11th Full Test Exam

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    15 x 1 = 15
  1. π இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு _______.

    (a)

    9.8596

    (b)

    9.860

    (c)

    9.86

    (d)

    9.9

  2. பின்வரும் எந்த கார்டீசியன் ஆய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

    (a)

    (b)

    (c)

    (d)

  3. ஓய்வு நிலையில் இருக்கும் துகள் கிடைத்தளத்தில் நேர்கோட்டில் சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது. நான்காவது மற்றும் மூன்றாவது நொடிகளில் அது கடந்த தொலைவுகளின் தகவு______ 

    (a)

    4/3

    (b)

    26/9

    (c)

    7/5

    (d)

    2

  4. பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க.

    (a)

    மையவிலக்கு மற்றும் மையநோக்கு விசைகள் செயல், எதிர்செயல் இணைகள்

    (b)

    மையநோக்கு விசை இயற்கை விசையாகும்

    (c)

    மையவிலக்கு விசை, ஈர்ப்பு விசையிலிருந்து உருவாகிறது

    (d)

    வட்ட இயக்கத்தில் மையநோக்கு விசை மையத்தை நோக்கியும், மையவிலக்கு விசை வட்டமையத்திலிருந்து வெளி நோக்கியும் செயல்படுகிறது

  5. ஒரு குண்டு துப்பாக்கிலிருந்து சுடப்படுகிறது.துப்பாக்கியானது பின்னோக்கித் தடையின்றி இயங்குமானால் இயக்க ஆற்றல்_______

    (a)

    குண்டின் K.E.ஐ விட குறைவு   

    (b)

    சமம் அல்லது குண்டை விட குறைவு 

    (c)

    துப்பாக்கிக் குண்டின் K.E.ஐவிட அதிகம்    

    (d)

    சமமானது 

  6. ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியாக இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும்  இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின்  நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட விதம் யாது?               

    (a)

    \(\frac { 1 }{ 2 } { mv }^{ 2 }\)

    (b)

    mv3

    (c)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

    (d)

    \(\frac { 5 }{ 2 } { mv }^{ 2 }\)

  7. M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது ፀ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்______.

    (a)

    5:7

    (b)

    2:3

    (c)

    2:5

    (d)

    7:5

  8. ஒரு அமைப்பின் நிறையின் மையம் 

    (a)

    அமைப்பின் மையத்தில் இருக்கும் 

    (b)

    அமைப்பிற்கு வெளியே இருக்கும் 

    (c)

    அமைப்பிற்கு உள்ளே இருக்கும் 

    (d)

    அமைப்பிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ இருக்கும் 

  9. புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் _____.

    (a)

    நிலை ஆற்றலுக்குச் சமம் 

    (b)

    நிலை ஆற்றலைவிடக் குறைவு 

    (c)

    நிலை ஆற்றலை விட அதிகம் 

    (d)

    சுழி 

  10. மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாய்யில், நீரானது 20 cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms-1 திசைவேகத்தில்செல்கிறது. 1.5 ms-1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியின் குழாயின் விட்டமானது  _____.

    (a)

    8

    (b)

    16

    (c)

    24

    (d)

    32

  11. வெகு தொலைவிலுள்ள விண்மீனொன்று  350 mm அலைநீளத்தில் பெருமச் செறிவுகொண்ட கதிர்வீச்சை உமிழ்கிறது எனில், அவ்வீண்மீனின் வெப்பநிலை ______.

    (a)

    8280 K

    (b)

    5000 K 

    (c)

    7260 K 

    (d)

    9044 K 

  12. 8g ஹீலியம் மற்றும் 16g ஆக்சிஜன் உள்ள வாயுக்கலவையின் \(\gamma ={C_p\over C_v}\)மதிப்பு என்ன?

    (a)

    23/15

    (b)

    15/23

    (c)

    27/11

    (d)

    17/27

  13. ஒரு கலனில் வாயுவின் அழுத்தம் P எல்லா மூலக்கூறுகளின் நிறைகளும் பாதியாகவும், வேகம் இரட்டிப்பாகவும் இருக்கும்போது தொகுபயன் அழுத்தம்.

    (a)

    4P 

    (b)

    2P 

    (c)

    (d)

    \(P \over 2\)

  14. ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300Hz, 600Hz, 750Hz மற்றும் 900Hz இந்த தொடரில் விடுபட இரு அதிர்வெண்கள் யாவை?

