+1 Public Exam March 2019 Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது_______.

    (a)

    8%

    (b)

    2%

    (c)

    4%

    (d)

    6%

  2. குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?

    (a)

    (b)

    (c)

    (d)

  3. h மீட்டர் உயர கோபுரம் ஒன்றிலிருந்து பந்து ஒன்று தானாக கீழே விழுகிறது. இது தரையை t  காலத்தில் அடையுமெனில் t /2 காலத்தில் தரையிலிருந்து பொருளுக்குள்ள உயரம் (மீட்டரில்) யாது?

    (a)

    h/2

    (b)

    h/4

    (c)

    3h/4

    (d)

    பந்தின் நிறை மற்றும்  பருமனை பொருத்தது

  4. படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன, முதல் நிலையில் F1 விசை இடப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது. பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து செயல்படுத்தப்படுகிறது பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இரு நிலைகளிலும் சமவிசைகள் செயல்படுகின்றன எனில் F1 : F_______.

    (a)

    1: 1

    (b)

    1: 2

    (c)

    2: 1

    (d)

    1: 3

  5. ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் _______.

    (a)

    ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

    (b)

    ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

    (c)

    ஆற்றல் மாற்றா விசையின் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

    (d)

    ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

  6. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது ______.

    (a)

    துகள்களின் நிலை

    (b)

    துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

    (c)

    துகள்களின் நிறை

    (d)

    துகளின் மீது செயல்படும் விசை

  7. ஒரு திண்ம கோளம் மற்றும் திண்ம உருளை சமநிறையும் ஆரமும் உடையது. இது தன சொந்த அச்சைப் பற்றி சுழலுமானால் M.I. பின்வரும் இதில் அதிகமாக இருக்கும்.

    (a)

    திண்மக் கோளம்

    (b)

    திண்ம உருளை

    (c)

    a, b இரண்டும்

    (d)

    இரண்டிலும் சமம்

  8. குறிப்பிட்ட கால அளவில் சூரியன் புவி மீது செய்த வேலையின் அளவு எவ்வாறு இருக்கும்?

    (a)

    நேர்குரியாக எதிர்குரியாக அல்லது சுழியாக

    (b)

    எப்போதும் நேர்குறி

    (c)

    எப்போதும் எதிர்குறி

    (d)

    எப்போதும் சுழி

  9. ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்  _____.

    (a)

    ஆற்றல் 4VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (b)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } +\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (c)

    ஆற்றல் 3VT \(\left( \frac { 1 }{ r } -\frac { 1 }{ R } \right) \)வெளிப்பட்டது 

    (d)

    ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை 

  10. வெப்பமான கோடைகாலத்தில் சாதாரண நீரில் குளிந்த பின்னர் நமது உடலின் ______.

    (a)

    அக ஆற்றல் குறையும் 

    (b)

    அக ஆற்றல் குறையும் 

    (c)

    வெப்பம் குறையும் 

    (d)

    அக ஆற்றல் மற்றும் வெப்பத்தில் மாற்றம் நிகழாது 

  11. வாயுக்கலவை ஒன்று μ1 மோல்கள் ஓரணு மூலக்கூறுகளையும் μ2 மோல்கள் ஈரணு மூலக்கூறுகளையும் மற்றும் μமோல்கள் நேர்கோட்டில் அமைந்த மூவணு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. இவ்வாயுக்கலவை உயர் வெப்பநிலையில் உள்ளபோது அதன் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை யாது?

    (a)

    [3μ1 + 7(μ23)]NA

    (b)

    [3μ1 + 7μ2+6μ3)]NA

    (c)

    [7μ1 + 3(μ23)]NA

    (d)

    [3μ1 + 6(μ23)]NA

  12. டால்டனின் பகுதி அழுத்த விதிப்படி 

    (a)

    மெய்வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் அதன் காரணிகளின் கூடுதல் அழுத்தம் 

    (b)

    நல்லியல்பு வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் என்பது பகுதி அழுத்தத்தின் வேறுபாடு 

    (c)

    நல்லியல்பு வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் என்பது அழுத்தங்களின் கூடுதல் 

    (d)

    மெய்வாயுக்களின் ஒரு கலவையின் மொத்த அழுத்தம் பகுதி அழுத்தத்தின் கூடுதல் 

  13. ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த செங்குத்து தொலைவு மற்றும் k =1 m s-2, இதன் அலைவுநேரம் T2 எனில் \({T_1 \over T_2}\)(g=10ms -2) என்பது_______.

    (a)

    5/6

    (b)

    11/10

    (c)

    6/5

    (d)

    5/4

  14. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  15. இடப்பெயர்ச்சி உடைய துகள் மேற்கொள்ளும் அலை இயக்கத்தின் சமன்பாடு \(y=4\cos ^{ 2 }{ \left( \frac { t }{ 2 } \right) } \sin { \left( 1000t \right) } \) இது எத்தனை மேற்பொருந்துதல் அலைகளின் விளைவு

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து

  16. 6 x 2 = 12
  17. இயற்பியலில் கால அளவு மற்றும் நிறைகளின் வீச்சு பற்றி கூறு.

  18. ஒரு முழுசுற்றினை நிறைவு செய்ய புவி எடுத்துக்கொள்ளும் நேரம் 24 மணிநேரமாகும். இந்நிலையில் புவி ஒரு மணி நேரத்தில் அடைந்த கோண இடப்பெயர்ச்சியைக் கணக்கிடு. விடையை ரேடியன் மற்றும் டிகிரி இரண்டிலும் தருக.

  19. 100 kg நிறை உள்ள பொருள் 50 cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறதெனில், அப்பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பைக் காண்க.

  20. உடனடித் திறன் வரையறு.

  21. சைக்கிள் சக்கரத்தின் குறுக்கே கம்பிகள் மெல்லிய உலோகக் கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பதன் காரணம்

  22. சூரியனை புவி சுற்றும் வேகம் 30 kms-1 எனில் புவியின் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. முந்தய கணக்கில் புவியின் ஈர்ப்பு நிலை ஆற்றலை கணக்கிட்டாய். அதன்படி புவியின் மொத்த ஆற்றல் நேர்க்குறி தன்மையுடையதா? இல்லை எனில் காரணம் கூறு.

  23. வெப்ப விரிவு என்றால் என்ன?

  24. சீரமைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக:

  25. மனிதன் ஒருவன் ஒரு மலை உச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு கைதட்டுகிறான். 4s கழித்து மலை உச்சியிலிருந்து அந்த கைத்தட்டலின் எதிரொலியை கேட்கிறான். ஒலியின் சராசரி திசைவேகம் 343 ms-1 எனில் மனிதனிடமிருந்து மலை உச்சியின் தொலைவை காண்க.

  26. 6 x 3 = 18
  27. ஐன்ஸ்டீன் நிறை ஆற்றல் தொடர்பை பரிமாண முறையில் பெறுக. (E = mc2)

  28. ஆற்று நீரோட்டத்தின் திசையில் நீந்தும் நீச்சல் வீரரின் திசைவேகம் 12 km h-1. ஆற்று நீரோட்டத்தின் திசைக்கு எதிர்திசையில் அவரின் நீச்சல் திசைவேகம் 6 km h-1 எனில், அமைதி நிலையில் இருக்கும் நீரினைப் பொருத்து நீச்சல் வீரரின் வேகத்தையும் மற்றும் ஆற்று நீரோட்டத்தின் திசைவேகத்தையும் காண்க.

  29. கணத்தாக்கு என்பது உந்தத்தில் ஏற்படும் மாற்றம் என்று விளக்குக.

  30. m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
    (a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
    (b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
    (c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)

  31. திருப்புவிசை வரையறு. அதன் அலகு யாது?

  32. விண்வெளிக் கலத்தில் எடையின்மை தோன்றுவது ஏன்? 

  33. பின்வரும் வரைபடம் 1m ஒரு கம்பியின் நீட்சி \(\triangle \)I.இதன் ஒரு முனை கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளது. பளு w மறுமுனையில் இணைக்கப்பட்டுள்ளது,கம்பியின் குறுக்குப் பரப்பு 10-6m2 கம்பியின் யங்குணத்தைக் கணக்கிடுக                

  34. கீழே கொடுக்கப்பட்டுள்ள PV வரைபடம் மூலம் உயர்ந்த வெப்பநிலை எது எனக்கண்டறி. வரைபடம் வெவ்வேறு வெப்பநிலைகளில் நடைபெறும் இரண்டு மாறா நிகழ்வுகளைக் குறிக்கின்றன.

  35. வாயு மூலக்கூறுகள், அவற்றை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனின் சுவரின்மீது ஏற்படுத்தும் அழுத்தத்திற்கான கோவையை பெறுக.

  36. 5 x 5 = 25
  37. C = 3.0 \(\pm \) 0.1 \(\mu\)F மின்தேக்குத்திறன் கொண்ட மின்தேக்கி V = 18 \(\pm \) 0.4 Volt மின்மூலத்தால் மின்னேற்றம் செய்யப்படுகிறது. மின்தேக்கியின் மின்னுட்டத்தைக் காண்க [Q = CV என்ற சமன்பாட்டைப் பயன்படுத்துக்க] 

  38. \(\\ \overrightarrow { A } =2\hat { i } -\hat { j } \) மற்றும் \(\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)எனில் பின்வருவனவற்றின் ஸ்கேலர் எண்மதிப்பு மற்றும் x அச்சு பொருத்து திசையையும் காண்.
    (i) \(\overrightarrow { A } \) (ii)\(\overrightarrow {B } \) (iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)  (iv) \(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)

  39. நியூட்டனின் மூன்று விதிகளின் முக்கியத்துவத்தை விளக்குக.

  40. ஒரு துகள் \(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\) என்ற நிலையிலிருந்து \(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\) நிலைக்கு, \(\overrightarrow { F } =(3\hat { i } +2\hat { j } +4\hat { k } )N\). என்ற விசையின் தாக்கத்தால் நகர்கிறது எனில் செய்யப்பட்ட வேலை யாது?

  41. m நிறை கொண்ட துகளானது v என்ற மாறாத திசை வேகத்துடன் இயங்குகிறது. ஏதேனும் ஒரு புள்ளியைப் பொருத்து இயக்கம் முழுவதிலும் இதன் கோண உந்தம் மாறாதது எனக் காட்டுக.

  42. உன் பள்ளி ஆய்வகத்தில் g' மதிப்பினைக் காண்க.

  43. இரு கோள வடிவ சோப்பு குமிழிகள் இணைகின்றன. V என்பது அவற்றிலுள்ள காற்றின் பருமனில் மாற்றம் A என்பது மொத்த  பரப்பளவின் மாற்றம் எனில் 3PV  + 4AT  = 0 காட்டு . T என்பது பரப்பு இழுவிசை p என்பது வளி அழுத்தம்.     

  44. வெப்ப விரிவைப்பற்றி விவாதித்து எழுதுக.

  45. சுருள்வில்லின் செங்குத்து அலைவுகளை விவரி.

  46. 5 m, 6 m அலைநீளம் கொண்ட இரண்டு ஒலி மூலங்களை கருதுக. இவை இரண்டும் வாயு ஒன்றில் 330ms-1 திசைவேகத்துடன் செல்கின்றன. ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்களின் எண்ணிக்கையை காண்க

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி பொது தேர்வு வினா விடை 2019 ( 11th Standard Physics Model Revision Test Question Paper 2019 )

Write your Comment