12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    20 x 1 = 20
  1. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள் ______.

    (a)

    நட்டம்

    (b)

    ரொக்கம்

    (c)

    முதல்

    (d)

    இலாபம்

  2. இரட்டைப்பதிவு முறையில் தயாரிக்கப்படுவதால் நம்பகத்தன்மை உடையது எது?

    (a)

    நிலையறிக்கை 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    இருப்பாய்வு 

    (d)

    இலாபநட்ட அறிக்கை 

  3. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை_____.

    (a)

    வருவாயின வரவு

    (b)

    முதலின வரவு

    (c)

    வருவாயினச் செலவு

    (d)

    முதலினச் செலவு

  4. இலாப நோக்கற்ற அமைப்புகளால் பெறப்படும் பரிசுத்தொகை ______ எனப்படும்.

    (a)

    முதலீடு மீதான வட்டி 

    (b)

    சந்தா 

    (c)

    நன்கொடைகள் 

    (d)

    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 

  5. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

    (b)

    கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

    (c)

    கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

    (d)

    கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

  6. கூட்டாண்மை உடன்பாடு இல்லாத நிலையில் ________ மீதான வட்டி விதிக்கக் கூடாது.

    (a)

    முதல்

    (b)

    எடுப்புகள்

    (c)

    கடன்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது _____.

    (a)

    சராசரி இலாபம்

    (b)

    சாதாரண இலாப விகிதம்

    (c)

    எதிர்நோக்கும் இலாப விகிதம்

    (d)

    இவைகளில் ஏதுமில்லை

  8. ______ முறையில் நற்பெயரானது, கடந்த சில ஆண்டுகளின் சராசரி இலாபத்தைக் கொள்முதல் செய்வதன் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

    (a)

    சராசரி இலாப அடிப்படையில்

    (b)

    கூட்டு சராசரி இலாபமுறை

    (c)

    உயர் இலாப முறை

    (d)

    ஆண்டுத் தொகை முறை

  9. கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

    (a)

    பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

    (b)

    முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

    (c)

    கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

    (d)

    ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

  10. புதிய இலாபப் பகிர்வு விகித நிர்ணயம், புதிய கூட்டாளி பழைய கூட்டாளிகளிடம் பெறக்கூடிய ________ சார்ந்தது.

    (a)

    பொறுப்பினை

    (b)

    இலாபப் பங்கினை

    (c)

    சொத்தினை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  11. கூட்டாளி ஒருவர் ஜுன் 30 அன்று கூட்டாண்மை நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் கூட்டாண்மை நிறுவனத்தின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாவது_____.

    (a)

    நடப்பு கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (b)

    முந்தைய கணக்காண்டின் இறுதி வரைக்கும்

    (c)

    கூட்டாளி விலகும் நாள் வரைக்கும்

    (d)

    கூட்டாளியின் கணக்கைத் தீர்வு செய்யும் வரைக்கும்

  12. ________ என்பது தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்கப் பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.

    (a)

    ஆதாய விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    பிளளையா இலாப விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  13. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  14. முதலினக் காப்பு என்பது _______ இலாபத்தைக் குறிக்கின்றது.

    (a)

    வருவாயின

    (b)

    முதலின

    (c)

    செலவின 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  15. இருப்புநிலைக் குறிப்பு, வணிக நிறுவனத்தின் நிதிநிலை பற்றிய  ________ தகவல்களை வழங்குகிறது.

    (a)

    ஒரு காலக்கட்டத்திற்கு மேலான

    (b)

    ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய

    (c)

    ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான

    (d)

    குறிப்பிட்ட கணக்காண்டிற்குரிய

  16. _____ நடப்புப் பொறுப்புகளை விட அதிகமாக உள்ள நடப்புச் சொத்துகளைக் குறிப்பதாகும்.

    (a)

    மாறுபடும் முதல் 

    (b)

    நிலை முதல் 

    (c)

    நடைமுறை முதல் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  17. புற அக பொறுப்புகள் அளவிடுவது ______.

    (a)

    குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

    (b)

    நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

    (c)

    இலாபம் ஈட்டும் திறன்

    (d)

    செயல்திறன்

  18. விற்பனை மூலம் பெற்ற வருவாய் என்பது ______ ஆகும்.

