12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பகுதி I

    50 x 1 = 50
  1. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் 

    (a)

    ஃபோயல்  

    (b)

    டேலர் 

    (c)

    மேயோ 

    (d)

    ஜேக்கப் 

  2.  _________ உதவியால் அதிகாரப் பகிர்வு எளிதாகச் செய்யப்படுகிறது.

    (a)

    முதுகலை வணிக மேலாண்மை 

    (b)

    விதிவிலக்கு மேலாண்மை 

    (c)

    குறியிலக்கு மேலாண்மை 

    (d)

    முதுகலை வணிக நிர்வாகம் 

  3. முதல் நிலைச் சந்தை ________ எனவும் அழைக்கப்படுகிறது. 

    (a)

    இரண்டாம் நிலைச் சந்தை 

    (b)

    பணச் சந்தை 

    (c)

    புதிய வெளியீடுகளுக்கான சந்தை 

    (d)

    மறைமுக சந்தை 

  4. முதல் நிலைச் சந்தை என்பது பத்திரங்களை அல்லது பிணையங்களை ______ முறை வியாபாரம் செய்யும் ஒரு சந்தை ஆகும். 

    (a)

    முதன் முறை 

    (b)

    இரண்டாம் முறை 

    (c)

    மூன்றாம் முறை 

    (d)

    பலமுறை 

  5. பணச்சந்தை நிறுவனங்கள் _____ ஆகும். 

    (a)

    முதலீட்டு அமைப்புகள் 

    (b)

    அடமானக் கடன் வங்கிகள் 

    (c)

    ரிசர்வ் வங்கி 

    (d)

    வணிக வங்கிகள் மற்றும் தள்ளுபடியகம் 

  6. கருவூல இரசீது ஆணை என்பது ____ உடையது. 

    (a)

    அதிக நீர்மைத்தன்மை 

    (b)

    குறைந்த நீர்மைத்தன்மை 

    (c)

    நடுத்தர நீர்மைத்தன்மை 

    (d)

    வரையறுக்கப்பட்ட நீர்மைத்தன்மை 

  7. நம்பிக்கையுள்ள வணிகர் என்பவர் 

    (a)

    காளை 

    (b)

    கரடி 

    (c)

    மான் 

    (d)

    வாத்து 

  8. கூட்டு முதலீட்டு திட்டங்களின் செயல்பாட்டை பதிவு செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் _________ எனப்படுகிறது. 

    (a)

    பரஸ்பர நிதிகள் 

    (b)

    பட்டியல் 

    (c)

    மறுபுறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

    (d)

    புறத்தோற்றமற்ற பத்திரங்கள் 

  9. பெரிய நிறுவனங்களின் தொழில் மூலதனத்தில் பங்கேற்க சிறிய முதலீட்டாளர்களுக்கு உதவுவது ______ ஆகும். 

    (a)

    பரஸ்பர நிதி 

    (b)

    பங்குகள் 

    (c)

    கடனீட்டுப் பத்திரங்கள் 

    (d)

    நிலை வைப்புகள் 

  10. திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும். 

    (a)

    தேர்ந்தெடுக்கப்பட்ட 

    (b)

    பரவலான / ஊடுருவலான

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மேலே உள்ள எதுவும் இல்லை

  11. ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.  

    (a)

    வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர் 

    (b)

    வேலை தேடுபவர் மற்றும் முகவர் 

    (c)

    வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர் 

    (d)

    உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

  12. _____ வேலை அடையாளம் மற்றும் ஈர்ப்பதில் செயல்முறை என்று குறிக்கிறது 

    (a)

    தேர்வு 

    (b)

    பயிற்சி 

    (c)

    ஆட்சேர்ப்பு 

    (d)

    தூண்டுதல் 

  13. பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _______ அழைக்கப்படுகிறது.

    (a)

    தேர்வு 

    (b)

    ஆட்சேர்ப்பு 

    (c)

    நேர்காணல் 

    (d)

    தூண்டுதல் 

  14. தகுதிகான் காலம் 

    (a)

    ஒன்று முதல் இரண்டு ஆண்டு வரை 

    (b)

    ஒன்று முதல் மூன்றாண்டு வரை 

    (c)

    இரண்டு ஆண்டு முதல் நான்கு ஆண்டு வரை 

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை 

  15. பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?

