12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி I

    25 x 5 = 125
  1. ஒடுக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது வெப்ப இயக்கவியல் காரணியைப் பொறுத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.

  2. சில்வரை மின்னாற்பகுதல் முறையில் தூயிமையாக்கலை விவரி.

  3. இரண்டாம் வரிசை கார உலோகம் (A) ஆனது (B) என்ற போரானின் சேர்மத்துடன் வினை புரிந்து (C) என்ற ஒடுக்கும் காரணியினைத் தருகிறது. A, B மற்றும் C ஐக் கண்டறிக.

  4. P -தொகுதி தனிமங்களின் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை  எழுதுக.

  5. PCl5 ஐ வெப்பப்படுத்தும் போது நிகழ்வது யாது?

  6. சீரியம் (II) ஐக் காட்டிலும் யூரோப்பியம் (II) அதிக நிலைப்புத் தன்மை உடையது. ஏன்?

  7. 3d வரிசை தனிமங்களின் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை விளக்குக.

  8. \(\left[ Fe\left( CN \right) _{ 6 } \right] ^{ 3- }\) பாரா காந்தத் தன்மை என்பதை படிக புலக்கொள்கையினைப் பயன்படுத்தி விளக்குக. 

  9. படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.

  10. [CoC2O4)3]3- ல் காணப்படும் பிணைப்பின் தன்மையை VB கொள்கையைப் பயன்படுத்தி விளக்குக.

  11. VBT ன் வரம்புகள் யாவை ?

  12. அறுங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பினை கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பிலிருந்து வேறுபடுத்துக.

  13. சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?

  14. ஒரு அணு fcc அமைப்பில் படிகமாகிறது. மேலும் அதன் அடர்த்தி 10 gcm-3 மற்றும் அதன் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் 100pm. 1g படிகத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினைக் கண்டறிக.

  15. பொதிவுத்‌திறன் என்றால் என்ன ?

  16. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 1.54 x 10-3 s-1 அதன் அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.

  17. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.

  18. 1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்ப டிவாகாதா? என கண்டறிக. PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).

  19. அளவிலா நீர்த்தலில் Al3+ மற்றும் SO42- ஆகிய அயனிகளின் அயனிக் கடத்துத்திறன் மதிப்புகள் முறையே 189 மற்றும் 160 மோ செ.மீ2 சமானம்-1. அளவிலா நீர்த்தலில்  Al2 (SO4)3 மின்பகுளியின் சமான மற்றும்  மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக.

  20. நுண்‌ வடிகட்டலை பற்றி குறிப்பு வரைக.

  21. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.


  22. A,B,C,D ஆகியனவற்றைக் கண்டறிக. மேலும் வினையினை பூர்த்தி செய்க.

  23. பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    (i) பென்சோபீனோன்
    (ii) பென்சாயிக் அமிலம்
    (iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.

  24. பின்வரும் வினைவரிசையில் உள்ள A,B மற்றும் C ஆகிய சேர்மங்களை கண்டறிக
    i) \(C_6H_5NO_2\overset{Fe/HCl}\longrightarrow A\overset{HNO_2}{\underset{273K}\longrightarrow} B\overset{C_6H_5OH}\longrightarrow C\)
    ii) \(C_6H_5N_2Cl\overset{CuCN}\longrightarrow A\overset{H_2O/H^+}\longrightarrow B\overset{NH_3}\longrightarrow C\)
    iii) 
    iv) \(CH_3NH_2\overset{CH_3Br}\longrightarrow A\overset{CH_3COCl}\longrightarrow B\overset{B_2H_6}\longrightarrow C\)
    v) 

    vi) 
    vii) \(CH_3CH_2NC\overset{HgO}\longrightarrow A\overset{H_2O}\longrightarrow B\overset{i) NaNO_2/HCl}{\underset{ii) H_2O}\longrightarrow}\)

  25. பல்லின பலபடிகள் குறித்து குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment