Class 11 Revision Exam

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    20 x 1 = 20
  1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

    (a)

    சமூகக் கணக்கியல்

    (b)

    காரியதரிசிகளின் கணக்கியல்

    (c)

    மேலாண்மைக் கணக்கியல்

    (d)

    பொறுப்பு கணக்கியல்

  2. ஒரு வணிகர் வணிகத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம் __________________ ஈட்டுவதாகும்.

    (a)

    இலாபம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவுகள்

    (d)

    நற்பெயர்

  3. GAAP என்பது:

    (a)

    பொதுவாக ஏற்றுக் கொள்ளடப்பட்ட கணக்கியல் கொள்கைகள்

    (b)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகள்

    (c)

    பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் வழிமுறைகள்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை

  4. ஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது

    (a)

    பற்றுத்தன்மை

    (b)

    வரவப்புதன்மை

    (c)

    ரொக்கத்தன்மை

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது

    (a)

    ரொக்க கணக்கு

    (b)

    எடுப்புக் கணக்கு

    (c)

    முதல் கணக்கு

    (d)

    அனாமத்து கணக்கு

  6. கணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________. 

    (a)

    இருப்பு கீ/கொ  

    (b)

    இருப்பு கீ/இ 

    (c)

    இருப்பு மு/தூ  

    (d)

    இருப்பு பி/தூ  

  7. கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்

    (a)

    அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.

    (b)

    இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது

    (c)

    கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது

    (d)

    (அ), (ஆ) மற்றும் (இ)

  8. ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது

    (a)

    கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்

    (b)

    விற்பனை கணக்கின் பற்றுபக்கம்

    (c)

    கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்

    (d)

    விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்

  9. ரொக்க ஏடு ஒரு

    (a)

    துணை ஏடு

    (b)

    முதன்மை ஏடு

    (c)

    உரிய குறிப்பேடு

    (d)

    துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு

  10. பின்வருபவற்றில் எது வங்கிச் சரிகட்டும் பட்டியலின் சிறப்பியல்பு அல்ல

    (a)

    காசோலை தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை சரிகட்டும் பட்டியல் காண்பிக்கு

    (b)

    சரிகட்டும் பட்டியல் கணக்காளர் ரொக்கத்தை கையாளும் போது செய்யக்கூடிய மோசடிகளை தடுக்கிறது

    (c)

    வங்கி இருப்பின் உண்மையான நிலையை அறிய பயன்படுகிறது

    (d)

    சரிகட்டும் பட்டியல் கணக்காண்டின் இறுதியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது

  11. கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?

    (a)

    கொள்முதல் கணக்கு

    (b)

    அனாமத்துக் கணக்கு

    (c)

    கடனீந்தோர் கணக்கு

    (d)

    மேற்கண்டது ஏதும் இல்லை

  12. கணக்கின் ஒரு பக்கத்தை பாதிக்கும் பிழை ________________  

    (a)

    ஒரு கணக்கைப் பாதிக்கும் பிழை

    (b)

    இரண்டு கணக்குகளையும் பாதிக்கும் பிழைகள்

    (c)

    இவை இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை 

  13. நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?

    (a)

    இலாப நட்டக் கணக்கு

    (b)

    நிலைச் சொத்து கணக்கு

    (c)

    தேய்மானக் கணக்கு

    (d)

    வங்கி கணக்கு

  14. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  15. வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________ 

    (a)

    முதலினச் செலவு

    (b)

    வருவாயினச் செலவு

    (c)

    நீள்பயன் வருவாயினச் செலவு

    (d)

    இவை எதுவுமில்லை

  16. இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்

    (a)

    கொள்முதலோடு கூட்டப்படும்

    (b)

    கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்

    (c)

    முதலோடு கூட்டப்படும்

    (d)

    முதலிலிருந்து கழிக்கப்படும்

  17. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.

    (a)

    அடக்க விலையில்

    (b)

    சந்தை விலையில்

    (c)

    அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்

    (d)

    அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்

  18. நிறுவன உரிமையாளருக்காகச் செலுத்தப்பட்ட வருமான வரி எதிலிருந்து கழிக்கப்படுகிறது? 

