11th Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50
    50 x 1 = 50
  1. ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு_______.

    (a)

    [ML3T-2]

    (b)

    [M-1L3T-2]

    (c)

    [M-1L-3T-2]

    (d)

    [ML-3T2]

  2. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

    (a)

    \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

    (b)

    \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

    (c)

    \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

    (d)

    \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

  3. ஒரு ஒளியாண்டு =_______

    (a)

    9.647x 1012

    (b)

    6.764x 105

    (c)

    9.467x 1012km 

    (d)

    9.467x 1015km 

  4. SI அலகு முறையானது மற்ற அலகிடும் முறைகளை விடச் சிறந்தது. ஏனெனில் இது______ 

    (a)

    நிலையானதும் மீலாத் கொணர்தலும் கொண்டது

    (b)

    காலத்தை பொறுத்து மாறாது

    (c)

    ஓரியல் முறை

    (d)

    இவை அனைத்தும்

  5. g என்பது புவியீர்ப்பு முடுக்கம் எனில். 1/2gt2 ன் பரிணாமம் ______ 

    (a)

    தொலைவு

    (b)

    திசைவேகம்

    (c)

    முடுக்கம்

    (d)

    விசை

  6. துகளொன்றின் திசைவேகம் \({\overrightarrow{v}=2\hat{i}+t^2\hat{j}}-9\hat{k}\) எனில், t = 0.5 வினாடியில் அத்துகளின் முடுக்கத்தின் எண்மதிப்பு யாது?

    (a)

    1 m s–2

    (b)

    2 m s–2

    (c)

    சுழி

    (d)

    –1 m s–2

  7. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  8. ஒரு துகளின் பாதையின் தன்மையை தீர்மானிப்பது அதன்_____ 

    (a)

    வேகம்

    (b)

    திசைவேகம்

    (c)

    முடுக்கம்

    (d)

    திசைவேகம் மற்றும் முடுக்கம்

  9. இயங்கும் பொருளின் முடுக்கம் எதற்குச் சமம்?

    (a)

    திசைவேகம் - காலம் வரைபடத்தின் பரப்பு

    (b)

    தொலைவு  - காலம் வரைபடத்தின் பரப்பு

    (c)

    திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு

    (d)

    தொலைவு - காலம் வரைபடத்தின் சாய்வு

  10. கிடைத்தளத்துடன் 450 கோணத்தில் பொருளொன்று எறியப்பட்டால் அதன் கிடைத்தள வீச்சு எதற்குச் சமம்?

    (a)

    செங்குத்து உயரம்

    (b)

    செங்குத்து உயரதாய் போல் இரு மடங்கு 

    (c)

    செங்குத்து உயரதாய் போல் மூன்று மடங்கு 

    (d)

    செங்குத்து உயரதாய் போல் நான்கு மடங்கு 

  11. m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு வழுவழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது

    (a)

    பாதை AB பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்.

    (b)

    பாதை AC பாதையில் அதிக முடுக்கத்தைப் பெறும்

    (c)

    இருபாதையிலும் சம முடுக்கத்தைப் பெறும்

    (d)

    இருபாதைகளிலும் முடுக்கத்தையும் இல்லை

  12. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

    (a)

    மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்

    (b)

    மையநோக்கு விசை இயற்கை விசையாகும்

    (c)

    மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது

    (d)

    வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வட்டமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது

  13. ஒரு துப்பாக்கியிலிருந்து 50g நிறைகொண்ட ஒரு குண்டு, 30 ms-1 திசைவேகத்தில் வெளிவரும்போது, துப்பாக்கியின் பின்னியக்கத் திசைவேகம் 1 ms-1 எனில், துப்பாக்கியின் நிறை_______ 

    (a)

    5.5 kg

    (b)

    3.5 kg

    (c)

    1.5 kg

    (d)

    0.5 kg

  14. m நிறை கொண்ட பொருளொன்று, உராய்வுக் குணகம் \(\mu\) கொண்ட சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. நிறையானது நழுவாமல், சமநிலையில் இருக்க, சாய்தளத்தின் சாய்கோணம்_________

    (a)

    \(\theta=tan^{-1}\mu\)

    (b)

    \(\theta=tan^{-1}\frac{1}{\mu}\)

    (c)

    \(\theta=tan^{-1}\frac{m}{\mu}\)

    (d)

    \(\theta=tan^{-1}\frac{\mu}{m}\)

  15. 12 kg நிறையுடைய ஒரு பந்தின் வேகம் உடன் இயங்குகிறது.ஒரு மீட்சியுள்ள சுவரின் மீது குத்தப்பட்டவுடன் திருப்பி அனுப்பப்படுகிறது?  