    (a)

    100Hz, 150Hz

    (b)

    150Hz,450Hz

    (c)

    450Hz, 700Hz

    (d)

    700Hz, 800Hz

  15. ஒரு சமதள முன்னேறு அலைகள் முன்னேறி ச் செல்லும் போது

    (a)

    எல்லாத்துகள்களின் வீச்சும் சமம் 

    (b)

    ஊடகத்தின் துகள்கள் தனிசீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும்

    (c)

    அலையின் திசைவேகம் ஊடகத்தின் தன்மையைப் பொறுத்தது.

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 2 = 12
  17. அளவீடு செய்தலில் 'பிழை' என்றால் என்ன? இதனால் அளவீடுகளில் ஏற்படும் தாக்கம் யாது?

  18. x அச்சினை கிழக்குத் திசையாகவும் y அச்சினை வடக்குத்திசையாகவும் மேலும் z அச்சினை செங்குத்தான மேல் நோக்கிய திசையாகவும் கருதி கீழ்க்கண்டவற்றை வெக்டர் முறையில் குறிப்பிடுக.
    a) 5 மீட்டர் வட கிழக்கு மற்றும் 2 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
    b) 4 மீட்டர் தென்கிழக்கு மற்றும் 3 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்
    c) 2 மீட்டர் வடமேற்கு மற்றும் 4 மீட்டர் மேல் நோக்கியத்திசையில்.

  19. படம் 1 மற்றும் 2 இல் காட்டப்பட்ட 25 kg மிதிவண்டிகளின் முடுக்கங்களைக் கணக்கிடு.

  20. 20 kg நிறைவுள்ள ஒரு சிறுவனை ஒரு சாய்வுத் தளம் \(\theta \)=45° யில் 10 m தொலைவு வழியாக நிலையான திசைவேகத்துடன் நகர்த்த செய்யப்படும் வேலையாது?  

  21. பொருட்கள் மீது செயல்படும் விசைகள் யாவை? பொருட்கள் நகரும்போது எத்தகைய இயக்கம் நடைபெறுகிறது?

  22. ஈர்ப்புத் தன்னிலை ஆற்றல் - வரையறு 

  23. வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியின் கிளாசியஸ் கூற்றைக் கூறுக.

  24. கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?

  25. மனிதன் ஒருவன் ஒரு மலை உச்சியிலிருந்து குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டு கைதட்டுகிறான். 4s கழித்து மலை உச்சியிலிருந்து அந்த கைத்தட்டலின் எதிரொலியை கேட்கிறான். ஒலியின் சராசரி திசைவேகம் 343 ms-1 எனில் மனிதனிடமிருந்து மலை உச்சியின் தொலைவை காண்க.

  26. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 3 = 18
  27. ஒரு பொருளின் திசைவேகத்தின் சமன்பாடு v = b/t + ct2 + dt3 எனில் b இன் பரிமாணத்தைப் பெறுக.

  28. ஒரு ரேடியன் - வரையறு.

  29. புவிப்பரப்பில் ஓய்வு நி்லையிலுள்ள பொருள் ஒன்றுக்கு நியூட்டனின் இரண்டாம் விதியினைப் பயன்படுத்தி அ்தன் மூலம் பெறப்படும் முடிவுகளை ஆராய்க.

  30. 2 kg நிறையுள்ள பொருள் தரையிலிருந்து 5 m உயரத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது  (g = 10 m s-2) எனில்
    a) பொருளினுள் சேமிக்கப்பட்டுள்ள நிலையாற்றல் யாது?
    b) இந்த நிலையாற்றல் எங்கிருந்து கிடைத்தது?
    c) பொருளை அந்த உயரத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு புறவிசை செயல்பட வேண்டும்?
    d) பொருளானது ‘h’ உயரத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போது அதன் மீது செயல்படும் நிகர விசை யாது?

  31. உறுதி மற்றும் உறுதியற்ற சமநிலையை எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  32. தாலமியின் புவிமையக் கொள்கை என்றால் என்ன? விவரி.

  33. நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏதன் அடிப்படையில் இயங்குகின்றன? எவ்வாறு?    

  34. குவளையில் உள்ள சூடான தேநீரில் அதிக வெப்பம் உள்ளது. இக்கூற்று சரியா, தவறா? தவறெனில் ஏன்?

