12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 40,000
    2019, மார்ச் 31 அன்று முதல் 50,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 7,000
    அவ்வாண்டின் இலாபம் 8,000
    அவ்வாண்டில் எடுப்புகள் ?
  3. நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.

  4. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டிய அச்சு மற்றும் எழுதுபொருள் செலவைக் கணக்கிட்டு அவை 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பில் எவ்வாறு தோன்றும் என்பதையும் குறிப்பிடவும்.
    எழுதுபொருள்களுக்காககொடுத்த தொகை (2017-2018)  = ரூ1,500
    எழுதுபொருள்கள் இருப்பு (ஏப்ரல் 1, 2017) = ரூ 200
    எழுதுபொருள்கள் இருப்பு (மார்ச் 31, 2018)  = ரூ 200

  5. பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

  6. தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல்கணக்குகள்:   பல்வகைச் சொத்துகள் 80,000
    பிருந்தா 30,000    
    பிரவீனா 40,000    
    இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000    
      80,000   80,000

     2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.

  7. சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும்.

    2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலைச் சொத்துகள் 70,000
    சுபா 40,000   நடப்புச் சொத்துகள் 50,000
    சுதா 60,000 1,00,000    
    நடப்புப் பொறுப்புகள்   20,000    
        1,20,000   1,20,000

     அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000; அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.30,000.

  8. கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
    (i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
    (ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால்
    (iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்

  9. புதிய கூட்டாளி ஒருவரை சேர்ப்பதற்காக, ஒரு நிறுவனம் 4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் கூட்டு சராசரி இலாபத்தினை பயன்படுத்தி, நற்பெயரை மதிப்பிட முடிவு செய்தது. கடந்த நான்கு ஆண்டுகளின் இலாபங்கள் மற்றும் அந்தந்த ஆண்டுகளுக்கான நிறைகள் பின்வருமாறு.

    விவரம் 2015 2016 2017 2018
    இலாபம் (ரூ) 20,000 22,000 24,000 28,000
    நிறை 1 2 3 4

    நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  10. சராசரி இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும்போது 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  11. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  12. இரத்ன குமார் மற்றும் ஆரோக்கியதாஸ் எனும் கூட்டாளிகள் முறையே 3.2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2017 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 30,000
    இரத்ன குமார் 30,000   பொறித்தொகுதி 60,000
    ஆரோக்கியதாஸ் 50,000 80,000 அறைகலன் 20,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   20,000 கடனாளிகள் 10,000
    பொதுக்காப்பு   5,000 சரக்கிருப்பு 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   15,000 வங்கி ரொக்கம் 15,000
    பற்பல கடனீந்தோர்   30,000    
        1,50,000   1,50,000

    2017, ஏப்ரல் 1 அன்று, டேவிட் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

  13. சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
    (i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
    (ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது

  14. சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும்போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
    (i) கட்டடம் மதிப்பினை ரூ.40,000 ஆக உயர்த்த வேண்டும்.
    (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டுவர வேண்டும்.
    (iii) இயந்திரம் மதிப்பு ரூ.14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ.12,000 குறைக்க வேண்டும்.
    (iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுத வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக் கணக்கினைத் தயார் செய்யவும்.

  15. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  16. ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
    2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
    (அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    (ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  17. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  18. ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ.1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) செலுத்த வேண்டியதொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
    (ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iv) உடனடியாக ரூ.75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது,மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.

  19. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  20. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  21. குறிப்பு வரைக:
    1) தனியார் ஒதுக்கீடு 
    2) உரிமை வெளியீடு 
    3) மேலூதிய பங்கு வெளியீடு 

  22. நிதிநிலை அறிக்கையின் குறைபாடுகள் ஏதேனும் மூன்றினை விளக்கவும்.

  23. நிதிநிலை அறிக்கைகளின் முக்கியத்துவத்தினை எழுதுக (ஏதேனும் மூன்று).

  24. சரக்கிருப்பு மாற்று காலம் என்றால் என்ன? இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  25. விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் தருக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Accountancy Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam)

Write your Comment