    (a)

    12 kg ms-1  

    (b)

    -12  kg ms-1  

    (c)

    6 kg ms-1  

    (d)

    -6  kg ms-1  

  16. 4 m நிறையுள்ள ஒரு பொருள் - தளத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல் _______.

    (a)

    mv2

    (b)

    \(\frac { 3 }{ 2 } { mv }^{ 2 }\)

    (c)

    2mv2

    (d)

    4mv2

  17. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

    (a)

    v

    (b)

    v2

    (c)

    v3

    (d)

    v4

  18. m நிறை கொண்ட பொருள் ஒன்று v திசைவேகத்தில் இயங்குகிறது. இது நிலையாக உள்ள 2m நிறை பொருளின் மீது மோதலுறுகிறது. மோதலுக்குப் பின் நிலையாக இருந்த பொருளின் வேகம் 

    (a)

    2v/3

    (b)

    2v

    (c)

    v/3

    (d)

    3v

  19. 1 kg நிறை கொண்ட பொருள் ஒன்று 20 ms-1 திசைவேகத்தில் மேல் நோக்கி எறியப்படுகிறது. 18 m  பெரும உயரத்தை அடைந்ததும், பொருள் கண நேரத்திற்கு அமைதி நிலையை அடைகிறது எனில், காற்றின் உராய்வினால் எவ்வளவு ஆற்றலை இழந்துள்ளது?

    (a)

    20 J 

    (b)

    30 J 

    (c)

    40 J 

    (d)

    10 J 

  20. ஒரு கிரிக்கெட் பந்து 40 m உயிரத்திலிருந்து கீழே விழுகிறது. எத்திசைவேகத்துடன் பந்து தரையைத் தாக்கும்?

    (a)

    40 m/s

    (b)

    20 m/s

    (c)

    16 m/s

    (d)

    28 m/s

  21. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  22. சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது ______.

    (a)

    இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்

    (b)

    சுழற்சி இயக்கத்தை குறைக்கும்

    (c)

    சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்

    (d)

    இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்

  23. M நிறையும் R ஆரமும் உடைய வட்டத்தட்டு ஒன்றின், தளத்திற்குச் செங்குத்தாகவும் மையத்தின் வழியாகவும் செல்லும் அச்சைப் பொருத்த நிலைமத் திருப்புத்திறன் ________ 

    (a)

    1/2MR2

    (b)

    MR2

    (c)

    1/4MR2

    (d)

    5/4MR2

  24. R ஆரம் கொண்ட திண்ம கோளம் ஒன்று உராய்வற்ற கிடைத்தளப் பரப்பில் வைக்கப்பட்டுள்ளது. h உயரத்தில் இருந்து F என்ற கிடைத்தள விசை, கோளத்தின் அடிப்புள்ளியிலிருந்து கொடுக்கப்படுகிறது. நிறையின் மையம் பெரும முடுக்கம் பெற h-ன் மதிப்பு யாது?

    (a)

    h=R

    (b)

    h=2R

    (c)

    h=0

    (d)

    h-ன் மதிப்பு எதுவாக இருந்தாலும் முடுக்கம் சமமாக இருக்கும் 

  25. ஒரு திண்ம உருளை நழுவலற்று உருளுதலை ஒரு சாய்தளத்தில் மேற்கொள்ளும்போது கிடைத்தளத்துடன் உண்டாக்கும் சாய்தளக்கோணம் α சாய்வு தளத்திற்கான மீச்சிறு உராய்வு குணகம்.

    (a)

    2/3 tan α

    (b)

    1/3 tan α

    (c)

    2/7 tan α

    (d)

    4/3 tan α

  26. சூரியனை ஒரு கோள் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. கோளின் அண்மை தொலைவு (r1) மற்றும் சேய்மைத்தொலைவு  (r2) களில் திசைவேகங்கள் முறையே v1 மற்றும் v2 எனில் \(\frac { { v }_{ 1 } }{ { v }_{ 2 } } =\) _____.

    (a)

    \(\frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \)

    (b)

    \({ \left( \frac { { r }_{ 2 } }{ { r }_{ 1 } } \right) }^{ 2 }\)

    (c)

    \(\frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { { r }_{ 1 } }{ { r }_{ 2 } } \right) }^{ 2 }\)

  27. சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg  நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு_____.

