11th Full Test Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து, குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக

    15 x 1 = 15
  1. கட்டிடவரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப்பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  2. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  3. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  4. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  6. உள்ளீடு பண்பு மற்றும் உள்ளீடு-வெளியீடு தொர்பை ஒரு பிரச்சனை அறியப்படுவது போன்ற செயல் எது?

    (a)

    விவரக்குறிப்பு

    (b)

    கூற்றுக்கள்

    (c)

    நெறிமுறை

    (d)

    வரையறை

  7. C1 என்பது பொய் மற்றும் C2 என்ப து மெய் எனில், இயக்கப்படும் கூட்டு கூற்று எது?
    1   if C1
    2         S1
    3   else
    4        if C2
    5            S2
    6       else
    7             S3

    (a)

    S1

    (b)

    S2

    (c)

    S3

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  8. தற்சுழற்சியின் பின்வரும் வரையறையைப் பயன்படுத்தி யை மதிப்பிட எத்தனைமுறை பெருக்க வேண்டும்?
    \({ a }^{ n }=\left\{ \begin{matrix} 1 & if\quad n=0 \\ a\times { a }^{ n-1 } & otherwise \end{matrix} \right\} \)

    (a)

    11

    (b)

    10

    (c)

    9

    (d)

    8

  9. ஒரு நிரலில் உள்ள மீச்சிறு தனித்த அலகு:

    (a)

    நிரல் 

    (b)

    நெறிமுறை 

    (c)

    பாய்வுப்படம் 

    (d)

    வில்லைகள்

  10. பின்வரும் எந்த முறையில் மெய்யான அளபுருவின் மதிப்பை முறையான அளபுருவில் நகலெடுக்கம்? 
    (i) மதிப்பு மூலம் அழைத்தல்
    (ii) குறிப்பு மூலம் அழைத்தல்
    (iii) முகவரி மூலம் அழைத்தல்        

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (i), (iii)

    (c)

    (ii), (iii)

    (d)

    (ii) மட்டும் 

  11. பின்வரும் கூற்றில் சரியா, தவறா என்பதை எழுதுக.
    (i) கட்டுரு பொருளின் பெயர் மற்றும் உறுப்பினரின் பெயருக்கு எடையில் ஒரு புள்ளி பயன்படுத்தப்படும்.
    (ii) மாறிகளுக்கு மதிப்புகள் இருத்தபடுவதை போன்றே கட்டுரு உறுப்புகளுக்கு மதிப்பு இருத்தப்படும்.
    (iii) அணிகளுக்கு மதிப்பு இருத்தப்படுவதை போன்றே இதற்கும் நேரடியாக மதிப்புகளை இருத்தலாம்.
    (iv) இரண்டு கட்டுரு பொருள்கள் ஒரே வகையான இருந்தால் மட்டுமே கட்டுரு மதிப்பிருத்தலை செய்ய இயலும்.

    (a)

    i-தவறு, ii-சரி, iii-சரி, iv-சரி

    (b)

    i-சரி, ii-சரி, iii-சரி, iv-சரி

    (c)

    i-சரி, ii-தவறு, iii-சரி, iv-சரி

    (d)

    i-சரி, ii-சரி, iii-தவறு, iv-சரி

  12. தரவை நிரலின் நேரடி அணுகு முறையிலிருந்து பாதுகாப்பது

    (a)

    தரவு மறைப்பு 

    (b)

    உறைபொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  13. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவினத்தை உருவாக்கப் பயன்படுகிறது?

    (a)

    பண்புகூறுகள் 

    (b)

    செயற்குறிகள் 

    (c)

    நிரல்கூற்றுகள் 

    (d)

    இனக்குழு 

  14. மிகச்சிறந்த செயற்கூறு அல்லது செயற்குறி பணிமிகப்பு தேர்ந்தெடுப்பு முறையை எவ்வாறு அழைக்கிறது?  

    (a)

    பணிமிகப்பு தீர்மானம்

    (b)

    செயற்கூறு முன்வரவு

    (c)

    அ அல்லது ஆ

    (d)

    அ மற்றும் ஆ

  15. பின்வரும் இனக்குழு அறிவிப்பின் அடிப்படையில், கீழ்காணும் வினாக்களுக்கு விடையளி.
    class vehicle
    { int wheels;
    public:
    void input_ data(float,float);
    void output_data( );
    protected:
    int passenger;
    };
    class heavy_vehicle : protected vehicle {
    int diesel_petrol;
    protected:
    int load;
    protected:
    int load;
    public:
    voidread data(ftoat,ftoat)
    voidwrite_data( ); };
    class bus: private heavy_vehicle {
    charTicket[20];
    public:
    void fetch_data(char);
    voiddisplay_data( ); };
    };
    heavy vehicle என்னும் இனக்குழுவின் அடிப்படை இனக்குழுவை குறிப்பிடுக.

