mg3N ஐ தருகிறது

    (c)

    (அ) மற்றும் (ஆ) சரி

    (d)

    லித்தியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய இரண்டும் பைகார்பனேட்டுகளை உருவாக்குகின்றன.

  35. ஒரு வாயுவின் விரவுதலின் வீதம் 

    (a)

    அதன் அடர்த்திக்கு நேர்விகித தொடர்புடையது

    (b)

    அதன் மூலக்கூறு எடைக்கு நேர்விகித தொடர்புடையது 

    (c)

    மூலக்கூறு எடையின் வர்க்கமூலத்திற்கு நேர்விகித தொடர்புடையது

    (d)

    மூலக்கூறு எடையின் வர்க்க மூலத்திற்கு எதிர்விகித தொடர்புடையது.

  36. அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?

    (a)

    குழாயின் நடுப்பகுதியில்

    (b)

    ஹைட்ரஜன் குளோரைடு குடுவையருகில்

    (c)

    அம்மோனியா குடுவையருகில்

    (d)

    குழாயின் முழுநீளத்திலும் முழுமையாக 

  37. 400K ல் 71.0 bar CO2 ன் அமுக்கத்திறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2 ன் மோலார் கனஅளவு

    (a)

    22.04 dm3

    (b)

    2.24 dm3

    (c)

    0.41 dm3

    (d)

    19.5dm3

  38. மாறாத அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கனஅளவின் ஒப்பீட்டு அதிகரிப்பு ஆகும். அதாவது \(\alpha =\frac { 1 }{ V } { \left( \frac { \partial V }{ \partial T } \right) }_{ p }\)நல்லியல்பு வாயுக்களுக்கான α மதிப்பு

    (a)

    T

    (b)

    1/T

    (c)

    P

    (d)

    ஏதும் இல்லை

  39.  வாண்டாவால்ஸ் சமன்பாட்டில் அழுத்தத்திற்கான திருத்தம் 

    (a)

    \(P+\frac { { V }^{ 2 } }{ { a }^{ 2 }n } \)

    (b)

    \(P+\frac { { { a }^{ 2 }n }^{ 2 } }{ { v }^{ 2 } } \)

    (c)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v }^{ 2 } } \)

    (d)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v } } \)

  40. ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வெப்பமடைகிறது 

    (b)

    குளிர்ச்சியடைகிறது 

    (c)

    வெடிக்கிறது 

    (d)

    a & b 

  41. ஒரு வாயு கீழ்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைகிறது 

    (a)

    அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம் 

    (b)

    குறைந்த அழுத்தம்

    (c)

    குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம் 

    (d)

    அதிக வெப்பநிலை

  42. கீழ்க்கண்டவற்றுள் பாயில் விதியை சரியாகக் குறிக்கும் படம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

    இவை அனைத்தும் 

  43. C(g)+O2(g)→ CO2 (g) ΔH° = – a kJ; 2 CO(g) + O2(g) → 2CO2(g) ΔH° = –b kJ; எனில் C(g) + ½O2(g) → CO(g) என்ற வினைக்கு  ΔH0 மதிப்பு 

    (a)

    \(\frac{b+2a}{2}\)

    (b)

    2a-b

    (c)

    \(\frac{2a-b}{2}\)

    (d)

    \(\frac{b-2a}{2}\)

  44. 0°C வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் 15.68L மீத்தேன் மற்றும் புரப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதேவெப்ப அழுத்தநிலையில் 32L ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்  

    (a)

    – 889 kJ

    (b)

    – 1390 kJ

    (c)

    – 3180 kJ

    (d)

    – 635.66 kJ

  45. C (வைரம்) ➝ C(கிராஃபைட்) ΔHஎதிர்க்குறியுடையது இது குறிப்பிடும்போது

    (a)

    வைரத்தைவிட கிராஃபைட் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது

    (b)

    வைரத்தைவிட கிராஃபைட் அதிக நிலைப்புத்தன்மை கொண்டது

    (c)

    இரண்டும் சமநிலைப்புத் தன்மை கொண்டவை

    (d)

    நிலைப்புத்தன்மை நிர்ணயிக்க இயலாது

  46. Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596kj மற்றும் -1134 kJ எனில் 2AI+Cr2O3 ⟶ 2Cr+Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு

    (a)

    -1365 kJ

    (b)

    2730 kJ

    (c)

    -2730 kJ

    (d)

    -462 kJ

  47. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

    (a)

    \(G=\triangle E+P\triangle V\)

    (b)

    E=q + w

    (c)

    \(\triangle H= \triangle G+T\triangle S\)

    (d)

    \(G= \triangle H-T\triangle S\)

  48. என்ட்ரோபியை அறிமுகப்படுத்திய வெப்ப இயக்கவியல் விதி 

    (a)

    முதல் விதி 

    (b)

    இரண்டாம் விதி 

    (c)

    மூன்றாம் விதி 

    (d)

    பூஜ்ஜிய விதி 

  49. சரியான சமன்பாட்டை தேர்ந்தெடு 

    (a)

    \(\eta={T_1-T_2\over T_1}\times 100\)

    (b)

    \(\eta={T_1T_2\over T_1+T_2}\times 100\)

    (c)

    \(\eta={T_1+T_2\over T_1}\times 100\)

    (d)

    \(\eta={T_1-T_2\over T_1T_2}\times 100\)

  50. வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை 

    (a)

    விரிவாக விளக்குகிறது 

    (b)

    கணிதவியல் முறைப்படி விளக்குகிறது 

    (c)

    இயற்பியல் முறைப்படி விளக்குகிறது 

    (d)

    விளக்குவதில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important One Marks Questions )

Write your Comment