    (a)

    இலாபத்திலிருந்து 

    (b)

    முதலிலிருந்து 

    (c)

    எடுப்பிலிருந்து 

    (d)

    கை ரொக்கத்திலிருந்து 

  19. கணினியை கணக்கியலில் பொதுவாக உபயயோகப்படுத்தப்படும் பகு

    (a)

    வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்

    (b)

    சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்

    (c)

    பண்டகச் சாலைக் கணக்கியல்

    (d)

    மேலே கூறிய அனைத்தும்

  20. ________ குறிமுறைகள்,காசோலை,இடாப்பு போன்ற பல மூல ஆவணங்கள் முதன்மையாக குறிப்பிடப்படுகிறது.  

    (a)

    தொடர்ச்சியான 

    (b)

    தொகுப்புக் 

    (c)

    மதியோட்டு 

    (d)

    இவை அனைத்தும் 

  21. II. ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 21க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 2 = 14
  22. இடாப்பு என்றால் என்ன? 

  23. கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.

  24. குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?

  25. வரவு குறிப்பு என்றால் என்ன?

  26. வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?

  27. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அவற்றைத்
    திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.
    (அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.350 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
    (ஆ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்திலுள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.420 பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
    (இ) கொள்முதல் ஏட்டின் ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகை ரூ.5,353 அடுத்த பக்கத்திற்கு முன் எடுத்து எழுதும் போது ரூ.5,533 என எழுதப்பட்டுள்ளள்ளது.
    (ஈ) சம்பள சம்பளம் ரூ.2,400 பேரேட்டில் ரூ.24,000 என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (உ) செம்பியன்மாதேவியிடமிருந்து கடனுக்கு ரூ.180 க்கு சரக்கு வாங்கியது அவர் கணக்கில் ரூ.1,800 என எடுத்து எழுதப்பட்டுள்ளது

  28. கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.

    இயந்திரம் வாங்கிய விலை ரூ. 2,00,000
    மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் ரூ. 50,000
    எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 15,000
    எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 வருடங்கள்
  29. வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.

  30. இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கப்படும் முறைகள் யாவை?   

  31. கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?

  32. III.ஏதேனும் 7 வினாவிற்கு விடை தருக. வினா எண் 31க்கு கட்டாயம் விடையளிக்கவும்

    7 x 3 = 21
  33. கணக்கியலின் பணிகளை விளக்குக.

  34. கணக்கு என்றால் என்ன? கணக்குகளை வகைப்படுத்தி, தகுந்த உதாரணங்களுடன் கூறுக.

  35. பின்வரும் நடவடிக்கைகளிலிருந்து 2018 ஜனவரி மாதத்திற்கான ரொக்க கணக்கைத் தயாரிக்கவும்.

    ஜன 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ.62,000
    3 ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்கியது ரூ.12,000
    10 ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.10,000
    12 கூலி ரொக்கமாகச் செலுத்தியது ரூ.4,000
    25 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது ரூ.6,000
  36. “இருப்பாய்வு என்பது கணக்கேடுகளில் உள்ள கணக்கீட்டின் சரித்தன்மையை அறிய உதவும் முதல் ஆதார ஆவணமாகும்” என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? காரணம் கூறவும்.

  37. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  38. ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
    ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு  வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
    (அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை
    (ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை  2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
    (இ) ரொக்க  ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
    (ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை  புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை.
    (உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க  ஏட்டில் பதியப்படவில்லை

  39. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
    (அ) ஆனந்துக்கு ரூ.1,000 த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
    (ஆ) இயந்திரம் பழுதுபார்ப்புக்கு ரூ.400 செலுத்தியது, தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
    (இ) காந்திராஜ்-க்கு ரூ.2,000 சம்பளம் செலுத்தியது, பேரபேரேட்டில் தவறாக அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.

  40. 1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
    15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன.

  41. இறுதிக் கணக்குகள் என்றால் என்ன? அதன் பகுதிகள் யாவை?

  42. முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி குறித்து சரிக்கட்டுப் பதிவுகள் தருக.

  43. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் .

    7 x 5 = 35
    1. சந்திரன் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய 2018 மார்ச் மாத நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவை களைக் கொண்டு குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.

