12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31ஆம் நாளைய முதல் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 27,500
    உரிமையாளர் தன் சொந்த பயனுக்கு சரக்கு எடுத்தது 5,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 2,500
    அவ்வாண்டின் இலாபம் 10,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் 75,000
    2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 3,70,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது 1,00,000
    கொள்முதல் திருப்பம் 15,000
    ரொக்கக் கொள்முதல் 3,20,000
    2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 50,000
    2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000
  3. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  4. முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?

  5. நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.

  6. கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்

    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   அறைகலன் வாங்கியது 10,000
    கைரொக்கம் 11,000 வாடகை  2,800
    பங்காதாயம் பெற்றது 27,600 செயலர் மதிப்பூதியம் 15,000
    பழைய செய்தித்தாள் விற்றது 3,000 தபால் செலவுகள்  1,700
    உறுப்பினர் சந்தா 31,000 பொதுச் செலவுகள் 4,350
    பாதுகாப்பு பெட்டக வாடகை 8,000 அச்சு மற்றும் எழுதுபொருள்கள்  45,000
    முதலீடுகள் மீதான வட்டி 1,250 தணிக்கைக் கட்டணம் 5,000
    அறைகலன் விற்றது 5,000 இறுதி இருப்பு  
    (ஏட்டு மதிப்பு ரூ4,400)   கைரொக்கம்  3,000
      86,850   86,850
  7. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்

  8. பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

  9. A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
    (i) A அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
    (ii) B ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B-யிடம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீது வட்டி அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iii) C யிடமிருந்து நிறுவனத்திற்கு பெறப்பட்ட கடன் ரூ.10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% வேண்டுமென்று கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iv) D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார். B மற்றும் C அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (v) A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக்கொள்ளவில்லை.

  10. A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
    (i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
    (ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
    (iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது

  11. சையது, சாமுவேல் மற்றும் சுதாகர் மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி சாமுவேலிற்கு மாத ஊதியம் ரூ.2,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் சுதாகருக்கு கழிவு ஆண்டுக்கு ரூ. 6,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  12. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

  13. பிரகாஷ் மற்றும் சுப்ரியா என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் பிரகாஷ் ரூ.3,00,000 மற்றும் சுப்ரியா ரூ.2,00,000 ஆகும். 2018, ஜுலை 1 அன்று பிரகாஷ் கூடுதல் முதலாக ரூ.60,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் சுப்ரியா ரூ.30,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிட்டு, அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  14. சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    பிப்ரவரி 1 2,000
    மே 1 10,000
    ஜுலை 1 4,000
    அக்டோபர் 1 6,000

     பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  15. அருள் வணிக நிறுவனத்தின் பின்வரும் விவரங்களிலிருந்து 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) டிசம்பர் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுகளான 2016, 2017 மற்றும் 2018 ன் இலாபங்கள் முறையே ரூ.46,000, ரூ.44,000, மற்றும் ரூ.50,000.
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.5,000 சேர்ந்துள்ளது.
    (இ) 2017ஆம் ஆண்டின் இறுதிச் சரக்கிருப்பு ரூ.10,000 அதிகமாக மதிப்பிடப்பட்டது.

  16. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.

  17. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
    (ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
    (iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
    (iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  18. இராஜேஷ் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3.2 என இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். இராமன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். அவர்களது புதிய இலாப விகிதம் 5:3:2. பின்வரும் மறுமதிப்பீடுகள் செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.
    (அ) கட்டடத்தின் மதிப்பு ரூ.15,000 உயர்த்தப்பட்டது
    (ஆ) இயந்திரத்தின் மதிப்பு ரூ.4,000 குறைக்கப்பட்டது
    (இ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.1,000 உருவாக்கப்பட்டது.

  19. கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?

  20. சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
    (i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
    (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

  21. பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் 

    ரூ.

    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    பிரின்ஸ் 30,000   பொறித்தொகுதி 50,000
    தேவ்  50,000   அறைகலன் 10,000
    சசிரேகா 20,000 1,00,000 சரக்கிருப்பு 15,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   10,000 கடனாளிகள் 20,000
    பொதுக்காப்பு   15,000 வங்கி ரொக்கம் 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   17,000    
    பற்பல கடனீந்தோர்   8,000    
        1,50,000   1,50,000

    1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

  22. கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
    (i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
    (ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
    (iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  23. ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
    (ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.

  24. அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.

  25. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment