Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    45 x 1 = 45
  1. கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?

    (a)

    கார்பன்

    (b)

    ஆக்ஸிஜன்

    (c)

    கார்பன் மற்றும் ஆக்ஸிஜன்

    (d)

    கார்பன், ஆக்ஸிஜன் இரண்டுமில்லை

  2. 1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.

    (a)

    0%

    (b)

    4.4%

    (c)

    16%

    (d)

    8.4%

  3. பின்வரும் வினைகளை கவனி :
    I. 4Fe +3O\(\rightarrow \) 2Fe2O3
    II. Fe2+ \(\rightarrow \)Fe3+ + e-
    III. H2S+CI2 \(\rightarrow \) 2HCl + S
    IV. CuO+C \(\rightarrow \) Cu+CO
    இவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  4. பின்வருவனவற்றில் தவறானது எது?

    (a)

    சோடியம் ஒரு பளப்பளப்பான அலோகம்

    (b)

    குளோரின் ஓர் எரிச்சலூட்டும் வாயு

    (c)

    சோடியம் குளோரைடு படிகத்தன்மையுடைய திண்மம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு

  5. கீழ்கண்டவற்றுள் எது பொட்டாசியம் டைகுரோமேட்டின் தனித்த அணு [அ] மூலக்கூறின் நிறை [கிராமில்]

    (a)

    29.86 x 10-23

    (b)

    26.242 x 10-23

    (c)

    48.851 x 10-23

    (d)

    1.9926 x 10-23

  6. E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  7. போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

    (a)

    n = 6 இல் இருந்து n = 1

    (b)

    n = 5 இல் இருந்து n = 4

    (c)

    n = 5 இல் இருந்து n = 3

    (d)

    n = 6 இல் இருந்து n = 5

  8. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்களின் நிலைப்புத்தன்மை அதிகம். இது பின்வரும் எதன் அடிப்படையில் விளக்கப்படுகிறது?

    (a)

    பரிமாற்ற ஆற்றல்

    (b)

    நிலை ஆற்றல்

    (c)

    இயக்க ஆற்றல்

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  9. பின் வருவனவற்றுள் தவறானது எது?

    (a)

    ஹெய்சன்பர்க் தனது நிச்சயமற்றத் தன்மை கோட்பாட்டை உருவாக்கினார்

    (b)

    எலக்ட்ரானைப் போன்ற நுண்துகளிற்கு, நிச்சயமற்றக் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது

    (c)

    அதிக நிறையுடைய பெரிய துகளிற்கு இதன் விளைவு குறிப்பிடத்தக்க ஒன்று.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு

  10. மரபு இயக்கவியற் கொள்கையால் _________ இயக்கத்தினை சரிவர விளக்க இயலவில்லை

    (a)

    நுண்துகளின்

    (b)

    குறிப்பிட்ட நிறையுடைய பொருளின்

    (c)

    பேரளவு துகளின்

    (d)

    இவை அனைத்தும்

  11. பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

    (a)

    புரோமின்

    (b)

    குளோரின்

    (c)

    அயோடின்

    (d)

    ஹைட்ரஜன்

  12. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

    (a)

    +169 kcal mol-1

    (b)

    - 169 kcal mol-1

    (c)

    + 527 kcal mol-1

    (d)

    - 527 kcal mol-1

  13. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடு.

    (a)

    போரானை விட கார்பனின் அணுக்கரு மின்சுமை அதிகம்

    (b)

    போரானை விட காப்பரின் உருவ அளவு பெரியது

    (c)

    கார்பன் எலக்ட்ரான் குறை சேர்மங்களை உருவாக்குகின்றது

    (d)

    கார்பன் அயனிகி சேர்மங்களை உண்டாக்கும்

  14. பின்வருவனவற்றுள் அணுவின் எலக்ட்ரான் நாட்டம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு

    (a)

    உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது

    (b)

    உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது

    (c)

    உருவ அளவைப் பொறுத்து அல்ல

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  15. பொருட்களின் பண்புகள் அவற்றின் எண்களின் பண்புகளோடு தொடர்புடையது என்று கூறியவர்

    (a)

    லவாய்சியர்

    (b)

    டாபரீனர்

    (c)

    டி-சான்கோர்டாய்ஸ்

    (d)

    நியூலண்ட்

  16. ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.

