12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.

    (a)

    கார்பன் ஒடுக்கம் 

    (b)

    வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)

    (c)

    மின்வேதி செயல்முறை 

    (d)

    அமிலக் கழுவுதல் 

  2. எத்தில் போரேட் சோதனையில் கிடைக்கும் சுடரின் நிறம்  ________.

    (a)

    சிவப்பு

    (b)

    மஞ்சள்

    (c)

    நீலம்

    (d)

    பச்சை

  3. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  4. Sc3+ நிறமற்றது ஏனெனில் __________.

    (a)

    முழுமையாக நிரப்பப்பட்ட d- ஆர்பிட்டால்கள் 

    (b)

    முழுமையாக நிரப்பப்பட்ட pஆர்பிட்டால்கள் 

    (c)

    முழுமையாக நிரப்பப்பட்ட s- ஆர்பிட்டால்கள் 

    (d)

    d- எலக்ட்ரான்கள் இல்லாமை 

  5. 0.01 M திறனுடைய 100ml பென்டாஅக்வாகுளோரிடோமியம் (III) குளோரைடு கரைசலுடன் அதிக அளவு சில்வர் நைட்ரேட் கரைசலை சேர்க்கும் போது வீழ்படிவாகும் AgCl ன் மோல்களின் எண்ணிக்கை ________

    (a)

    0.02

    (b)

    0.002

    (c)

    0.01

    (d)

    0.2

  6. NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம் ______________

    (a)

    F மையத்தில் உள்ள எலக்ட்ரான்கள் கிளர்வுறுதல்

    (b)

    புறப்பரப்பில் உள்ள Cl- அயனிகளால் ஒளி எதிரொளிக்கப்படுதல்.

    (c)

    Na+ அயனிகளால் ஒளி விலகலடைதல்.

    (d)

    மேற்கண்டுள்ள அனைத்தும்.

  7. ஒரு பூஜ்ய வகை வினையில் வினைபடு பொருளின் துவக்கச் செறிவை இரு மடங்காக்கினால், அவ்வினையின் அரை வாழ்காலம் ______________

    (a)

    இரு மடங்காகும் 

    (b)

    மூன்று மடங்காகும் 

    (c)

    நான்கு மடங்காகும் 

    (d)

    மாறாதிருக்கும் 

  8. சோடியம் ஃ பார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே ___________

    (a)

    அமிலம், அமிலம், காரம்

    (b)

    காரம், அமிலம், காரம்

    (c)

    காரம், நடுநிலை, காரம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  9. உருகிய  சோ டியம் குளோரை டு மின்னாற்பகுத்தலில், 3A மின்னோட்டத்தை பயன்படுத்தி 0.1 மோல்   குளோரின் வாயுவை உருவாக்க தேவைப்படும் நேரம் ______________

    (a)

    55 நிமிடங்கள்

    (b)

    107.2 நிமிடங்கள்

    (c)

    220 நிமிடங்கள்

    (d)

    330 நிமிடங்கள்

  10. ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு ___________

    (a)

    எதிர்மின்வாய் தொங்கலசைவு

    (b)

    மின்முனைக்கவர்ச்சி

    (c)

    திரிதல்

    (d)

    டிண்டால் விளைவு

  11. பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினைபட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது?

    (a)

    டைகுளோரோ  மீத்தேன் 

    (b)

    ட்ரைகுளோரோ  ஈத்தேன் 

    (c)

    ட்ரைகுளோரோ  மீத்தேன் 

    (d)

    CO2

  12. பின்வரும் வினையில்,
    \(HC\equiv CH\quad \overset { H_2SO_4 }{ \underset { H_gSO_4 }{ \longrightarrow } } X\) விளை ப்பொருள் ‘X’ ஆனது _______ சோதனையை தராது.

    (a)

    டாலன்ஸ் சோதனை

    (b)

    விக்டர் மேயர் சோதனை

    (c)

    அயோடோஃபார்ம் சோதனை 

    (d)

    ஃபெலிங் கரைசல் சோதனை 

  13. அனிலீனாது அசிட்டிக் அமில நீரிலியுடன் வினைப்பட்டு கொடுக்கும் விளைபொருள் ______________

    (a)

    o – அமினோ அசிட்டோ பீனோன்

    (b)

    m-அமினோ அசிட்டோ பீனோன்

    (c)

    p-அமினோ அசிட்டோ பீனோன்

    (d)

    அசிட்டனிலைடு

  14. புரதத்தின் இரண்டாம் நிலை அமைப்பானது எதை குறிகிறது?

