Half Portion One Mark

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

    50 x 1 = 50
  1. தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு

    (a)

    201 u

    (b)

    202 u

    (c)

    199 u

    (d)

    200 u

  2. 0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை 

    (a)

    6.022 × 1026

    (b)

    6.022 × 1023

    (c)

    6.022 × 1020

    (d)

    9.9 × 1022

  3. பின்வருவனவற்றுள், 180 g நீரில் உள்ளது எது?

    (a)

    5 மோல்கள் நீர்

    (b)

    90 மோல்கள் நீர்

    (c)

    \(\frac{6.022\times10^{23}}{180}\) நீர் மூலக்கூறுகள்

    (d)

    6.022×1024 நீர் மூலக்கூறுகள்

  4. கீழ்கண்டவற்றைக் கவனி:
    I. அழுத்தம் II. வெப்பநிலை 
    இவற்றுள், பருப்பொருளை அதன் ஓர் இயற் நிலைமையிலிருந்து மற்றோரு நிலைமைக்கு மாற்ற மேற்கண்ட எதை மாற்றியமைக்க வேண்டும்?

    (a)

    I. மட்டும் 

    (b)

    II. மட்டும் 

    (c)

    இரண்டும் 

    (d)

    இரண்டும் இல்லை 

  5. இணைத்திறன் இரண்டு கொண்ட உலோகத் தனிமத்தின் சமான 10g eq-1. அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை 

    (a)

    46 g 

    (b)

    36 g 

    (c)

    52 g 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு

    (a)

    சீமன் விளைவு

    (b)

    மறைத்தல் விளைவு

    (c)

    காம்ப்டன் விளைவு

    (d)

    ஸ்டார்க் விளைவு

  7. போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

    (a)

    n = 6 இல் இருந்து n = 1

    (b)

    n = 5 இல் இருந்து n = 4

    (c)

    n = 5 இல் இருந்து n = 3

    (d)

    n = 6 இல் இருந்து n = 5

  8. Eu (அணு எண் 63), Gd (அணு எண் 64) மற்றும் Tb (அணு எண் 65) ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள் (NEET- Phase II)

    (a)

    [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

    (b)

    [Xe] 4f7 , 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

    (c)

    [Xe] 4f7 , 6s2, [Xe] 4f8 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

    (d)

    [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

  9. சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாகக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு

    (a)

    ரூதர்போர்டு

    (b)

    டி -பிராக்ளே

    (c)

    ஹெய்சன்பர்க்

    (d)

    போர்

  10. பின்வரும் எதன் அடிப்படையில் எலக்ட்ரான் அமைப்பு எழுதப்படுகிறது?

    (a)

    ஆஃபா தத்துவம்

    (b)

    பௌலியின் தவிர்க்கை விதி

    (c)

    ஹீண்ட் விதி

    (d)

    இவை அனைத்தும்

  11. E = -2.178 x 10-18 து \((\frac {z^2}{n^2})\) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?

    (a)

    எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது ஆற்றல் மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.

    (b)

    n =3, வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n =5ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளபோது வலிமை அதிகமாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.

    (c)

    இச்சமன்பாட்டில் உள்ள எதிர்க்குறியானது அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது. எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ளபோது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.

    (d)

    n ன் மதிப்பு குறைவாக இருப்பின் ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.

  12. வேறுபடுத்திக் காட்டும் எலக்ட்ரான் (differentiating electron) தனிமத்தின் வெளிக்கூட்டிற்கு முந்தைய ஒன்றுவிட்ட உள்கூட்டில் (anti penultimate shell) சென்று சேரும் தனிமங்களைக் கொண்டுள்ள தொகுதி.

    (a)

    p-தொகுதி தனிமங்கள்

    (b)

    d-தொகுதி தனிமங்கள்

    (c)

    s-தொகுதி தனிமங்கள்

    (d)

    f -தொகுதி தனிமங்கள்

  13. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  14. 9, 17, 35 மற்றும் 53 ஆகியவற்றை முறையே அணு எண்களாக பெற்றுள்ள தனிமங்களான F,Cl, Br மற்றும் I ஆகியவற்றின் எதிர் குறியுடன் கூடிய எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளின் வரிசை

    (a)

    I > Br > Cl > F

    (b)

    F > Cl > Br > I

    (c)

    Cl > F > Br > I

    (d)

    Br > I > Cl > F

  15. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

    (a)

    +169 kcal mol-1

    (b)

    - 169 kcal mol-1

    (c)

    + 527 kcal mol-1

    (d)

    - 527 kcal mol-1

  16. ஆற்றல் மட்டங்கள் அதிகரிப்பின் விளைவு

    (a)

    அணுக்கரு சுமையைக் குறைக்கிறது

    (b)

    அணு ஆரத்தை அதிகரிக்கச் செய்கிறது

    (c)

    அணு ஆரத்தை குறைக்கிறது

    (d)

    அயனியாக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது

  17. பின்வரும் IE மதிப்பு ஒப்பீட்டை கவனி
    I. Mg > Na
    II. F >O
    III. Be > Li
    IV. F > Ne
    இவற்றுள், தவறான ஒப்பீடு எது?

    (a)

    I, II

    (b)

    II, IV

    (c)

    II

    (d)

    IV

  18. கூற்று (A): F ஐவிட Cl- எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகம்
    காரணம் (R): 2P ஆர்பிட்டால்கள் அணுக்கருவை ஈர்ப்பதில்லை

    (a)

    கூற்று (A) சரி, காரணம் (R) தவறு

    (b)

    (A) என்பது சரியான கூற்று (R) என்பது தவறான விளக்கம்

    (c)

    (A) சரி, (R) சரி, (R) என்பது சரியான விளக்கம்

    (d)

    (A) தவறு, (R) தவறு

  19. A, B மற்றும் C தனிமங்களின் முதல் அயனியாக்கும் ஆற்றல் (IE1) மற்றும் அயனியாக்கும் ஆற்றல் (IE2) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    தனிமம்  A B C
    IE1 kJ mol-1 2370 522 1680
    IE2 kJ mol-1 5250 7298 3381

     மேற்கண்ட எந்த தனிமம் அதிக வினைபுரியும் உலோகம்?

    (a)

    A

    (b)

    B

    (c)

    C

    (d)

    A மற்றும் C

  20. நீர் வாயு என்பது

    (a)

    H2O (g)

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  21. அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை.

    (a)

    ஹேலஜன்கள்

    (b)

    சால்கோஜென்கள்

    (c)

    மந்த வாயுக்கள்

    (d)

    தொகுதி 1 – தனிமங்கள்

  22. H3PO2 + D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு

    (a)

    முக்காரத்துவ அமிலம்

    (b)

    இருகாரத்துவ அமிலம்

    (c)

    ஒரு காரத்துவ அமிலம்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  23. திட பனிக்கட்டியில், ஆக்சிஜன் அணுவானது

    (a)

    4 ஹைட்ரஜன் அணுக்களால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது

    (b)

    2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது.

    (c)

    2 ஹைட்ரஜன் மற்றும் 2 ஆக்ஸிஜன் அணுக்களால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது

    (d)

    6 ஹைட்ரஜன் அணுக்களால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது.

  24. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    அதிகமாகிப் பின் குறைகிறது

    (d)

    குறைந்து பின் அதிகரிக்கிறது

  25. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

    (a)

    2 புரோட்டான் மட்டும்

    (b)

    ஒரு நியூட்ரான்

    (c)

    ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்

    (d)

    2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்

  26. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

    (a)

    ஆக்சி டியூட்ரியம் 

    (b)

    நீர்

    (c)

    கனநீர்

    (d)

    மேற்கூரிய அனைத்தும் 

  27. பின்வருவனற்றை கவனி:
    I. H2O2
    II. D2O
    III. ND3
    IV. CH2 = CH2
    இவற்றுள், ராக்கெட்டுகளில் உந்தும் பொருளாகப் பயன்படுகிறது

    (a)

    I

    (b)

    II 

    (c)

    III

    (d)

    IV

  28. கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.
    \({ M }^{ + }\left( g \right) \xrightarrow [ Aqueous ]{ Medium } { M }^{ + }\left( aq \right) \)

    (a)

    Na

    (b)

    Li

    (c)

    Rb

    (d)

    K

  29. பின்வரும் சேர்மங்களில் எதற்கு “Blue John” எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?

    (a)

    CaH2

    (b)

    CaF2

    (c)

    Ca3(PO4)2

    (d)

    CaO

  30. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  31. பின்வரும் சேர்மங்களை கவனி:
    I.ஜிப்சம்
    II.பாரீஸ் சாந்து
    ஈசி.கால்சியம் சல்பைடு
    IV.எப்சம் உப்பு
    இவற்றுள்,சிலை செய்வதற்கான வார்ப்புகள்செய்ய பயன்படும் சேர்மம்

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  32. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  33. பின்வரும் சேர்மங்களின் வாய்ப்பாட்டை கவனி:
    I.MgCO3
    II.MgCO3.CaCO3
    III.MgSO4.7H2O
    IV.MgSO4
    இவற்றுள்,எப்சம் உப்பின் வாய்ப்பாடு.

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  34. இரண்டாம் தொகுதியில் மேலிருந்து கீழ்ச் செல்ல அயனி ஆராய்க.

    (a)

    பொதுவாக குறைகிறது

    (b)

    பொதுவாக அதிகரிக்கிறது

    (c)

    அதிகரித்து பின்னர் குறைகிறது

    (d)

    மாற்றமடைவதில்லை

  35. வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட
    கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை

    (a)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையே மோதல் அதிகரிக்கின்றன.