    (a)

    அவைகள் உட்கரு சுழற்சி ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்)

    (b)

    ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.

    (c)

    குறைந்த வெப்பநிலை, பாரா மாற்றியத்திற்கு சாதகமாக உள்ளது.

    (d)

    பாரா மாற்றியத்தின் வெப்ப கடத்துதிறன், அதன் ஆர்த்தோ மாற்றியத்தை விட 50% அதிகம்

  17. டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------

    (a)

    1p +0n

    (b)

    2p +1n

    (c)

    1p +2n

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  18. பாரா ஹைட்ரஜனின் காந்தத் திருப்புத் திறன் 

    (a)

    குறைவு 

    (b)

    அதிகம் 

    (c)

    பூஜ்ஜியம் 

    (d)

    மதிப்பு இல்லை

  19. H2O2  கரைசலானது இதில் சேமித்து வைக்கப்படுகிறது?

    (a)

    கண்ணாடி கலன்

    (b)

    லெட் கலன்

    (c)

    நெகிழி கலன்

    (d)

    தாமிர கலன்

  20. பின்வருவனவற்றுள் எது ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன் எனக் குறிப்பிடுக.

    (a)

    வீரியமிக்க புரைத்தடுப்பான்

    (b)

    காகிதம் வெளுக்கும் பொருளாக

    (c)

    நீர் சுத்திகரித்தலில் மாசுக்களை ஒடுக்கமடையச் செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  21. தவறான கூற்றைக் கண்டறியவும்

    (a)

    உலோக சோடியம் ,கரிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (b)

    சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.

    (c)

    சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்

    (d)

    பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு

  22. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  23. கார உலோகங்களின் அயனி ஆரம் அமைந்துள்ள வரிசை

    (a)

    Li<Na<K<Rb<Cs

    (b)

    Na<Li<K<Rb<Cs

    (c)

    Li<Na<K<Rb<Cs

    (d)

    Na<Li<Rb<K<Cs

  24. லித்தியத்தின் வினைத்திறன் தொகுதியிலுள்ள மற்ற தனிமங்களின் வினைத்திறன் ஒப்பீடும் போது லித்தியத்தின் வினைத்திறன்

    (a)

    அதிகம்

    (b)

    குறைவு

    (c)

    பூஜ்ஜியம்

    (d)

    மாற்றமடைவதில்லை

  25. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு

    (a)

    வாயுக்களை திரவமாக்குதல் நிகழ்வானது வாயு மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசை உள்ளது என்பதைக் காட்டுகிறது.

    (b)

    அனைத்து வெப்ப அழுத்த நிலைகளிலும் எல்லா வாயுக்களும் நல்லியல்பு வாயுவின் தன்மையினைப் பெற்றிருக்கும்.

    (c)

    நல்லியல்பு தன்மையற்ற வாயுக்கள் இயல்பு வாயுக்கள் என அழைக்கப்படுகின்றன

    (d)

    இயல்பு வாயுக்கள் சில நிபந்தனைகளில் நல்லியல்புத் தன்மையை நெருங்குகின்றன.

  26. வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்பபலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது 

    (a)

    பாயிலின் விதி

    (b)

    நியூட்டனின் விதி 

    (c)

    கெல்வினின் விதி

    (d)

    பிரௌனின் விதி

  27. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n-2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3\(\sqrt{3}\) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

    (a)

    8

    (b)

    4

    (c)

    3

    (d)

    1

  28. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

    (a)

    p மற்றும் \(\frac { 1 }{ v } \)

    (b)

    pv  மற்றும் v 

    (c)

    p  மற்றும் v 

    (d)

    v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

  29. மாறா வெப்பநிலையில் 56கே நைட்ரஜன் மற்றும் 96கி ஆக்சிஜன் ஆகியவை உள்ள கலவையின் மொத அழுத்தம் 10 atm எனில் நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் பகுதி அழுத்தங்கள் முறையே

    (a)

    4,6

    (b)

    8,2

    (c)

    6,4

    (d)

    2,8

  30. பின்வருவனவற்றை பொருத்துக.

