New ! கணிதம் MCQ Practise Tests



நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. {1, 2,3, 20 ...,} என்ற கணத்திலிருந்து ஒரு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் 3 அல்லது 4 ஆல் வகுப்படுவதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(\frac {2}{5}\)

    (b)

    \(\frac {1}{8}\)

    (c)

    \(\frac {1}{2}\)

    (d)

    \(\frac {2}{3}\)

  2. ஒரு நபரின் கைப்பையில் 3 ஐம்பது ரூபாய் நோட்டுகளும், 4 நுறு ரூபாய் நோட்டுகளும் மற்றும் 6 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் உள்ளன. அவற்றிலிருந்து எடுக்கப்படும் இரு நோட்டுகளை நுறு ரூபாய் நோட்டுகளாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவின் சாதக விகிதமானது______.

    (a)

    1:12

    (b)

    12:1

    (c)

    13:1

    (d)

    1:13

  3. வரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(\frac {3}{16}\)

    (b)

    \(\frac {3}{8}\)

    (c)

    \(\frac {1}{4}\)

    (d)

    \(\frac {5}{8}\)

  4. ஒரு பையில் 6 பச்சை, 2 வெள்ளை மற்றும் 7 கருப்பு நிற பந்துகள் உள்ளன. இரு பந்துகள் ஒரே சமயத்தில் எடுக்கும்போது அவை வெவ்வேறு நிறமாக இருப்பதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    \(\frac{68}{105}\)

    (b)

    \(\frac{71}{105}\)

    (c)

    \(\frac{64}{105}\)

    (d)

    \(\frac{73}{105}\)

  5. X மற்றும் Y என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(X /Y)=\(\frac{1}{2}\), P(Y/X)=\(\frac{1}{3}\).P(X⋂Y)=\(\frac{1}{6}\) எனில் P(XUY) -ன் மதிப்பு______.

    (a)

    \(\frac{1}{3}\)

    (b)

    \(\frac{2}{5}\)

    (c)

    \(\frac{1}{6}\)

    (d)

    \(\frac{2}{3}\)

  6. A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P\((\bar { A } )\)=\(\frac{3}{10}\) மற்றும்  \(P(A\cap \bar { B } )\)=\(\frac{1}{2}\) , எனில் P(A∩B)-ன் மதிப்பு______.

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{3}\)

    (c)

    \(\frac{1}{4}\)

    (d)

    \(\frac{1}{5}\)

  7. A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(A)=0.4, P(B)=0.8 மற்றும் P(B/A)=0.6, எனில் \((P(\bar { A } \cap B)\)-ன் மதிப்பு______.

    (a)

    0.96

    (b)

    0.24

    (c)

    0.56

    (d)

    0.66

  8. a மற்றும் b-ன் மதிப்புகள் {1,2,3,4} என்ற கணத்தில் திரும்பத் திரும்ப வரும் என்ற வகையில் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டால் x2+ax+b=0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(3\over 16\)

    (b)

    \(5\over 16\)

    (c)

    \(7\over 16\)

    (d)

    \(11\over 16\)

  9. பத்து நாணயங்களைச் சுண்டும்போது குறைந்தது 8 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்வு ______.

    (a)

    \({7\over64}\)

    (b)

    \({7\over32}\)

    (c)

    \({7\over16}\)

    (d)

    \({7\over128}\)

  10. ஒரு எண் m\(\le \) 5, எனில் இருபடிச் சமன்பாடு 2x+ 2mx + m + 1 = 0-ன் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(1\over5\)

    (b)

    \(2\over5\)

    (c)

    \(3\over5\)

    (d)

    \(4\over5\)

  11. 9 x 2 = 18
  12. A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(AUB)=0.7, P(A∩B)=0.2 மற்றும் P(B)=0.5 எனில் A மற்றும் B சார்பிலா நிகழ்ச்சிகள் எனக்காட்டுக.

  13. P(A) =0.5, P(B) =0.8 மற்றும் P (B /A) = 0.8, எனில் P(A/B) மற்றும் P(AUB) காண்க.

  14. ஒரு வகுப்பில் \(\frac{2}{3}\)பங்கு மாணவர்களுக்கு மீதம் மாணவியர்களும் உள்ளனர். ஒரு மாணவி முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.85 மற்றும் மாணவர் முதல் தரத்தில் தேர்ச்சிப் பெற நிகழ்தகவு 0.70 சமவாய்ப்பு முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் முதல் தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான நிகழ்தகவு யாது? 