    (a)

    98N 

    (b)

    சுழி 

    (c)

    49N 

    (d)

    9.8N 

  28. சந்திரனின் ஒரு அணுகுண்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. அதன் ஒலியானது புவியை அடைய எடுத்துக் கொள்ளும் காலம்

    (a)

    24 மணி நேரம்

    (b)

    புவியை அடையாது

    (c)

    60 sec

    (d)

    10 நிமிடம்

  29. ஒரு துணைக்கோளில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுருள்வில்லிலிருந்து ஒரு பொருள் தொங்கவிடப்பட்டுள்ளது. அது சுற்றுப் பாதையின் ஆரம் R ல் செல்லும்போது சுருள் வில்லின் அளவீடு w1 மற்றும் சுற்றுப்பாதையில் ஆரம் 2R ஆக உள்ளபோது அளவீடு w2

    (a)

    w1>w2

    (b)

    w1  ≠w2

    (c)

    w1=w2

    (d)

    w1<w2

  30. ஒரு ஏவுகணை விடுபடுவேகத்தை வீட்டா குறைவான திசைவேகத்துடன் ஏவப்படுகிறது. அதன் நிலை ஆற்றல், இயக்க ஆற்றலின் கூட்டுத் தொகை. 

    (a)

    ஒன்று

    (b)

    எதிர்குறி

    (c)

    சுழி

    (d)

    நேரக்குறி

  31. மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்தக் கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி \(\Delta \)l. Y ஆனது யங்குங்கத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர்கோடாகும்?

    (a)

    \(\Delta \)l எதிராக V

    (b)

    \(\Delta \)l எதிராக Y

    (c)

    \(\Delta \)l எதிராக F

    (d)

    \(\Delta \)l எதிராக \(\frac {1}{l }\)

  32. ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்  _____.

    (a)

    ஆற்றல் 4VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (b)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } +\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (c)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (d)

    ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை 

  33. வாண்டர்வாலஸ் ''அழுத்தக்  குறைபாடு '' க்கனா சமன்பாட்டினை தருவிக்கும்போது  காட்சிப்படுத்தப்பட்ட அழுத்தம் P, பருமன் V வாயு அழுத்த வாயு பருமனில்           

    (a)

    \(P+\frac { a }{ v } \)

    (b)

    \(P+\frac { a }{ { v }^{ 2 } } \)

    (c)

    P  + (a  x  v )

    (d)

    P  + (a  x  v2 )

  34. கணிசமாக பொருள்கள் நீட்சியடையும்போது  உடையவதற்கு முன் மீட்சியற்ற குறுக்கத்தை அடைவது             

    (a)

    உடையும் பொருள்கள் 

    (b)

    மீட்சியுள்ள பொருள்கள்    

    (c)

    உடைக்கக்கூடிய பொருள்கள்   

    (d)

    நீளும் தன்மையுடைய பொருட்கள்   

  35. ஒரு கம்பியின் கூண்டின் தளத்தில் ஒரு கிளி உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் அதை சுமந்து செல்லும் போது பறக்கத் தொடங்குகிறது.அச்சிறுவனுக்கு அப்பெட்டி        

    (a)

    கனமாக இருக்கும் 

    (b)

    இலேசாக இருக்கும்    

    (c)

    எடையில் மாற்றம் இல்லை 

    (d)

    முதலில் இலேசாகவும் பின்னர் கனமாகவும் இருக்கும்  

  36. சார்லஸ் விதியின்படி பருமன் மற்றும் வெப்பநிலைக்குமான வரைபடம் ______.

    (a)

    ஒரு நீள்வட்டம் 

    (b)

    ஒரு வட்டம் 

    (c)

    ஒரு நேர்க்கோட்டு 

    (d)

    ஒரு பரவளையம் 

  37. சீரான அடர்த்தி உள்ள தண்டு ஒன்றினை வெப்பப்படுத்தும்போது அத்தண்டின் பின்வரும் எப்பண்பு அதிகரிக்கும்.

    (a)

    நிறை 

    (b)

    எடை 

    (c)

    நிறை மையம் 

    (d)

    நிலைமைத்திருப்புத்திறன் 

  38. ஒரு கொடுக்கப்பட்ட நிறையின் வெப்பநிலை 27oC லிருந்து 327oC வெப்ப நிலைக்கு உயரும், எனில் மூலக்கூறுகளின் rms திசைவேகம் உயர்வது.