    (b)

    அதிக அழுத்தத்தில் வாயு மூலக்கூறுகள் ஒரே திசையில் நகர்கின்றன.

    (c)

    அதிக அழுத்தத்தில் வாயுவின் கனஅளவு புறக்கணிக்கத்தக்கதாகும்.

    (d)

    அதிக அழுத்தத்தில் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சிவிசை புறக்கணிக்கத்தக்கதன்று.

  36. இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை

    (a)

    நிலைமாறு வெப்பநிலை 

    (b)

    பாயில் வெப்பநிலை 

    (c)

    எதிர்மாறு வெப்பநிலை

    (d)

    குறைக்கப்பட்ட வெப்பநிலை 

  37. 227°C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன?

    (a)

    1.40 g/L

    (b)

    2.81g/L

    (c)

    3.41 g/L

    (d)

    0. 29 g/L

  38. கீழ்கண்டவற்றுள் குறிப்பிட்ட எடையுள்ள நல்லியல்பு வாயுவின் பண்புகளை சரியாகக் குறிக்கும் படம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

    அனைத்தும்

  39.  வாண்டாவால்ஸ் சமன்பாட்டில் அழுத்தத்திற்கான திருத்தம் 

    (a)

    \(P+\frac { { V }^{ 2 } }{ { a }^{ 2 }n } \)

    (b)

    \(P+\frac { { { a }^{ 2 }n }^{ 2 } }{ { v }^{ 2 } } \)

    (c)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v }^{ 2 } } \)

    (d)

    \(P+\frac { { n }^{ 2 }a }{ { v } } \)

  40. A ) நல்லியல்பு வாயுப் பண்பு  1)குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை 
    B ) வெப்ப மாறா செயல்முறையில் 
    காந்த தன்மையை இழத்தல் 
    2) திரவ ஹீலியம் 
    C )31.1 °C ல் CO2    3) நிலைமாறு வெப்பநிலை
    D ) ஜூல் தாம்சன் சோதனை    4) திரவ அக்ஸிஜன்
    (a)

    A-1 B-2 C-3 D-4

    (b)

    A-2 B-3 C-1 D-4

    (c)

    A-4 B-3 C-2 D-1

    (d)

    A-1 B-2 C-4 D-3

  41. ஒரு வாயு கீழ்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கம் அடைகிறது 

    (a)

    அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த அழுத்தம் 

    (b)

    குறைந்த அழுத்தம்

    (c)

    குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக அழுத்தம் 

    (d)

    அதிக வெப்பநிலை

  42. கீழ்க்கண்டவற்றுள் பாயில் விதியை சரியாகக் குறிக்கும் படம் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

    இவை அனைத்தும் 

  43. ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்

    (a)

    +1kJ

    (b)

    -5kJ

    (c)

    +3kJ

    (d)

    -3kJ

  44. ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மாறா மீள்சுருங்குதல் செயல்முறையில் q, ΔS மற்றும் w ஆகியவற்றின் குறிகள் முறையே

    (a)

    +, –, –

    (b)

    –, +, –

    (c)

    +, –, +

    (d)

    –, –, +

  45. இயற்கையில் நிகழும் அனைத்து செயல்முறைகளை _________ திசையில் நடக்கின்றன.

    (a)

    என்ட்ரோபி குறையும்

    (b)

    என்தால்பி அதிகரிக்கும்

    (c)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கும்

    (d)

    கட்டிலா ஆற்றல் குறையும்

  46. CO மற்றும் CO2 ஆகியவற்றின் உருவாதல் வெப்ப மதிப்புகள் முறையே -26.4kCal மற்றும் -94kCal, கார்பன் மோனாக்ஸைடின் எரிதல் வெப்ப மதிப்பு

    (a)

    +26.4kCal

    (b)

    -67.6kCal

    (c)

    -120.6kCal

    (d)

    +52.8kCal

  47. உறிஞ்சப்பட்ட அல்லது உமிழப்பட்ட வெப்பத்துக்கும் அமைப்பின் சார்பிலா வெப்பநிலைக்கும் உள்ள விகிதம் 

    (a)

    U

    (b)

    P

    (c)

    T

    (d)

    S

  48. cgs முறையில் என்ட்ரோபியின் அலகு 

    (a)

    Cal K-1mol-1

    (b)

    Cal K-1

    (c)

    JK-1

    (d)

    Cal mol-1

  49. வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை 

    (a)

    விரிவாக விளக்குகிறது 

    (b)

    கணிதவியல் முறைப்படி விளக்குகிறது 

    (c)

    இயற்பியல் முறைப்படி விளக்குகிறது 

    (d)

    விளக்குவதில்லை 

  50. ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை? 

    (a)

    q = w

    (b)

    q = 0

    (c)

    E = q

    (d)

    P\(\triangle \)V=0

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் 1 மதிப்பெண் கேள்வி வினா விடை 2018 ( 11th Standard Chemistry 1 mark Questions 2018 )

Write your Comment