    A 1 atm 1 6894.76 pa
    B 1 mm Hg 2 105 pa 
    C 1 bar 3 133.322 pa
    D 1 psi 4 101325 pa
    (a)
    A B C D
    1 2 3 4
    (b)
    A B C D
    2 3 4 1
    (c)
    A B C D
    3 4 2 1
    (d)
    A B C D
    4 3 2 4
  31. ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்

    (a)

    +1kJ

    (b)

    -5kJ

    (c)

    +3kJ

    (d)

    -3kJ

  32. ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம் 

    (a)

    >0

    (b)

    > 0

    (c)

    <0

    (d)

    =0

  33. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

    (a)

    H=G-TS

    (b)

    G=H-TS

    (c)

    \(G= \triangle E- T\triangle S\)

    (d)

    G=V-TS

  34. வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் ________ வெப்ப இயக்கவியல் விதிகளின் அடிப்படையில் அமைகின்றன.

    (a)

    ஒன்று

    (b)

    இரண்டு

    (c)

    மூன்று

    (d)

    நான்கு

  35. ஒரு வினையின் ஆற்றல்களை ஆயிந்தறிவதற்கான ஒரு அணுகுமுறை

    (a)

    படிகக்கூடு ஆற்றல்

    (b)

    பார்ன் -ஹேபர் சுற்று

    (c)

    பாம்கலோரி மீட்டர்

    (d)

    ஹெஸ்ஸின் வெப்பமாறா கூட்டல் விதி

  36. ஒரு வினையின் சமநிலை மாறிலி அறைவெப்பநிலையில் K1 மற்றும் 700K ல் K2 ஆகும். K1>K2 எனில்,

    (a)

    முன்னோக்கு வினை ஒரு வெப்பம் உமிழ்வினை.

    (b)

    முன்னோக்கு வினை ஒரு வெப்பம் கொள்வினை.

    (c)

    இவ்வினை சமநிலையை அடையா து.

    (d)

    பின்னோக்கு வினை ஒரு வெப்ப உமிழ்வினை

  37. 400K வெப்பநிலையில் 20லிட்டர் கலனில் 0.4atm அழுத்தமுடைய CO(g) மற்றும் அதிகளவு SrOஉள்ளது (திண்ம SrO ன்
    கனஅளவை புறக்கணிக்க). கலனில் பொருத்தப்பட்டுள்ள உந்து தண்டினை தற்போது நகர்த்தி கலனின் கன அளவு 
    குறைக்கப்படுகிறது. CO2 ன் அழுத்தமானது அதிகபட்ச அளவினை அடையும் போது, கலனின் அதிகபட்ச கனஅளவின் மதிப்பு யாது  கொடுக்கப்பட்டவை:
    SrCO3 (s) ⇌ SrO (s) + CO2 (g)
    KP = 1.6 atm

    (a)

    2 லிட்டர்

    (b)

    5 லிட்டர்

    (c)

    10 லிட்டர்

    (d)

    4 லிட்டர்

  38. செறிவை அதிகரிப்பதன் மூலம் சமநிலையின் மீது ஏற்படும் விளைவு 

    (a)

    முன்னோக்கு வினை 

    (b)

    பின்னோக்கு வினை 

    (c)

    வெப்பக் கொள்வினை 

    (d)

    பாதிப்பு எதுமில்லை

  39. வேதி வினைகளில் நேரத்தைப் பொறுத்து வினைபடு பொருள்களின் செறிவு

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    மாறுபடாது

    (d)

    இருமடங்காகிறது

  40. பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடு.