    (a)

    நிகர கொள்முதல் 

    (b)

    நிகர விற்பனை 

    (c)

    நிகர இலாபம் 

    (d)

    மொத்த இலாபம் 

  19. எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? 

    (a)

    தலைமைப் பதிவு 

    (b)

    அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்  

    (c)

    அறிக்கைகள் 

    (d)

    சொத்துகள் கடனுக்கு வாங்கியது 

  20. ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கிய பின்பும் ஒவ்வொரு முறை Tallyஐ துவக்கும் போதும் _______ தோன்றும்.

    (a)

    Tally யின் திரை 

    (b)

    Tally option button 

    (c)

    Image 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  22. பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும். 

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000
    ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000
  23. மதிப்பூதியம் என்றால் என்ன?

  24. கூட்டாண்மை பொருள் தருக.

  25. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.

  28. குறை ஒப்பம் என்றால் என்ன?

  29. நிதிநிலை அறிக்கைகள் யாவை?

  30. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  31. Tally.ERP 9-ல் குழு என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  33. நிலை அறிக்கை மற்றும் இருப்புநிலைக் குறிப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தரவும்.

  34. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  35. கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.

  36. நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.

  37. மாலதி மற்றும் ஷோபனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:4 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் ஜெயஸ்ரீ என்பவரை 1/3 இலாபப் பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். ஜெயஸ்ரீ தன்னுடைய பங்காக ரூ.6,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:2:1. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, நற்பெயர் சரிக்கட்டுதலுக்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  38. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  39. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  40. நிதி அறிக்கைகளின் இயல்புகள் யாவை?

  41. ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
    அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
    அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000.

  42. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. பாரதி தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிக்கவில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      ப ரொக்க ஏடு வ
      பெறுதல்கள் ரூ. செலுத்தல்கள் ரூ.
      இருப்பு கீ/கொ 32,000 கொள்முதல் க/கு 56,000
      விற்பனை க/கு 1,60,000 கடனீந்தோர் க/கு 80,000
      கடனாளிகள் க/கு 1,20,000 பொதுச் செலவுகள் க/கு 24,000
          கூலி க/கு 10,000
          இருப்பு கீ/இ 1,42,000
        3,12,000   3,12,000

      பிற தகவல்கள்:

      விவரம் 1.4.2018 ரூ. 31.3.2019 ரூ.
      சரக்கிருப்பு 40,000 60,000
      கடனாளிகள் 38,000 ?
      கடனீந்தோர் 58,000 52,000
      இயந்திரம் 1,70,000 1,70,000

      கூடுதல் தகவல்கள்:
      (i) கடன் கொள்முதல் 74,000
      (ii) கடன் விற்பனை 1,40,000
      (iii) தொடக்க முதல் 2,22,000
      (iv) இயந்திரம் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.

    2. கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்

      பெறுதல்கள் ரூ ரூ செலுத்தல்கள்  ரூ  ரூ 
      இருப்பு கீ/கொ     மைதான வாடகை செலுத்தியது   12,000
      கைரொக்கம்  23,000   அச்சுக் கட்டணம்   5,000
      வங்கிரொக்கம்  12,000 35,000 வங்கிக் கட்டணம்    1,000
      அரங்க வாடகை பெற்றது   6,000 கட்டடம் மீதான காப்பீடு   2,000
            தொடர் விளையாட்டுப் போட்டிச்    
      சந்தா பெற்றது   9,000 செலவுகள்   16,000
      ஆயுள் உறுப்பினர் கட்டணம்    7,000 தணிக்கைக் கட்டணம்   3,000
      பாதுகாப்பு பெட்டக
      வாடகைப் பெற்றது
        2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது   4,000
            இருப்பு கீ/இ    
            கைரொக்கம்  2,000  
            வங்கி ரொக்கம்  14,000 16,000
          59,000     59,000
    1. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

      விவரம்  ரூ. விவரம்  ரூ.
      தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
      வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
      அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
      வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
      முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
      சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
      கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
      அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
      ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
          வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
    2. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

      நாள் ரூ.
      மார்ச் 1 8,000
      ஜூன் 1 6,000
      செப்டெம்பர் 1 4,000
      டிசம்பர் 1 3,000

      பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

    1. ஜேம்ஸ் நிறுமத்தின் பின்வரும் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பிலிருந்து கீழ்க்காணும் விகிதங்களைக் கணக்கிடவும்.
      (i) புற அக பொறுப்புகள் விகிதம்
      (ii) உரிமையாளர் விகிதம்
      (iii) முதல் உந்துதிறன் விகிதம்

      ஜேம்ஸ் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம் தொகை
      ரூ.
      I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      1. பங்குதாரர் நிதி  
        (அ) பங்கு முதல்  
        நேர்மைப் பங்குமுதல் 2,50,000
        6% முன்னுரிமைப் பங்கு முதல் 2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 1,50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்  
        நீண்டகாலக் கடன்கள் (8% கடனீட்டுப் பத்திரங்கள் ) 3,00,000
      3. நடப்புப் பொறுப்புகள்  
        (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகியகாலக் கடன்கள் 2,00,000
        (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,00,000
      மொத்தம் 12,00,000
      II. சொத்துகள்  
      1. நீண்டகாலச் சொத்துகள்  
        நிலைச் சொத்துகள் 8,00,000
      2. நடப்புச் சொத்துகள்  
        (அ) சரக்கிருப்பு 1,20,000
        (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 2,65,000
        (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 10,000
        (ஈ) இதர நடப்புச் சொத்துகள்  
        முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் 5,000
      மொத்தம் 12,00,000
    2. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
      (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
      (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
      (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

      அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம்  ரூ 
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
      1. பங்குதாரர் நிதி   
        (அ) பங்குமுதல்   
        நேர்மைப் பங்குமுதல்  1,50,000
        8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்   
        நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
      3. நடப்பு பொறுப்புகள்   
        (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
        (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
        மொத்தம்  10,00,000
      II  சொத்துகள்   
      1. நீண்ட காலச் சொத்துகள்   
        நிலைச் சொத்துகள்  7,50,000
      2. நடப்புச் சொத்துகள்  1,20,000
        (அ) சரக்கிருப்பு  1,20,000
        (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
        (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
        (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
        செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
        மொத்தம்  10,00,000
    1. பின்வரும் தகவல்களிலிருந்து, உயர் இலாபத்தினை மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
      (அ) சாதாரண இலாப விகிதம் 10%
      (ஆ) கடந்த 4 ஆண்டுகளின் இலாபங்கள் ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 மற்றும் ரூ.45,000.
      (இ) மேற்குறிப்பிட்ட இலாபம் ரூ.30,000 ல் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
      (ஈ) சராசரி பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.3,00,000.

    2. இராஜன் மற்றும் செல்வா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:1 விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-03-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கட்டடம் 25,000
      இராஜன் 30,000   அறைகலன் 1,000
      செல்வா 16,000 46,000 சரக்கிருப்பு 20,000
      பொதுக் காப்பு   4,000 கடனாளிகள் 16,000
      கடனீந்தோர்   37,500 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 3,000
            வங்கி ரொக்கம் 12,500
            இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000
          87,500   87,500

       01.04.2017-இல் பின்வரும் நிபந்தனைகளுடன் கணேசன் என்பவர் புதிய கூட்டாளியாக சேருகிறார்.
      (i) கணேசன் 1/5 இலாபப்பங்கிற்கென ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
      (ii) சரக்கிருப்பு மற்றும் அறைகலன் மதிப்பில் 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது. கடனாளிகள் மீது 5% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்படுகிறது.
      (iii) கட்டடத்தின் மீது 20% மதிப்பேற்றம் செய்யப்படுகிறது.
      மறுமதிப்பீட்டுக் கணக்கு புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக்குறிப்பு தயார் செய்யவும்.

    1. ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் முத்து, முரளி மற்றும் மனோஜ் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபத்தினை 3 : 1 : 2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
      முதல் கணக்குகள்     இயந்திரம் 45,000
      முத்து 20,000   அறைகலன் 5,000
      முரளி 25,000   கடனாளிகள் 30,000
      மனோஜ் 20,000 65,000 சரக்கிருப்பு 20,000
      பொதுக்காப்பு   6,000    
      கடனீந்தோர்   29,000    
          1,00,000   1,00,000

      பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2018, டிசம்பர் 31 அன்று மனோஜ் விலகுகிறார்:
      (i) முத்துவும் முரளியும் இலாப நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
      (ii)சொத்துகள் பின்வருமாறு மதிப்பீடு செய்யப்படவேண்டும்.
      இயந்திரம் ரூ.43,000, சரக்கிருப்பு ரூ.27,000, கடனாளிகள் ரூ.28,000.
      (iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது.
      (iv) மனோஜ் -க்கு செலுத்த வேண்டிய இறுதித்தொகை  உடனடியாக செலுத்தப்படவில்லை.
      மனோஜ் விலகலுக்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய தேவையான பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.

