New ! கணிதம் MCQ Practise Tests



இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை ______.

    (a)

    x2+3y2=0

    (b)

    x2-3y2=0

    (c)

    3x2+y2=0

    (d)

    3x2-y2=0

  2. 3x-y=-5 என்ற கோட்டுடன் 450 கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்______.

    (a)

    1,-1

    (b)

    \(\frac { 1 }{ 2 } \),-2

    (c)

    1,\(\frac { 1 }{ 2 } \)

    (d)

    2,-\(\frac { 1 }{ 2 } \)

  3. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள் ______.

    (a)

    5, –5

    (b)

    5, 5

    (c)

    5, 3

    (d)

    5, –4

  4. 5x – y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு ______.

    (a)

    x+5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (b)

    x-5y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (c)

    5x+y\(\pm 5\sqrt { 2 } \)=0

    (d)

    5x-y\(\pm 5\sqrt { 2 } \)=0

  5. ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம் ______.

    (a)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (b)

    6

    (c)

    \(\sqrt { 6 } \)

    (d)

    3\(\sqrt { 2 } \)

  6. y= –x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி ______.

    (a)

    (–3, –2)

    (b)

    (–3, 2 )

    (c)

    (–2, –3)

    (d)

    ( 3, 2 )

  7. 2x-3y+1=0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு ______.

    (a)

    \(\frac { 3 }{ 2 } \)

    (b)

    \(\frac { 9 }{ 2 } \)

    (c)

    \(\frac { 2 }{ 3 } \)

    (d)

    \(\frac { 2 }{ 9 } \)

  8. ஒரு சதுரத்தின் ஒரு முனை ஆதியாகவும் மற்றும் அதன் ஒரு பக்கம் 4x+3y-20=0 என்ற கோட்டின் மீதும் அமைந்திருந்தால், அந்தச் சதுரத்தின் பரப்பு ______.

    (a)

    20 சஅ

    (b)

    16 சஅ

    (c)

    25 சஅ

    (d)

    4 சஅ

  9. x2-4y2=0 மற்றும் x = a என்ற கோடுகளால் உருவாக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு ______.

    (a)

    2a2

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)a2

    (c)

    \(\frac { 1 }{ 2 } \)a2

    (d)

    \(\frac { 2 }{ \sqrt { 3 } } \)a2

  10. x2-xy-6y2=0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் ፀ எனில் \(\frac { 2\cos\theta +3\sin\theta }{ 4\sin\theta +5\cos\theta } \)-ன் மதிப்பு ______.

    (a)

    1

    (b)

    -\(\frac { 1 }{ 9 } \)

    (c)

    \(\frac { 5 }{ 9 } \)

    (d)

    \(\frac { 1 }{ 9 } \)

  11. 6 x 2 = 12
  12. \(\left( ct,\frac { c }{ t } \right) \) என்ற புள்ளி நகர்வதால் உண்டாகும் பாதையைக் காண்க.இங்கு t ≠ 0 என்பது துணையலகு மற்றும் c என்பது ஒரு மாறிலியாகும்.

  13. ஒரு நேர்க்கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்தின் நீளம் 12 மற்றும் x -அச்சுடன் மிகை திசையில் ஏற்படுத்தும் கோணம் 1500 எனில், கோட்டின் சமன்பாட்டைக் காண்க.

  14. கீழ்க்காண்பவற்றிற்கு தீர்வு காண்க. 3x + 4y = 12 மற்றும் 6x + 8y + 1 = 0 இடையே உள்ள தூரம்.

  15. \(\sqrt { 3 } \)x-y+4=0 என்ற கோட்டை கீழ்க்காணும் சமான வடிவத்திற்கு மாற்றுக. வெட்டுத்துண்டு வடிவம்

  16. x-2y-3=0 மற்றும் x+y+5=0 என்ற தனித்தனிச் சமன்பாடுகளைக் கொண்ட கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டைக் காண்க.

  17. 6 x 3 = 18
  18. (5, 7) மற்றும் (7, 5) என்ற புள்ளிகள் வழியே செல்லக்கூடிய நேர்க்கோட்டின் சாய்வைக் காண்க. மேலும் x-அச்சுடன் ஏற்படுத்தும் சாய்வுக் கோணத்தைக் காண்க.

  19. (a sec θ,b tan θ) என்ற நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க. இங்கு θ என்பது துணையலகு ஆகும்.

  20. ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
    (i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
    (ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
    (iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் கண்க.

  21. (3, 5) மற்றும் (1,-1) என்ற புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் வர்க்கங்களின் கூடுதல் 20-க்கு சமம் எனில் அப்புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க

  22. 3x + 4y + 2 = 0 மற்றும் 5x + 12y – 5 = 0 என்ற இரு கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தின் இருசமவெட்டியின் சமன்பாட்டைக் காண்க.

  23. 2x2+3xy-2y2+3x+y+1=0 என்ற கோடு ஒரு செங்குத்து இரட்டை நேர்க்கோடு எனக் காட்டுக.

  24. 2 x 5 = 10
  25. A(1,-6) மற்றும் B(4,-2) என்ற புள்ளிகளை இணைக்கும் AB கோட்டுட்டுத் துண்டானது புள்ளி P-ல் தாங்கும் கோணம் செங்கோணம் எனில், புள்ளி P-ன் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.

  26. (-4, 0) மற்றும் (4,0) ஆகிய புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் கூடுதல் எப்போதும் 10 அலகுகள் எனில், நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் Chapter 6 இருபரிமாண பகுமுறை வடிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Maths Chapter 6 Two Dimensional Analytical Geometry Model Question Paper )

Write your Comment