    (a)

    \(\sqrt { 2 } \) தடவைகள் 

    (b)

    இரண்டு தடவைகள் 

    (c)

    2\(\sqrt { 2 } \) தடவைகள் 

    (d)

    4 தடவைகள் 

  39. ஒரு வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வில் பின்வரும் கூற்றில் எது சரி?  

    (a)

    \({ P }^{ \Upsilon }{ T }^{ \Upsilon -1 }\) =மாறிலி  

    (b)

    \({ P }^{ \Upsilon }{ T }^{ 1-\Upsilon }\) =மாறிலி 

    (c)

    \({ P }{ T }^{ \Upsilon }\) =மாறிலி 

    (d)

    \({ P }^{ 1-\Upsilon }{ T }^{ \Upsilon }\) =மாறிலி 

  40. நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

    (a)

    rms வேகம்

    (b)

    சராசரி வேகம்

    (c)

    சராசரித் திசைவேகம்

    (d)

    மிகவும் சாத்தியமான வேகம்

  41. மாறா அழுத்தத்திலுள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் வெப்பநிலையை 100K லிருந்து 1000K க்கு உயர்த்தும்போது, அதன் சராசரி இருமடிமூல வேகம் vrms எவ்வாறு மாறுபடும்?

    (a)

    5 மடங்கு அதிகரிக்கும்

    (b)

    10 மடங்கு அதிகரிக்கும்

    (c)

    மாறாது

    (d)

    7 மடங்கு அதிகரிக்கும்

  42. ஒரு வாயுவின் PV வரைபடத்தில் வளைவின் மீது ஏதாவது ஒரு புள்ளியில் சாய்வு gபின்வரும் வினையில் ஏதனுடன் தொடர்புடையது  

    (a)

    \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

    (b)

    \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

    (c)

    \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

    (d)

    \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

  43. தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும்பொழுது வீச்சானது அதன் ஆரம்பவீச்சின் 1/3 மடங்காக குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

    (a)

    1/5

    (b)

    2/3

    (c)

    1/6

    (d)

    1/9

  44. l நீளமுடைய தனிஊசல் ஒன்றின் நிலைம நிறை மற்றும் ஈர்ப்பியல் நிறை சமமற்றது எனில் அதன் அலைவுநேரம்_______.

    (a)

    \(T=2\pi\sqrt{m_il\over m_gg}\)

    (b)

    \(T=2\pi\sqrt{m_gl\over m_gg}\)

    (c)

    \(T=2\pi{m_g\over m_i}\sqrt{l\over g}\)

    (d)

    \(T=2\pi{m_i \over m_g }\sqrt{l\over g}\)

  45. சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 27 அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில் அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை______.

    (a)

    15 N

    (b)

    3 N

    (c)

    6 N

    (d)

    12 N

  46. இரு தனி ஊசல்களின் கால அளவுகள் 2.0s மற்றும் 2.1s ஒத்தவாறு அதிர்வடையச் செய்யப்படுகின்றன. முதலில் ஒரே கட்டத்தில் உள்ளன. ஒரே கட்டத்தில் எத்தனை அதிர்வுகள் இருக்கும்?

    (a)

    21

    (b)

    25

    (c)

    30

    (d)

    35

  47. குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின்  திசைவேகம் 500ms-1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms -1, எனில் Bல் அதிர்வெண் அலைநீளம் முறையே_______.

    (a)

    120Hz மற்றும் 5m

    (b)

    100Hz மற்றும் 5m

    (c)

    120Hz மற்றும் 6m

    (d)

    100Hz மற்றும் 6m

  48. 5000Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு _______.

    (a)

    4.30

    (b)

    0.23

    (c)

    5.30

    (d)

    1.23

  49. நெட்டலைகள் ஊடகத்தின் வழியே மின்னேறிச் செல்லும்போது கடத்தப்படுவது 

    (a)

    பொருள் 

    (b)

    ஆற்றல் 

    (c)

    பொருள் மற்றும் ஆற்றல் 

    (d)

    உந்தம், ஆற்றல், பொருள்

  50. ஒரு ஒலியைப் பெறுபவரால் 20dB அளவிற்கு ஒலி மட்டுப்படுத்தப்படுகிறது எனில் செறிவில் ஏற்படும் தாழ்வின் காரணி 

    (a)

    100

    (b)

    1000

    (c)

    10000

    (d)

    10

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 இயற்பியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Physics Public Exam March 2019 Important One Mark Question Paper )

Write your Comment