  15. பின்வரும் ஒன்றையொன்று விலக்கிய A,B,C மற்றும் D என்ற நான்கு நிகழ்ச்சிகளை மட்டும் கொண்டு ஒரு சோதனையின் நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகள் சாந்தியமானவையா எனத் தீர்மானிக்கவும்.
    P (A) = 0.22, P (B ) = 0.38, P (C ) = 0. 16, P (D) = 0.34

  16. A மற்றும் B ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் P(A)=\(\frac {3}{8}\) மற்றும் P(B)=\(\frac {1}{8}\) எனில் 
    (i) P(\(\bar{A}\)) (ii) P(A\(\cup \)B) (iii) P(\(\bar{A}\cap \)B) (iv) P(\(\bar {A}\cup \bar{B}\)) காண்க.

  17. ஒரு தொடர்வண்டி செல்லும் புதிய பாலத்தின் அமைப்பிற்காக விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.48 நேர்த்தியான முறையில் மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதற்கான விருது கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.36 மற்றும் மேற்கண்ட இரு விருதுகளையும் பெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில் (i) குறைந்தது ஒரு விருதாவது கிடைப்பதற்கு (ii) ஒரே ஒரு விருது மட்டும் கிடைப்பதற்கான நிகழ்தகவுகள் யாவை? 

  18. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் A, B மற்றும் C ஆகியோர் மேலாளர் ஆவதற்கான வாய்ப்புகள் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் உள்ளனர். A, B மற்றும் C ஆகியோர் மேலாளர்களாக இருந்தால் அலுவலக உணவகத்தினை மேம்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.4, 0.5 மற்றும் 0.3 ஆகும். B என்பவரை மேலாளராக நியமனம் செய்தால் அலுவலக உணவகம் மேம்படுத்துவதற்கான நிகழ்தகவு என்ன?

  19. முதல் 100 மிகை முழுக்களிலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அது ஒரு பகா எண் அல்லது 8-இன் மடங்காக இருக்க நிகழ்தகவு யாது?

  20. ஒரு பகடையை உருட்டிவிடும்போது 7 கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  21. 4 x 3 = 12
  22. முதல் 10 மிகை முழு எண்களில் இருந்து ஒரு எண் தேர்தெடுக்கப்படுகிறது. அந்த எண் (i) இரட்டைப் படை (ii) மூன்றின் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.

  23. ஓர் அலுவலகத்தில் X, Y மற்றும் Z ஆகியோர் அலுவலகத்தின் தலைமையதிகாரியாக பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் முறையே 4:2:3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. X, Y மற்றும் Z தலைமையதிகாரிகளாக பொறுப்பேற்பின் போனால் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிகழ்தகவுகள் முறையே 0.3, 0.5 மற்றும் 0.4 ஆகும். அலுவலகத்தில் போனஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பின் Z  தலைமையதிகாரியாக நியமனம் செய்யப்படுவதற்கான நிகழ்தகவினைக் காண்க.

  24. A மற்றும் B சார்பில் நிகழ்ச்சிகள் எனில்  P(A)=0.4மற்றும் P(AUB)=0.9.P(B) காண்க.

  25. 2 x 5 = 10
  26. பத்து நாணயங்கள் சுண்டப்படுகின்றன (i)சரியாக இரு தலைகள் (ii) அதிகபட்சமாக இரண்டு தலைகள் (iii)குறைந்தது இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

  27. மூன்று வாடகை மகிழுந்து நிறுவனங்களிடமிருந்து ஆலோசனை தரும் ஒரு நிறுவனம் மகிழுந்துகளை வாடகைக்கு வாங்குகிறது. 50% மகிழுந்துகளை L நிறுவனத்திடமிருந்து, 30% ஐ M-யிடமும் மற்றும் 20%-ஐ N நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது. L நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 90% ம் M நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 70%-ம் N நிறுவனத்திடமிருந்து வாங்கிய மகிழுந்துகளில் 60%-ம் நல்ல நிலைமையில் உள்ளன எனில்
    (i) ஆலோசனை நிறுவனம் வாங்கிய வாடகை மகிழுந்து நல்ல நிலைமையில் உள்ளதற்கான நிகழ்தகவு யாது? (ii) வாடகைக்கு வாங்கிய மகிழுந்து நல்ல நிலைமையில் உள்ளது. எனில் N நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டதற்கான நிகழ்தகவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணிதம் - நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Maths - Introduction To Probability Theory Model Question Paper )

Write your Comment