       மார்ச்     ரூ 
      1   ரொக்கத்துடன் வியாபாரம் தொடங்கியது       4,00,000
      2   வங்கியில் ரொக்கம் செலுத்தியது 3,00,000
      3   இரவியிடமிருந்து சரக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு இணைய வங்கி மூலம் செலுத்தப்பட்டது 90,000
      4   குமாருக்கு விற்பனை செய்யப்பட்டது அத்தொகையை அவர் பணம் வைப்பு இயந்திரம் மூலம் செலுத்தினார் 10,000
      5   விவேக்கிற்கு விற்பனைச் செய்ததற்கான தொகையினை, அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்துகிறார் 60,000
      6   கீர்த்தனாவிற்கு சரக்குகள் விற்றத் தொகை கடன் அட்டை மூலம் செலுத்தப்பட்ட து 50,000
      7   பங்காதாயம் நேரடியாக வங்கியால் பெறப்பட்டது 2,000
      8   தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மூலம் ரொக்கம் எடுத்தது 3,000
      9   சம்பளம் மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது 6,000
      10   அறக்கட்டளைக்கு கிரிக்கெட்மட்டைகள் வழங்கியது 10,000
    2. குறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.

      ரொக்கம் ரூ 2,000
      இயந்திரம் ரூ 50,000
      அறைகலன் ரூ 5,000
      கடனீந்தோர்கள் ரூ 13,000
      கடனாளிகள் ரூ 18,000
    1. ராஜா என்பவரது ஏடுகளில் கீழ்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து அவற்றைப் பேரேட்டில் எடுத்து எழுதுக.

      2018 மார்ச் 1 செந்தில் என்பவருக்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது ரூ.9,000
      5 முரளி என்பவருக்கு கடனுக்கு சரக்கு விற்றது 4,500
      9 ரொக்க விற்பனை 6,000
      18 மணியிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது 3,200
      23 முரளியின் கணக்கு முழுவதுமாக தீர்க்கப்பட்டு
      அவரிடமிருந்து தொகை பெறப்பட்டது
      4,000
    2. பிரபு என்பவரின் ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்கவும். ஏதேனும் வேறுபாடு இருப்பின் அதனை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்.

      விவரம் ரூ விவரம் ரூ
      அளித்த தள்ளுபடி 250 பெற்ற கடன் 7,000
      கை ரொக்கம் 4,200 மின் கட்டணம் 12,000
      முதல் 50,000 கழிவு கொடுத்தது 3,000
      சம்பளம் 12,000 கொள்முதல் 29,050
      அறைகலன் 7,500 விற்பனை 35,000
    1. பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:

      2017
      மார்ச் 1
      மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
        20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம்
        2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம்
        இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக
      மார்ச்  7 இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
        2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம்
        10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம்
      மார்ச் 21 காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது
        10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம்
        15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம்
        இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250
        இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக.
      மார்ச் 25 சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து
        2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம்
      அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது.
    2. சோழன் என்பவரது முப்பத்தி ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைப் பதிவுசெய்க.

      2017 ஏப்ரல்   ரூ
      1 சோழன் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 50,000
      2 வங்கியில் நடப்புக் கணக்கு துவங்கியது 32,000
      10 ரொக்க விற்பனை 14,000
      11 வங்கியில் ரொக்கம் செலுத்தியது 10,000
      19 அலுவலகத் தேவைக்காக கணிப்பொறி காசோலை மூலம் வாங்கியது  24,000
      22 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது 9,000
      25 காசோலை மூலம் சரக்குகள் வாங்கியது  7,600
      27 வங்கி மேல்வரைப் பற்றிற்கான வட்டி, வங்கி எடுத்துக்கொண்டது 350
      28 அலுவலக பணியாளர்கள் சம்பளத்தை மின்னணு தீர்வை முறை மூலம் செலுத்தியது  30,000
      30 வீட்டுச் செலவினங்களுக்காக ரொக்கம் எடுத்துக் கொண்டது 6,500
    1. ஆனந்த் அவர்களின் 2017 மார்ச் 31 ஆம் நாளன்றைய ரொக்க  ஏடு 1,12,500 இருப்பைக் காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்கவும்
      (அ) 2017 மார்ச் 28 அன்று விடுத்த காசோலை ரூ.23,000 -இல் ரூ  9,000 மதிப்பிலான காச�ோலை மட்டுமே இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
      (ஆ) 2017 மார்ச் 27 அன்று வங்கியில் செலுத்திய காசோலை  ரூ  6,300. 2017 ஏப்ரல் 5 அன்று வசூலித்து வரவு வைக்கப்பட்டது.
      (இ) பெ பெற்ற காசோலை  ரூ 12,000 ரொக்க ஏட்டில் பதியப்பெற்றிருப்பினும் வங்கியில் செலுத்தப்படவில்லை.
      (ஈ) 2017 மார்ச் 30 அன்று வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது ரூ  2,000
      (உ) 2017 மார்ச் 30, அன்று ஏற்கனவே வங்கியில் தள்ளுபடி செய்யப்பட்ட ரூ  3,000 மதிப்புள்ள மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது குறித்து எந்தப் பதிவும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      (ஊ) வங்கியால் நேரடியாக பெறப்பட்ட கடன் பத்திரம் மீதான வட்டி ரூ 700
      (எ) ரொக்க விற்பனை ரூ 4000 தவறுதலாக ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்பட்டது.