  35. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி

  36. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    5 x 5 = 25
    1. புவியின் நடுவரைக் கோட்டின் எதிரெதிர் புள்ளியல் இருந்து காணும் ஒரு வான் பொருளின் இடமாறு தோற்றக் கோணம் 2' எனில் வான்பொருளின் தொலைவைக் கணக்கிடுக. [புவியின்ஆரம் = 6400 km] [1" = 4.85 \(\times\) 10-6 rad]  

    2. \(\\ \overrightarrow { A } =2\hat { i } -\hat { j } \) மற்றும் \(\overrightarrow { B } =4\hat { i } -3\hat { j } \)எனில் பின்வருவனவற்றின் ஸ்கேலர் எண்மதிப்பு மற்றும் x அச்சு பொருத்து திசையையும் காண்.
      (i) \(\overrightarrow { A } \) (ii)\(\overrightarrow {B } \) (iii) \(\overrightarrow { A } \)+\(\overrightarrow {B } \)  (iv) \(\overrightarrow { A } \)-\(\overrightarrow {B } \)

    1. பிரிவு 3.6.3 வெளி விளிம்பு உயர்த்தப்பட்ட சாலை உட்பிரிவில், சாலையின் பரப்பு காரின் டயர் மீது செலுத்தும் உராய்வு விசையைப் பற்றி நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. காரின் டயருக்கும், சாலையின் பரப்பிற்கும் இடையேயுள்ள ஓய்வுநிலை உராய்வுக்குணகம் எனக் கருதி, காரொன்று வளைவுச் சாலையில் சறுக்காமல் வளைவதற்கான பெருமத் திசைவேகத்தின் கோவையைப் பெறுக.

    2. புவிப்பரப்பிரு அருகில் நிலை ஆற்றல் வேலை மூலம் வரையறுக்கப்படுதலை சமன்பாட்டுடன் விவரி?

    1. AB,CD என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான O வில் இணைக்கப்பட்ட சட்டங்கள் படத்தில் காட்டியுள்ளவாறு தரையில் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கம்பி D என்ற புள்ளியில் கட்டப்பட்டுள்ளது. கம்பியின் தனித்த முனை E யானது விசை \(\vec {F}\) இனால் இழுக்கப்படுகிறது. விசை உருவாக்கிய திருப்பு விசையின் எண் மதிப்பையும். திசையையும்,
      (i) E, D, O மற்றும் B புள்ளிக்களைப் பொருத்து
      (ii) DE, CD, AB மற்றும் BG அச்சுகளைப் பொறுத்து காண்க.

    2. (அ) 15 மீட்டர் உயரத்திலிருந்து 1/2 kg நிறையுடைய மாம்பழம் கீழே விழுகிறது. கீழே விழத் தொடங்கும் போது அதன் ஈர்ப்பின் முடுக்கம் யாது?
      (g = 9.8 ms-2; புவியின் ஆரம் = 6400 x 10m)
      (ஆ) புவி பரப்பிலிருந்து 1600 km உயரத்தில் ஒரு துணைக்கோள் புவியை சுற்றி வருகின்றது. புவியின் ஈர்ப்பு விசையால் துணைக்கோள் அடையும் முடுக்கம் யாது?

    1. ஒரு மெல்லிய தண்டின் புறக்கணிக்கத்தக்க நிறையும், குறுக்குப் பரப்பு 4 X 10-6 உடையது. 1000C ல் 5 நீளமுள்ள ஒருமுனை குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. 00C ல் குளிர்வடையும்போது சுருங்குவதைக் தடுக்க அதன் கீழ்முனையில் ஒரு நிறை இணைக்கப்படுகிறது. நிறை , தண்டின் சேகரிக்கப்பட்ட ஆற்றல் காண்க. Y =10X 1011 Nm -2நீரின் விரிவு குணகம் =10-5k -1 g =10ms-2

    2. வெப்ப விரிவைப்பற்றி விவாதித்து எழுதுக.

    1. தனிஊசலை விரிவாக விவாதிக்க.

    2. ஒலியின் செறிவு உரப்பு என்றால் என்ன? அவற்றைப்பற்றி விளக்குக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் திருப்புதல் தேர்வு 2018-19 ( 11th physics revision exam 2018-19 )

Write your Comment