PLUS ONE 11-std New Pattern Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. அடிப்படை மாறிலி்களில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு _______.

    (a)

    Kg2

    (b)

    m3

    (c)

    s-1

    (d)

    m

  2. கிடைத்தளத்தைப் பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.

    (a)

    \({R}_{30°}={R}_{60°}\)

    (b)

    \({R}_{30°}=4{R}_{60°}\)

    (c)

    \({R}_{30°}={{R}_{60°}\over 2}\)

    (d)

    \({R}_{30°}=2{R}_{60°}\)

  3. ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்கக் காரணமாக விசை ______

    (a)

    மையநோக்கு விசை 

    (b)

    மையவிளக்கு விசை 

    (c)

    ஈர்ப்பு விசை 

    (d)

    எதுவும் இல்லை 

  4. நேர்க்குறி x அச்சுதிசையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடைபெறுவது எது?

    (a)

    எதிர்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (b)

    நேர்க்குறி x அச்சுத் திசையில் வாகனத்தின் மீது உராய்வுவிசை செயல்படும்.

    (c)

    வாகனத்தின் மீது எவ்வித உராய்வு விசையும் செயல்படாது.

    (d)

    கீழ்நோக்கிய திசையில் உராய்வுவிசை செயல்படும்.

  5. 80 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1 kg மற்றும் 2 kg நிறையுள்ள பந்துகள் போடப்படுகிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40 m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம் _______.

    (a)

    \(\sqrt { 2 } :1\)

    (b)

    \(1:\sqrt { 2 } \)

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  6. திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது ______.

    (a)

    L

    (b)

    L/2

    (c)

    2L

    (d)

    \(\frac { L }{ \sqrt { 2 } } \)

  7. நிலை வெக்டர் \(\overrightarrow { r } \) கொண்ட துகள் மீது \(\overrightarrow { F } \)விசை செயல்பட்டு அதன் நிலைப்புள்ளியை பொருத்து திருப்புவிசை \(\overrightarrow { \tau } \)ஏற்படுமேயானால் 

    (a)

    \(\overrightarrow { r } \).\(\overrightarrow { \tau } \)\(\neq \)0 மற்றும் \(\overrightarrow { F } \).\(\overrightarrow { \tau } \)=0

    (b)

    \(\overrightarrow { r } \).\(\overrightarrow { \tau } \)>0 மற்றும் \(\overrightarrow { F } \).\(\overrightarrow { \tau } \)<0

    (c)

    \(\overrightarrow { r } \).\(\overrightarrow { \tau } \)=0 மற்றும் \(\overrightarrow { F } \).\(\overrightarrow { \tau } \)=0

    (d)

    \(\overrightarrow { r } \).\(\overrightarrow { \tau } \)=0 மற்றும் \(\overrightarrow { F } \).\(\overrightarrow { \tau } \)\(\neq \)0

  8. கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.

    (a)

    அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும் 

    (b)

    அனைத்து புள்ளிகளிலும்

    (c)

    அண்மை  நிலலயில் மட்டும்

    (d)

    எப்புள்ளியிலும் அல்ல

  9. வெப்ப நிலை உயரும்போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே  _____.

    (a)

    அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்

    (b)

    அதிகரிக்கும் மற்றும் குறையும் 

    (c)

    குறையும்  மற்றும் அதிகரிக்கும்

    (d)

    குறையும்  மற்றும் குறையும்  

  10. வெகு தொலைவிலுள்ள விண்மீனொன்று  350 mm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்வீண்மீனின் வெப்பநிலை ______.

    (a)

    8280 K

    (b)

    5000 K 

    (c)

    7260 K 

    (d)

    9044 K 

  11. நல்லியல்பு வாயு ஒன்று சமநிலையில் உள்ளபோது பின்வரும் அளவுகளில் எதன் மதிப்பு சுழியாகும்?

    (a)

    rms வேகம்

    (b)

    சராசரி வேகம்

    (c)

    சராசரித் திசைவேகம்

    (d)

    மிகவும் சாத்தியமான வேகம்

  12. ஒரு வாயுவின் PV வரைபடத்தில் வளைவின் மீது ஏதாவது ஒரு புள்ளியில் சாய்வு gபின்வரும் வினையில் ஏதனுடன் தொடர்புடையது  

    (a)

    \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

    (b)

    \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

    (c)

    \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

    (d)

    \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

  13. சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள் A மற்றும் B புள்ளிகளை ஒரே திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3s  மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3s எடுத்துக்கொள்கிறது எனில் அதன் அலைவு நேரம்_______.

    (a)

    15s

    (b)

    6s

    (c)

    12s

    (d)

    9s

  14. கீழ்க்கண்டவற்றுள் எது அலையை குறிக்கிறது.

    (a)

    (x - v t )3

    (b)

    x ( x + v t )

    (c)

    \(1\over (x+vt )\)

    (d)

    sin( x + v t)

  15. ஒரு அலைச் சமன்பாடு y = 0.01 Sin (100πt - kx) அலை திசைவேகம் 100 m/s. அதன் எண்ணிக்கை.

    (a)

    1 m-1

    (b)

    2m-1

    (c)

    πm-1

    (d)

    2πm-1

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. அளவீடு செய்தலில் பிழைகளின் வகைகள் யாவை?

  18. நேர்குறி x அச்சுத்திசையில் இயங்கும் துகளொன்றின் திசைவேகம் – நேரம் வரைபடம் காட்டப்பட்டுள்ளது. 0 விலிருந்து 7 வினாடி வரை உள்ள கால இடைவெளியில் அத்துகளின் இயக்கத்தினைப் பகுப்பாய்வு செய்க. மேலும் 0 முதல் 2 வினாடிவரை துகள் அடைந்த இடப்பெயர்ச்சி மற்றும் அத்துகள் கடந்த தொலைவு ஆகியவற்றைக் கணக்கிடுக.

  19. கால்பந்து வீரரொருவர் 0.8 kg நிறையுடைய கால்பந்தை உதைத்து அதை 12 ms-1 திசைவேகத்தில் இயக்க வைக்கிறார். அவ்வீரர் வினாடியில் ஆறில் ஒரு பங்கு நேரமே பந்தை உதைத்தார் எனில் அப்பந்தின் மீது அவர் செலுத்திய சராசரி விசையைக் காண்க.

  20. மோதல்களுக்கு அன்றாட நிகழ்வில் எடுத்துக்காட்டு தருக?

  21. சைக்கிள் சக்கரத்தின் குறுக்கே கம்பிகள் மெல்லிய உலோகக் கம்பிகள் இணைக்கப்பட்டிருப்பதன் காரணம்

  22. சம நிறை M உடைய நான்கு நிறைகள் ஒவ்வொன்றும் சம தொலைவில் உள்ளன. அவற்றுக்கிடையேயான ஈர்ப்பு ஈர்ப்பு விசை கவர்ச்சியால் ஆரம் R உடைய வட்டப்பாதையில் அத்துகள்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு துகளின் வேகத்தை கணக்கீடுக.

  23. மோலார் (மூலக்கூறு)தன் வெப்ப ஏற்புத்திறன் என்றால் என்ன?

  24. 1.20m நீளமுள்ள ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை காண்.

  25. மூலமும் கேட்பவரும் ஓய்வில் இருக்கும்போது ஒரு வலிமையான காற்று வீசுகிறது. இதில் டாப்ளர் விளைவு உள்ளதா?

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

  28. \(\overrightarrow{A}\) மற்றும் \(\overrightarrow{B}\) என்ற இரண்டு வெக்டர்கள் ஒன்றுக்கொன்று 60° கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன. அவற்றின் எண்மதிப்புகள் முறையே 5 அலகுகள் மற்றும் 7 அலகுகள் ஆகும். தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) இன் எண்மதிப்பையும், \(\overrightarrow{A}\) வெக்டரைப் பொருத்து தொகுபயன் வெக்டர் \(\overrightarrow{A}-\overrightarrow{B}\) திசையையும் காண்க.

  29. நியூட்டனின் இரண்டாவது விதியைக் கூறுக.

  30. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g = 10 m s-2) எனில்
    a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
    b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
    c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
    d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

  31. ஈர்ப்பு மையத்தை வரையறு.

  32. கோள்களின் பரப்பு விதியினை விவரி.

  33. வெற்றிடத்தில் ஒரு சோப்புக் குமிழின் ஆரம் 3cm. மற்றொரு சோப்பு குமிழின் ஆரம் 4cm . இரு குமிழிகள்  ஒத்த வெப்ப நிலையில் இணைகின்றன எனில் புதிய குமிழின் ஆரம் என்ன?     

  34. உள்ளுறை வெப்ப ஏற்புத்திறனின் இயல்பினை விவரி. 

  35. வாயுக்களின் இயக்கவியற் கொள்கைக்கான எடுகோள்கள் யாவை?

  36. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    5 x 5 = 25
    1. வெர்னியர் அளவி கொண்டு கண்டறியப்பட்ட உருளையின் வெவ்வேறு நீளங்கள் 2.36 cm, 2.27 cm, 2.26 cm, 2.28 cm, 2.31 cm,  2.28 cm மற்றும் 2.29 cm. எனில் உருளையின் நீளத்தின் சராசரி, தனிப்பிழை, ஒப்பிட்டுப் பிழை மற்றும் விழுக்காட்டுப் பிழையைக் காண்க. 

    2. இயக்கங்களின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

    1. வளைவுச் சாலைகளின் வெளி விளிம்பு உயர்த்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? விளக்குக.

    2. மீட்சியளிப்பு குணகம் 'e' என்பதை விவரி. 

    1. 5 அலகுகள் நிறை கொண்ட ஒரு துகள் v = \(3\sqrt { 2 } \)  அலகுகள் சீரான வேகத்துடன் XOY தளத்தில் y = x +4 என்ற சமன்பாட்டின் படி இயங்குகிறது. அத்துகளின் கோண உந்தத்தை காண்க.

    2. ஈர்ப்பியல் விதியை நியூட்டன் எவ்வாறு மெய்ப்பித்தார் என்பதை விளக்குக.

    1. ஒரு இலேசான தண்டின் நீளம் 2m இரு செங்குத்து மூலம் கிடைமட்டமாக தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் முனைகள் சமமான நீளுங்களுடையவை. ஒரு கம்பி எஃகினாலும் அதன் குறுக்கு பரப்பு A1=0.1cm மற்றொன்று பித்தளையாலும் இதன் குறுக்குப் பரப்பு A= 0.2 cm2 தண்டின் எந்த நிலைகளிலும் எடை தொடங்கவிடப்பட்டால் பின்வருவன உண்டாகும்? (i) இரு கம்பிகளும் ஒத்தி தகைவுகள், (ii) இரு எஃகு கம்பிகளிலும் ஒத்தி திரிபு Y= 20X 1010 Nm-2பித்தளை Y = 10 X 1010 Nm-2

    2. வெப்பப்பரிமாற்றமில்லா நிகழ்வைப்பற்றி விரிவாக விவாதிக்கவும். 

    1. தனிசீரிசை இயக்கத்தின் ஆற்றலை விரிவாக விவாதிக்க.

    2. நிலை அலைகள் என்றால் என்ன? நிலை அலைகள் ஏற்படுவதை விளக்குக.அதன் பண்புகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் புதிய பாடதிட்டம் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Physics New Pattern Model Question Paper )

Write your Comment