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
      [அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
      [ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
      [ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
      [உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
      [ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. 

    1. இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.
      (அ) விற்பனை ஏட்டின் மொத்தம் ரூ.2,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
      (ஆ) இயந்திரம் ரூ.3,000-க்கு கொள்முதல் செய்தது கொள்முதல் ஏட்டில் பதியப்பட்டுள்ளது.
      (இ) மதிக்கு ரூ.450-க்கு சரக்கு விற்றது அவரது கணக்கில் ரூ.540என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
      (ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் ம் மொத்தம் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
      (உ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.1,122 பேரேட்டில் ரூ.1,222 என எடுத்தெழுதப்பட்டுள்ளது

    2. ஜுலை 1, 2015 ஒரு நிறுவனம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.

    1. பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
      (i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
      (ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
      (iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு.

    2. கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு தயாரிக்கவும்.

      விவரம் ரூ விவரம் ரூ
      மொத்த இலாபம் 21,05,000 அளித்த தள்ளுபடி 30,000
      வியாபாரச் செலவுகள் 20,000 அலுவலக மின் கட்டணம் 19,800
      விற்பனை மீதான தூக்குக்கூலி 1,00,000 பெற்ற கழிவு 14,400
      அலுவலகச் சம்பளம் 2,38,000 கடன் மீதான வட்டி 22,000
      அலுவலக அஞ்சல் கட்டணம் 2,200 அலுவலக எழுதுபொருள் 14,000
      சட்டச் செலவுகள் 4.000 விற்பனை மீதான ஏற்றுமதி வரி 23,000
      தணிக்கையாளர் கட்டணம் 16,000 இதர வரவுகள் 5,000
      நன்கொடை அளித்தது 11,000 விற்பனை குறித்த பயணச் செலவுகள் 66,000
      பற்பலச் செலவுகள் 3,600 விற்பனைச் செலவுகள் 53,200
    1. 31.12.2016 அன்று ஜெயின் என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இறுதிக் கணக்குகள் தயார் செய்யவும்

      விவரம் ரூ விவரம் ரூ
      முதல் 20,000 அலுவலக ஊதியம் 6,600
      கடனாளிகள் 8,000 நிறுவுகைச் செலவுகள் 4,500
      கடனீந்தோர் 10,500 விற்பனைச் செலவுகள் 2,300

      கொள்முதல்
      60,000 அறைகலன் 10,000
      விற்பனை 80,000 வங்கி ரொக்கம் 2,400
      ஜெயினுக்குரிய வருமான வரி செலுத்தியது 500 இதர வரவுகள் 600
      தொடக்கச் சரக்கிருப்பு 12,000 எடுப்புகள் 4,800

      சரிக்கட்டுதல்கள்
      (அ) 2016 டிசம்பர் 31 அன்று கொடுபட வேண்டிய சம்பளம்பளம் ரூ 600
      (ஆ) அறைகலன் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
      (இ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% அனுமதிக்க வேண்டும்.
      (ஈ) 31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,000

    2. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விரிதாளைக் கொண்டூ நேர்க்கோட்டு முறையில் தேய்மானத்தைக் கணக்கிடவும்

        A B C D E F
      1 Asset Cost of purchase Installation charge Transportation charge Salvage value Life in years
      2 Machinery 200000 20000 5000 25000 10
      3 Furniture 50000 4000 2000 5000 8

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு ( 11th std Accountancy Revision Exam )

Write your Comment