    2. சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     நிலம் 80,000
        சுந்தர் 50,000   சரக்கிருப்பு 20,000
        விவேக் 40,000   கடனாளிகள் 30,000
        பாண்டியன் 10,000 1,00,000 வங்கி ரொக்கம் 14,000
      பொதுக்கப்பு   36,000 இலாப நட்டக் க/கு (நட்டம்) 6,000
      பற்பல கடனீந்தோர்   14,000    
          1,50,000   1,50,000

       1.1.2019 அன்று பாண்டியன் இறந்தது விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டடன
      (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்
      (ii) நிலத்தின் மதிப்பு ரூ.11,000 அதிகரிக்கப்பட வேண்டும்
      (iii) கடனாளிகள் மதிப்பு ரூ.3,000 குறைக்க வேண்டும்
      (iv) பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை
      கூட்டாளியின் இறப்பிற்கு பின் நிருமத்தின் மறுமதிப்பீட்டுக் கணக்கு, கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    1. கஜா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 40,000 பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் பொது ரூ.2, ஒதுக்கீட்டின் பொது ரூ.5 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் பொது ரூ.3 என தொகை செலுத்தப்பட வேண்டும். 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 40,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக உள்ள விண்ணப்பத் தொகைகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அனைத்து தொகையும் முறையாக பெறப்பட்டன எனக் கொண்டு, குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

    2. பின்வரும் விவரங்களைக் கொண்டு குறிஞ்சி வரையறு நிறுவனத்தின் போக்கு சதவீதங்களைக் கணக்கிடவும்.

      விவரம் ரூ. ஆயிரங்களில்
      2015-16 2016-17 2017-18
      விற்பனை மூலம் பெற்ற வருவாய் 120 132 156
      இதர வருமானம் 50 38 65
      செலவுகள் 100 135 123
    1. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

      விவரம்  2015-16
      ரூ.
      2016-17
      ரூ.
      விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
      இதர வருமானங்கள்  50,000 1,50,000
      செலவுகள்  5,00,000 3,00,000
      வருமான வரி % 40 40
    2. பின்வரும் இருப்பு நிலைக்குறிப்பு பியர்ல் என்பவரின் ஏடுகளிலிருந்து 1-4-2018-ம் நாளன்று தயார் செய்யப்பட்டது.
      அவ்வாண்டில் நடைபெற்ற நடவடிக்கைகள் பின்வருமாறு 

      பொறுப்புகள்  ரூ  சொத்துகள்  ரூ 
      முதல் பற்பல கடனீந்தோர்: 1,60,000 கட்டடம்  40,000
      மாயா க/கு  20,000 அறைகலன்  20,000
          சரக்கிருப்பு  10,000
          பற்பல கடனாளிகள்:  
          பீட்டர்  20,000
          கை ரொக்கம்  30,000
          வாங்கி ரொக்கம்  60,000
        1,80,000   1,80,000

      (அ) கூலி ரொக்கமாக வாங்கியது ரூ. 4,000
      (ஆ) சம்பளம் காசோலை மூலம் வழங்கியது ரூ. 10,000
      (இ) ரொக்கக்  கொள்முதல் மேற்கொண்டது ரூ. 4,000
      (ஈ) யாழினியிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 30,000
      (உ) ஜோதிக்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ. 40,000
      (ஊ) யாழினிக்கு NEFT மூலம் செலுத்தியது ரூ. 6,000
      (எ) பீட்டரிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 10,000
      (ஏ) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 4,000
      (ஐ) கட்டடம் மீதான தேய்மானம் 20%
      (ஒ) 31-3-2019 அன்றைய இறுதி சரக்கிருப்பு ரூ. 9,000
      31-3-2019 நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கையும், இருப்புநிலைக் குறிப்பையும் Tally உதவியுடன் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021

Write your Comment