    (a)

    திட நிலைமையில் காணப்படும் வினைப் பொருள்களை கொண்டுள்ள சமநிலை அமைப்புகளின் மீது மட்டுமே அழுத்த அதிகரிப்பு

    (b)

    அமைப்பின் மீதான அழுத்தம் அதிகரிக்கும் போது அடர்க்கு இணையான அளவில் கன அளவு குறைகிறது

    (c)

    கன அளவு குறையும் போது அதனை சமன் செய்யும் வகையில் குறைவான மோல்கள் எண்ணிக்கையுடைய வாயுவினை பொருள்கள் உள்ள திசையை நோக்கி சமநிலை நகர்கிறது

    (d)

    மேற்கண்ட அனைத்தும் தவறு

  41. இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாவது

    (a)

    முழுவதும் நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போதும்போது

    (b)

    சரிபாதி நிரம்பிய அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

    (c)

    பிணைப்பில் ஈடுபடாதஅணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

    (d)

    காலியான அணு ஆர்பிட்டால்கள் மேற்பொருந்தும்போது

  42. ClF3 இன் வடிவம்

    (a)

    முக்கோணசமதளம்

    (b)

    பிரமிடுவடிவம்

    (c)

    'T' வடிவம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  43. ஒரு அணுவின் முறைசார் மின்சுமையை கண்டறிய பயன்படும் சமன்பாடு?

    (a)

    Nv-\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (b)

    Nv+\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (c)

    Nv-\(\left( { N }_{ l }-\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

    (d)

    Nv+\(\left( { N }_{ l }+\frac { { N }_{ b } }{ 2 } \right) \)

  44. நீர் மூலக்கூறில் உள்ள OH பிணைப்புகளின் பிணைப்பு ஆற்றல்களின் சராசரி மதிப்பு

    (a)

    502 KJ mol-1

    (b)

    427 KJ mol-1

    (c)

    546.8 KJ mol-1

    (d)

    464.5 KJ mol-1

  45. கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
    காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்

    (a)

    (A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்

    (b)

    (A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல

    (c)

    (A) சரி, (R) தவறு

    (d)

    (A) தவறு (R) தவறு

  46. பகுதி  - II

    36 x 2 = 72
  47. ஆக்ஸி ஜனேற்ற எண் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?

  48. STP நிலையில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் அடர்த்தி 1.965 Kgm-3 CO2 வாயுவின் மோலார் நிறையைக் காண்க.

  49. வினைகட்டுப்பாட்டுக் காரணி - குறிப்பு வரைக.

  50. இயற் நிலைமையின் அடிப்படையில் பருப்பொருட்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்? பருப்பொருட்களை ஒரு எயர்நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு எவ்வாறு மாற்றுவாய்?

  51. ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?

  52. Mn2+ மற்றும் Cr3+ ஆகியனவற்றின் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

  53. கோண உந்தக் குவாண்டம் எண் பெறும் மதிப்புகள் யாவை?

  54. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய நிபந்தனை என்ன?

  55. எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.

  56. முதல் அயனியாக்கும் ஆற்றலை விட இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் எப்பொழுதும் அதிகம் எனும் கூற்றிலுள்ள உண்மையை எவ்வாறு விளக்குவாய்?

  57. X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.

  58. தனிமங்களை வகைப்படுத்துவதன் அவசியம் என்ன? எதன் அடிப்படையில் தனிமங்கள் வகைப்படுத்தப்பட்டது?

  59. HCl மற்றும் NaH ஆகியனவற்றுள் எந்த ஹைட்ரைடு திடப்பொருள் மீதான வாயு. உனது விடைக்கான காரணத்தினைக் கூறு.

  60. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
    (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
    (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

  61. ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

  62. டியூட்ரியம் பற்றி சிறு குறிப்பு வரைக.

  63. பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?

  64. பின்வரும் செயல்முறைகளுக்கு சமன்செய்யப்பட்ட சமன்பாடுகளை எழுதுக
    (அ) கால்சியம் ஹைட்ரஜன் கார்பனேட் கரைசலை ஆவியாக்குதல்
    (ஆ) கால்சியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து வெப்பப்படுத்துதல்

  65. பெரிலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஏறத்தாழ பூஜ்ய எலக்ட்ரான் நாட்ட மதிப்பை பெற்றுள்ளன. ஏன்?

  66. இயற்கை மின்காப்புப் பொருள் என அறியப்படுவது எது?

  67. கேலூசாக் விதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இரு மாதிரிகளின் பெயர்களைத் தந்து விளக்குக. 

