12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. சாந்தி என்பவரின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புகள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 6,000 பற்பல கடனீந்தோர் 25,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 4,000 சரக்கிருப்பு 45,000
    இயந்திரம் 60,000 கடனாளிகள் 70,000
    அறைகலன் 10,000 ரொக்கம் 4,000

    2018, டிசம்பர் 31ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரித்து அந்நாளைய முதலை கணக்கிடவும்.

  2. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் ரூ.
    ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018) 5,00,000
    ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2019) 8,50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 1,20,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 70,000
  3. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    தொடக்க கடனீந்தோர் 1,70,000
    கொள்முதல் திருப்பம் 20,000
    கடனீந்தோருக்குச் செலுத்தியது 4,50,000
    இறுதிக் கடனீந்தோர் 1,90,000
  4. பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

    சந்தா பெற்றது  ரூ
    2015 - 16 - க்காக 7,500
    2016 –17 - க்காக 60,00
    2017 – 18 - க்காக 1,500
      69,000

    2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000

  5. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  6. பின்வரும் விவரங்கள் ஒரு சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும்?

    விவரம் ரூ
    1.4.2017 அன்று பரிசு நிதி 60,000
    1.4.2017 அன்று பரிசு நிதிக்கான முதலீடு 60,000
    பரிசு நிதி முதலீடு மீதான வட்டிப் பெற்றது 6,000
    பரிசுகள் வழங்கியது 8,000
    பரிசு நிதிக்காக நன்கொடைப் பெற்றது 12,000
  7. ஆயுள் உறுப்பினர் கட்டணம் – சிறு குறிப்பு தரவும்

  8. பின்வரும் விவரங்கள் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    2018 ஆம் ஆண்டில் சந்தா பெற்றது ரூ50,000. இதில் 2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 5,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ 7,000 உள்ளடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தாரூ 6,000. 2017 ஆம் ஆண்டில் முன்கூட்டிப்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.4,000

  9. சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ 
    விளையாட்டு உபகரணங்கள் 30,000 பரிசு நிதி 10,000
    கணிப்பொறி 25,000 பரிசுநிதி முதலீடுகள் 10,000
    2018-2019 ஆம் ஆண்டில் சந்தா பெறவேண்டியது 5,000 கைரொக்கம்  7,000
    2019-20 ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா 8,000 வங்கி ரொக்கம்  21,000
  10. அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.

  11. 2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
    2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.

  12. பிரியா மற்றும் கவிதா இருவரும் கூட்டாளிகள். பிரியா ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.4,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6% 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

  13. இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?

  14. குமார் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 4,000
    ஜூன் 1 4,000
    செப்டம்பர் 1 4,000
    டிசம்பர் 1 4,000

    எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும். 

  15. கூட்டாண்மை பொருள் தருக.

  16. உயர் இலாபம் என்றால் என்ன?

  17. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014: ரூ.10,000; 2015: ரூ.11,000; 2016: ரூ.12,000; 2017: ரூ.13,000 மற்றும் 2018: ரூ.14,000; 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  18. கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

  19. ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜோயல் என்பவரை \(\frac{1}{8}\) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  20. சுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன்பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  21. மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  22. அசோக் மற்றும் மும்தாஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 5:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் தருண் என்பவரை 2/9 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.27,000 என்று மதிப்பிடப்படுகிறது. தருணால் தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. நிறுவனம் மாறுபடும் முதல் முறையில் கணக்கினைப் பராமரிக்கிறதெனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  23. புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?

  24. இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  25. செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.

  26. அம்பிகா, தரணி மற்றும் பத்மா மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அம்மூவரும் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரம்யா என்பவரை 25% இலாபம் தருவதாக கூட்டாண்மையில் அனுமதித்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.

  27. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  28. மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  29. கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்

  30. குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்

  31. நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்யெர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
    ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்

  32. ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?

  33. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  34. ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3:5:7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3:1 எனும் விகிதத்தில் ராமுவும் சோமுவும் எடுத்துக்கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  35. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

    1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  36. கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  37. சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, மீதமுள்ள தொகை தேவையான பொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
    60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
    75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
    5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
    அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  38. குறை ஒப்பம் என்றால் என்ன?

  39. பின்வரும் விவரங்களிலிருந்து அப்துல் வரையறு நிறுமத்தின் ஒப்பீட்டு வருமான அறிக்கையை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,00,000 3,60,000
    இதர வருமானம் 1,00,000 60,000
    செலவுகள் 2,00,000 1,80,000
    வருமான வரி 30% 30%
  40. சந்திரா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக்குறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக்குறிப்பினைத் தயார் செய்யவும்.

    விவரம் 2016, மார்ச் 31 2017, மார்ச் 31
    ரூ. ரூ.
    I.பங்குமூலதனம் மற்றும்பொறுப்புகள்    
      பங்குதாரர் நிதி 1,00,000 2,60,000
      நீண்ட காலப் பொறுப்புகள் 50,000 60,000
      நடப்புப் பொறுப்புகள் 25,000 30,000
    மொத்தம் 1,75,000 3,50,000
    II. சொத்துகள்    
      நிலைச் சொத்துகள் 1,00,000 2,00,000
      நடப்புச் சொத்துகள் 75,000 1,50,000
    மொத்தம் 1,75,000 3,50,000
  41. நடைமுறை முதல் என்றால் என்ன?

  42. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் பொருள் எழுதுக.

  43. கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆனந்த் கட்டுமான நிறுமத்தின் தகவல்களிலிருந்து, விரைவு விகிதத்தைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ
    மொத்த நடப்புப் பொறுப்புகள் 1,00,000
    மொத்த நடப்புச் சொத்துகள் 2,50,000
    சரக்கிருப்பு 50,000
    முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 15,000
  44. பயோனியர் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்.

    பயோனியர் நிறுமத்தின் 31.3.2019 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம் ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்குமுதல்  
         (i) நேர்மைப் பங்குமுதல் 1,00,000
          (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 75,000
       (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 25,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
       நீண்டகாலக் கடன்கள் -
    3. நடப்புப் பொறுப்புகள்  
      கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 2,00,000
    மொத்தம் 4,00,000
    II. சொத்துகள்  
    1. நீண்டகாலச் சொத்துகள்  
      (அ) நிலைச் சொத்துகள் 2,75,000
      (ஆ) நீண்டகால முதலீடுகள் 50,000
    2. நடப்புச் சொத்துகள்  
    ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 75,000
    மொத்தம் 4,00,000
  45. புற அக பொறுப்பு விகிதம் என்றால் என்ன?

  46. முதலீடுகள் மீதான வருவாய் விகிதம் எதைக் குறிப்பிடுகிறது?

  47. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  48. கணக்கியல் அறிக்கைகள் என்றால் என்ன?

  49. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  50. கணக்கியல் அறிக்கைகளை வடிவமைத்தலின் படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam)

Write your Comment