    (a)

    Bus

    (b)

    heavy-vehicle

    (c)

    vehicle

    (d)

    (அ) மற்றும் (இ)

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 24 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  18. வேர்டு நீளம் பற்றி குறிப்பு  எழுதுக

  19. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

  20. ஒருங்கிணைப்பு (Composition) என்றால் என்ன?

  21. நிபந்தனைக் கூற்றுக்கு ஒரு பாய்வுப் படம் வரைக .

  22. continue கூற்று பற்றி சிறுகுறிப்பு வரைக.

  23. strlen() செயற்கூறை பற்றி எழுதுக.

  24. இருபரிமாண அணியில் உள்ள உறுப்பை எவ்வாறு அணுகுவாய்?

  25. தானைவு ஆக்கி எவ்வாறு உருவாக்கப்படுகிறது.

  26. III. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 33 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  27. தட்டாஅச்சுப்பொறிகள்  பற்றி எழுதுக.

  28. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  29. நுண்செயலி மூன்று முக்கிய பகுதிகளை விளக்கு.

  30. ஒரு வரிசைமுறையின் நீளத்தைக் கணக்கிடுவதற்கும், தற்சுழற்சி நெறிமுறையைப் பின்வருமாறு எழுதலாம். நீளம் (s)

  31. a=10, b=15; எனில் a^b – யின் மதிப்பு என்ன?

  32. முன்னியல்புச் செயலுருப்புக்களை  பயன்படுத்தும் போது  கவனிக்கபட வேண்டிய விதிமுறைகளை எழுதுக?            

  33. ஒரு கட்டுருவின் உறுப்புகளை எவ்வாறு அணுக முடியும்? எடுத்துக்காட்டு தருக.

  34. செயற்கூறுகளுக்குப் பொருளை அளபுருக்களாக எத்தனை விதங்களில் அனுப்பி வைக்க முடியும்?

  35. எப்பொழுது அடிப்படை ஆக்கிகள் தாமாகவே அழைக்கப்படும்?

  36. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

    1. ஒரு முழு எண் ஹ - லிருந்து முழு எண் க்ஷ-யை வகுத்து வரும் ஈவு மற்றும் மீதியைக் கான ஒரு நெறிமுறையின் விவரக்குறிப்பை எழுதுக.

    2. விவசாயி, ஆடு, புல்லுக்கட்டு மற்றும் ஓநாய் ஆகிய இந்த நான்கின் நிலையை, நான்கு மாறிகளாகவும், அவைகள் இருக்கும் ஆற்றின் பக்கங்களை அந்த நான்கு மாறிகளுக்கான மதிப்புகளாக குறிப்பிடலாம். தொக்க நிலையில், அனைத்னைத்து நான்கு மாறிகளின் மதிப்பும் L (இடது பக்கம்) என்க. இறுதி நிலையில், இந்த நான்கு மாறிகளின் மதிப்பும் R (வலது பக்கம்) என மாற வேண்டும். இந்த செயல்முறையை (அதாவது, தொடக்க நிலையிருந்து, இறுதி நிலைக்கு மாறுதல்) செய்வதற்கு, S என்ற கூற்றை கட்டமை்டமைப்பது இதன் நோக்கமாகும்.

    1. C++ல் நிரலை உருவாக்குவதற்கு இயக்குவதற்கும் உள்ள படிநிலைகளை எழுதுக.

    2. நுழைவு சோதிப்பு மடக்கு என்றால் என்ன? ஏதேனும் ஒரு நுழைவு சோதிப்பு மடக்கை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. வரையெல்லை தெளிவுபடுத்தும் செயற்குறியை எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதவும்.       

    2. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விரிவாக எழுதுக.

    1. பின்வரும் நிரலின் வெளியீட்டை எழுதுக.
      #include < iostream >
      using namespace std;
      class add
      {
      int num 1, num2, sum;
      public:
      add ( )
      {
      cout << "\n Constructor without parameters ..";
      num1=0;
      num2=0;
      sum =0:
      }
      add (int s1, int s2)
      {
      cout << "\nParameterized constructor ..";
      num1 = s1;
      num2=s2;
      sum=0;
      }
      add (add &a)
      {
      cout << "\n Copy Constructor ...";
      num1 = a.num1;
      num2 = a.num2;
      sum=0;
      }
      void getdata ( )
      {
      cout << "\nEnter data ...";
      cin >> num1 >> num2;
      }
      void addition( )
      {
      sum=num 1+num2;
      }
      void putdata ( )
      {
      cout << "\n The numbers are ..";
      cout << num1<<'\t'< cout << "\n The sum of the numbers are .." << sum;
      }
      };
      int main( )
      {
      add a, b (10, 20), c(b);
      a.getdata( );
      a.addition( );
      b.addition( );
      c.addition( );
      cout << "\n Object a :";
      a.putdata( );
      cout << "\n Object b :";
      a.putdata( );
      cout << "\n Obect c..";
      c.putdata( );
      return 0;
      }

    2. மரபுரிமத்தின் பல்வேறு வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Science Full Test Question Paper 2018 )

Write your Comment