  68. a=0 என்ற வாண்டர் வால்ஸ் மாறிலியைக் கொண்ட வாயுவினை திரவமாக்க முடியுமா?விவரி 

  69. வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?

  70. சார்லஸ் விதியை வரையறு.

  71. நடுநிலையாக்கல் என்தால்பியை வரையறு.

  72. பின்வருவனவற்றுள் நிலை மற்றும் வழிச்சார்புகளை கண்டறிக.
    அ.என்தால்பி
    ஆ.என்ட்ரோபி
    இ.வெப்பம்
    ஈ.வெப்பநிலை
    உ.வேலை
    ஊ.கட்டிலா ஆற்றல்

  73. பின்வருவனவற்றிற்கு நடைமுறைக்குறியீடுகளை எழுதுக.
    1.அமைப்பினால் வெப்பமானது உறிஞ்சப்பிடும் போது 
    2.அமைப்பிலிருந்து வெப்பமானது வெளியேறும் போது 
    3.அமைப்பினால் வேலை செய்யப்படும் போது 
    4.அமைப்பின் மீது வேலை செய்யப்படும் போது 

  74. வெப்ப இயக்கவியலின் தத்துவங்கள் மூன்று வெப்ப இயக்கவியல் விதிகளின் அடிப்படையில் அமைகின்றன. அவ்விதிகள் எதைப்பற்றி கூறுகின்றன.

  75. ஒரு வினையில், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் சமநிலை மாறிலி மாறாத மதிப்பினை பெற்றிருக்கிறது Qன் மதிப்பும் மாறாமல் இருக்குமா? விவரி.

  76. சமநிலை வினையின் திசையினை எவ்வாறு கணிப்பாய் என்பதை விவரி.

  77. நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினால் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் செயல்முறை எதற்கு உதாரணம்?

  78. ஒரு வெப்ப பரிமாற்றமில்லா குடுவையில் உள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தம் யாது?

  79. ஆக்ஸிஜன் மூலக்கூறிற்கு மூலக்கூறு ஆர்பிட்டால் (MO) வரைபடத்தை வரைக. அதன் பிணைப்புத் தரத்தை கணக்கிடுக, மேலும் O2 மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது எனக் காட்டுக.

  80. VSEPR கொள்கையை விளக்குக. இக்கொள்கையை பயன்படுத்தி IF7, மற்றும் SF6 ஆகியவற்றின் வடிவமைப்புகளை கண்டுபிடி.

  81. அமோனியா BF3 உடன் நிகழ்த்தும் பிணைப்பை விளக்குக.

  82. அணுக்களுக்கிடையேயான எலக்ட்ரான்களின் பரிமாற்ற பங்கீட்டினால் அவைகள் நிலைப்புத் தன்மையைப் பெறுகின்றன என்ற கருத்தை முன்மொழிந்தவர் யார்?

  83. பகுதி  - III

    16 x 3 = 48
  84. ஈத்தேன் எரிதல் வினையின் முடிவில் 44 கிராம் CO2 (g) வாயுவை உருவாக்கத் தேவைப்படும் ஈத்தேனின் மோல் எண்ணிகையைக் கணக்கிடுக

  85. பின்வருவனவற்றின் ஒப்பு மூலக்கூறு நிறையினை கணக்கிடுக.
    (i) ஹைட்ரஜன்
    (ii) குளுக்கோஸ்

  86. Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.

  87. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?

  88. இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.

  89. மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  90. கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

  91. பின்வருவற்றிற்கு முறையான பெயர்களைத் தருக
    (i) மெக்னீசிய பால்மம்
    (ii) கடுங்காரம்
    (iii) சுண்ணாம்பு
    (iv) எரி பொட்டாஷ்
    (v) சலவை சோடா
    (vi) சோடா சாம்பல்
    (vii) ட்ரோனா(trona)

  92. தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.

  93. ஆர்கான் ஒரு மந்தவாயு. இது மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழை ஆவியாவதைத் தடுக்க பயன்படுகிறது. மாறா கனஅளவில் உள்ள ஒரு மின் விளக்கில் 180C யில் 1.2atmல் உள்ள ஆர்கான் வாயு 850C க்கு வெப்பப்படுத்தப்படுகிறது. அதன் இறுதி அழுத்தத்தினை (atmல்) கணக்கிடுக.