    (a)

    பாலிபெப்டைடு முதுகெலும்பின் நிலையான வசஅமைப்பு

    (b)

    நீர்வெறுக்கும் இடையீடுகள்

    (c)

    α- அமினோ அமிலங்களின் வரிசை

    (d)

    α- சுருள் முதுகெலும்பு

  15. பின்வருவனவற்றுள் எந்த அமைப் பு நைலான் 6,6 பலபடியை குறிப்பிடுகிறது?

    (a)

    (b)

    (c)

    (d)

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  18. செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  19. Gd3+ அயனியானது நிறமற்றது. ஏன்?

  20. \({ Na }_{ 2 }\left[ Ni(EDTA) \right] \) என்ற அணைவுசேர்மத்தின் IUPAC பெயரை எழுதுக.

  21. திசையொப்பு பண்பற்ற தன்மை என்றால் என்ன?

  22. x+2y\(\rightarrow \) விளைபொருள் [x] = [y] = 0.2M என்ற வினையின் வினைவேகமானது [x] = [y] = 0.2 M எனும் போது, 400K ல் வினைவேகம் 2x10-2S-1, இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.

  23. நீர்த்தல் அதிகரிக்கும் போது கரைசலின் கடத்துத்திறன் குறைகிறது ஏன்?

  24. 1 – பீனைல் எத்தனாலை அமிலம் கலந்த உடன் KMnO4 வினைப்படுத்த என்ன நிகழும்?

  25. ஃபார்மால்டிஹைடையும் கீட்டோன்களை இம்முறையில் தயாரிக்க ?

    1. பகுதி - III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  26. இரட்டை உப்புகள் என்பன யாவை ? உதாரணம் தருக.

  27. Fcc அலகுகூட்டில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கையினைக் கணக்கிடுக.

  28. HClO4 மூலக்கூறின் அமிலத்தன்மைக்கான காரணம் கூறு. ப்ரான்ஸ்டட் – லெளரி கொள்கையின் அடிப்படையில், அதன் இணை காரத்தை கண்டறிக.

  29. இயற்புறப்பரப்பு கவர்தலை காட்டிலும் வேதிப்புறப்பரப்பு கவர்தலின் பரப்பு கவர்தல் வெப்பம் அதிகம் ஏன்?

  30. இணைமாற்றியம் (மெட்டா மெர்சம்) என்றால் என்ன? 2 – மீத்தாக்ஸிபுரப்பேனின் இணைமாற்றியங்களுக்கான IUPAC வடிவமைப்புகளைத் தருக.

  31. டை எத்திலமீனை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    i) N, N – டை எத்தில் அசிட்டமைடு
    ii) N – நைட்ரசோடை எத்திலமீன்

  32. மருந்துப் பொருட்கள் என்றால் என்ன ? அவை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

    1. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

    2. இடைச்செருகல் சேர்மன்களின் பண்புகளை எழுதுக

  33. பகுதி - IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.

    2. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
      1. NaCl + MnO2 + H2SO4 \(\longrightarrow\)
      2. NaNO2 + HCl \(\longrightarrow\)
      3. IO3- + I- + H\(\longrightarrow\)
      4. I2 + S2O32- \(\longrightarrow\)
      5. P4 + NaOH + H2O \(\longrightarrow\)
      6. AgNO3 + PH3 \(\longrightarrow\)
      7. Mg + HNO3 \(\longrightarrow\)
      8. KClO3 \(\overset { \triangle }{ \longrightarrow } \)
      9.
      10. Sb + Cl2 \(\longrightarrow\)
      11. HBr + H2SO4 \(\longrightarrow\)
      12. XeF6 + H2O \(\longrightarrow\)
      13. XeO64- + Mn2+ + H+ \(\longrightarrow\)
      14. XeOF4 + SiO2 \(\longrightarrow\)
      15. Xe + F\(\xrightarrow [ { 400 }^{ 0 }C ]{ Ni/200\quad atm } \)

    1. குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?

    2. நீரேற்ற மாற்றியங்கள் என்றால் என்ன, ஒரு உதாரணத்துடன் விளக்குக.

    1. படிகங்களில் காணப்படும் மாசு குறைபாடுகள் பற்றி எழுதுக.

    2. ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
      \(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
      இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக.

    1. நொதிகள்  என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினைவழிமுறை பற்றி குறிப்பு வரைக.

    2. பின்வருவனவற்றுள் இருந்து பீனாலை எவ்வாறு தயாரிப்பாய் ?
      i) குளோரோபென்சின்        
      ii) ஐசோபுரப்பைல் பென்சீன்

    1. வைட்டமின்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

    2. டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment