முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

    (a)

    0.007 m2

    (b)

    2.64 x 1024 kg

    (c)

    0.0006032 m2

    (d)

    6.3200 J

  3. CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 g cm-3 ஆகும். நீளம் 10 cm, நிறை 100 g கொண்டிருக்கும் ஓர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி_______.

    (a)

    0.04

    (b)

    0.4

    (c)

    40

    (d)

    400

  4. இதில் எது சமமானது _______

    (a)

    6400km & 6.4x 108cm 

    (b)

    2x 104cm & 2x 106mm 

    (c)

    800m & 80 x 102

    (d)

    100mm & 1mm 

  5. பருமனின் பரிமாண வாய்ப்பாடு  ______

    (a)

    L2

    (b)

    L3

    (c)

    ML3

    (d)

    M3L3

  6. பொருளொன்றின் திசைவேகம் v = (x/t) + yt எனில் x ன் பரிணாம வாய்ப்பாடு_____ 

    (a)

    ML0T0

    (b)

    M0LT0

    (c)

    MLT0

  7. பின்வருவனவற்றுள் எந்த இயற்பியல் அளவு ஸ்கேலரால் குறிப்பிட இயலாது?

    (a)

    நிறை

    (b)

    நீளம்

    (c)

    உந்தம்

    (d)

    முடுக்கத்தின் எண்மதிப்பு

  8. சமஉயரத்தில் உள்ள இரு பொருட்களில் ஒன்று தானாக கீழ்நோக்கி விழுகிறது. மற்றொன்று கிடைத்தளத்ளத்தில் எறியப்படுகிறது. ‘t’ வினாடியில் அவை கடந்த செங்குத்து தொலைவுகளின் விகிதம் என்ன?

    (a)

    1

    (b)

    2

    (c)

    4

    (d)

    0.5

  9. இரு பொருட்கள் எதிரெதிர் திசைகளில் v திசைவேகத்தில் இயங்கினால் அவற்றின் சார்புத் திசைவேகத்தின் எண் மதிப்பு____ 

    (a)

    0

    (b)

    v

    (c)

    v/2

    (d)

    2v

  10. நிலைமம் அல்லாத அமைப்பில் இரண்டாம் விதி_______

    (a)

    F=ma  

    (b)

    F=ma+Fp   

    (c)

    F=ma-Fp   

    (d)

    F=2ma  

  11. 5 x 2 = 10
  12. ஒரு கோளின் மீது ரேடார் துடிப்பினை செலுத்தி 7 நிமிடங்களுக்குப் பின் அதன் எதிரொளிக்கப்பட்ட துடிப்பு பெறப்படுகிறது. கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு 6.3 × 1010m எனில் ரேடார் துடிப்பின் திசைவேகத்தைக் கணக்கிடுக.

  13. ஒரு சோதனையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அளவீடு செய்யும் பொழுது, தனி ஊசலின் அலைவு நேரத்திற்கான பெறப்பட்ட அளவீடுகள் 2.63 s, 2.56 s, 2.42 s, 2.71 s மற்றும் 2.80 s. எனில் விழுக்காட்டுப் பிழை கணக்கிடுக.முடிவுகளை முறையான வடிவில் தருக.

  14. வில்லின் 1 செகண்டுக்கான கோணத்தை கணக்கீடு.

  15. பொருளொன்று \(\frac { \pi }{ 12 } rad{ s }^{ -1 }\) என்ற கோண வேகத்துடன் சீரான வட்ட இயக்கத்தினை மேற்கொள்கிறது. t = 0 வினாடியில் அப்பொருள் A புள்ளியிலிருந்து வட்ட இயக்கத்தினை மேற்கொள்கிறது எனக் கருதுக. 4 வினாடிகளுக்குப் பிறகு அப்பொருள் அடைந்த கோண இடப்பெயர்ச்சி என்ன?

  16. ஒரு சாலையிலுள்ள வளைவின் ஆரம் 50 மீ.ஒரு கார் அதில் வளைந்து செல்கிறது.காருக்கும், டயருக்குமான உராய்வுக் குணகம் 0.4 சறுக்கல் இல்லாமல் வளைவில் திரும்பும்போது காரின் பெரும வேகம் காண்.     

  17. 5 x 3 = 15
  18. நிறையின் பரிமாணத்தை ஆற்றல் [E], நீளம் [L] மற்றும் காலம் [T] ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடுக 

  19. இரு வெக்டர்களுக்குக்கிடைபட்ட கோணத்தை காண்.
    \(\hat { A } =\hat { i } +2\hat { j } -\hat { k } \quad \)மற்றும் \(\hat { B } =4\hat { i } +\hat { j } -2\hat { k } \)

  20. 400 g நிறை கொண்ட மாங்காய் ஒன்று மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நியூட்டனின் இரண்டாம் விதியைப் பயன்படுத்தி மாங்காயைத் தாங்கியுள்ள காம்பின் இழுவிசையைக் காண்க.

  21. 35 g நிறையுள்ள ஒரு கிரிக்கெட் பந்து ஸ்டெம்பைத் கோணத்தில் திசைவக்கத்துடன் தாக்குகிறது. பந்தினால் பெறப்பட்ட கணத்தாக்கு விசையைக் கணக்கிடுக.

  22. கிடைத்தளத்துன் \(\theta\) சாய்வுக் கோணத்தில் அமைந்த சாய்தளம் ஒன்றின் வழியே இயங்கும் m1 நிறை கொண்ட கனச் செவ்வகப் பொருள் 1, நிறையற்ற மற்றும் நீட்சித் தன்மையற்ற மெல்லிய கயிற்றினால் நிறையற்ற கப்பி ஒன்றின் வழியே m2 நிறை கொண்ட மற்றொரு கனச்செவ்வகப் பொருள் 2 உடன் இணைக்கப்பட்டுள்ளது. சாய்தளம் மற்றும் கனச் செவ்வகப் பொருள் இரண்டிற்குமான ஓய்வு நிலை உராய்வுக்குணகம் \(\mu \)s மற்றும் இயக்க உராய்வுக்குணகம் \(\mu \) என்க. அமைப்பு சறுக்கத் துவங்கும் நிலையில் இரு கனச் செவ்வகப் பொருட்களின் நிறைகளுக்கு இடையே உள்ள தொடர்பினை வருவிக்கவும்.

  23. 3 x 5 = 15
  24. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

  25. மாறாத முடுக்கம் பெற்ற பொருளின் இயக்கச் சமன்பாடுகளை வருவிக்கவும்.

  26. கிடைத்தளத்துடன் 60° கோணத்தில் சாய்ந்துள்ள, சாய்தளத்தின்மீது m நிறையுள்ள பொருளொன்று வைக்கப்பட்டுள்ளது. அப்பொருள் \(g \over 2\) என்ற முடுக்கத்துடன் கீழ்நோக்கிச் சறுக்கி சென்றால் அப்பொருளின் இயக்க உராய்வு குணகத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard இயற்பியல்முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics First Mid Term Model Question Paper )

Write your Comment