  94. பனிக்கட்டி குளிர் நிலையில் உள்ள நீரில் உள்ள ஒருபலூனை, கொதி நீருள்ள தொட்டிக்கு மாற்றும்போது ஏற்படும் நிகழ்வு யாது?

  95. 4.1 வளிமண்டல அழுத்தம்,மற்றும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள 1 மோல் நல்லியல்பு வாயு,3710J ஆற்றலை உறிஞ்சி,2L விரிவடைகிறது.இந்த விரிவடைதலின்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தைக் கணக்கிடுக .

  96. \(\triangle H^o _f\) for CO2(g), CO(g)மற்றும் H2O(g) மதிப்புகள்-393.5,-111.31 மற்றும்-242 மது mol-1

  97. NO2ன் தொடக்க அழுத்தம் 1atm மற்றும் O2ன் தொடக்க அழுத்தம் 1atm ஐ கொண்ட 2000C வெ ப்பநிலையில், NOன் ஆக்ஸிஜனேற்ற வினை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமநிலையில் ஆக்ஸிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனஅறியப்படுகிறது. KPன் மதிப்பினை கணக்கிடு.

  98. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  99. பொட்டாசியம் குளோரைடில் அயனிப்பிணைப்பு உருவாதலை விளக்குக.

  100. பகுதி  - IV

    9 x 5 = 45
  101. ஆக்சிஜனேற்ற எண்ணை வரையறு. பின்வரும் சமன்பாட்டை ஆக்சிஜனேற்ற எண் முறையை பயன்படுத்தி சமன்செய்க.
    AS2S3+ HNO3 + H2\(\rightarrow \) H3AsO4 + H2SO4 + NO

  102. 4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.

  103. போர் ஆரம் [r] மற்றும் டி-பிராக்ளி [λ] அலைநீளத்திற்இடையேயான தொடர்பை தருக.

  104. ஹைட்ரஜனின் பயன்களை விவரி.

  105. பெரிலியத்தின் தனித்துவனமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.

  106. எளிதில் தீப்பற்றும், ஒரு குறிப்பிட்ட கனஅளவுடைய வாயு நிலையில் ஹைட்ரோ கார்பன், ஒரு சிறு துளையின் வழியே 1.5 நிமிடங்களில் விரவுகின்றது. இதே வெப்ப அழுத்த நிலைகளில் சம கனஅளவு உடைய புரோமின் ஆவியானது அதே துளையின் வழியே விரவுவதற்கு 4.73 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறையினை கண்டறிக. மேலும் அந்த ஹைட்ரோ கார்பன் என்னவாக இருக்கலாம் எனக் கூறு. [புரோமின் மோலார் நிறை 159.8 g mol-1 என கொடுக்கப்பட்டுள்ளது. 

  107. 1 மோல் மெக்னீசியம, 1 மோல் திரவபுரோமினிலிருந்து 1 மோல் மெக்னீசியம் புரோமைடு தயாரிக்கும் போது 524 KJ அளவு ஆற்றல் வெளிப்படுகிறது. மெக்னீசியத்தின் பதங்கமாதல் வெப்பம் 148 KJ mol-1, திரவ புரோமினின் ஆவியாதல் வெப்பம் 31 KJ mol-1, புரோமின் வாயுவை அணுக்களாக்க தேவைப்படும் பிரிகையடைதல் வெப்பம் 193  KJ mol-1, மெக்னீசியத்தின் அயனியாக்கும் ஆற்றல் 2187  KJ mol-1, புரோமினின் எலக்ட்ரான் நாட்டம் -662  KJ mol-1எனில், மெக்னீசியம் புரோமைடு படிகத்தின் படிகக்கூடு ஆற்றலைக் கணக்கிடுக.

  108. PCI5 சிதைவடைதலுக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிடு 

  109. N2+ - ன் பிணைப்பு நீளமானது M2-ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வைக் காட்டிலும் குறைவு. ஏன்?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு வேதியியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள்  ( 11th Standard Tamil Medium Chemistry Important Question )

Write your Comment