    (a)

    வகுப்பறையில் 

    (b)

    தொழிற்சாலைக்கு வெளியே 

    (c)

    வேலையில்லா நாட்களில் 

    (d)

    விளையாட்டு மைதானத்தில் 

  16. _____ ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

    (a)

    பயிற்சி 

    (b)

    வேலை பகுப்பாய்வு 

    (c)

    தேர்வு 

    (d)

    ஆட்சேர்ப்பு 

  17. பயிற்சி முறைகளை _____ மற்றும் ___________பயிற்சி என வகைப்படுத்தலாம். 

    (a)

    வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல் 

    (b)

    பணிவழி மற்றும் பணி வழியற்ற பயிற்சி 

    (c)

    வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு 

    (d)

    உடல் மற்றும் மனம் 

  18. கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது.

    (a)

    பங்கு சந்தை 

    (b)

    தயாரிப்பு பொருள் சந்தை 

    (c)

    உள்ளூர் சந்தை 

    (d)

    குடும்ப சந்தை 

  19. சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் ______ தேவை மற்றும் மன நிறைவு மூலம் லாபம் பெறுகிறது. 

    (a)

    மொத்த விற்பனையாளர் 

    (b)

    சில்லறை விற்பனையாளர் 

    (c)

    நுகர்வோர் 

    (d)

    விற்பனையாளர் 

  20. இணையத்திற்கு நுழைவு என்பது ______.

    (a)

    போர்டல் 

    (b)

    சிபியு 

    (c)

    மோடம் 

    (d)

    வெநராங் 

  21. சமூக சந்தைப்படுத்துதல் என்பது _______உடன் தொடர்புடையது. 

    (a)

    சமூகம் 

    (b)

    சமூக வகுப்பு 

    (c)

    சமூக மாற்றம் 

    (d)

    சமூக தீமை 

  22. தூய சில்லறை விற்பனையாளர்_______________ என அழைக்கப்படுபவர் 

    (a)

    சந்தை உருவாக்குநர்கள் 

    (b)

    நடவடிக்கை தரகர்கள் 

    (c)

    வியாபாரிகள் 

    (d)

    முகவர்கள் 

  23. பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு  

    (a)

    1962

    (b)

    1972

    (c)

    1930

    (d)

    1985

  24. உரிய மறுபயன் அளித்து தனது சொந்த உபயோகத்திற்காகப் பொருட்களையும், சேவைகளையும் ஏற்றுக் கொள்ளும் நபர் 

    (a)

    வாடிக்கையாளர் 

    (b)

    நுகர்வோர் 

    (c)

    வாங்குபவர் 

    (d)

    உபயோகிப்பவர் 

  25. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் _____.

    (a)

    அதிகமான இலாபம் 

    (b)

    குறைவான இலாபம் 

    (c)

    நுகர்வோர் திருப்தி 

    (d)

    சமுதாயத்திற்கு சேவை 

  26. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ____ ஆகும். 

    (a)

    அளவீடுகள் 

    (b)

    விற்பனை அதிகப்படுத்துதல் 

    (c)

    பொறுப்புகள் 

    (d)

    கடமைகள் 

  27. மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்? 

    (a)

    மாவட்ட நீதிபதி 

    (b)

    உயர் நீதிமன்ற நீதிபதி 

    (c)

    உச்ச நீதிமன்ற நீதிபதி 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை 

  28. நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது.

    (a)

    1960

    (b)

    1965

    (c)

    1967

    (d)

    1987

  29. ஜி.எஸ்.டி என்பது _____, ______, ______.

    (a)

    சரக்கு மற்றும் வெற்றிவரி 

    (b)

    சரக்கு மற்றும் சேவை வரி 

    (c)

    சரக்கு மற்றும் விற்பனை வரி 

    (d)

    சரக்கு மற்றும் ஊதிய வரி 

  30. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ______ காரணியாகும்.

    (a)

    கட்டுப்படுத்த முடியாத

    (b)

    கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது 

    (c)

    சமாளிக்க கூடியது 

    (d)

    சமாளிக்க முடியாதது 

  31. ______ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

    (a)

    தனியார் 

    (b)

    பொது 

    (c)

    கார்ப்பரேஷன் 

    (d)

    NMC

  32. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளில் உள்ளடங்காதது? 

    (a)

    சரக்கிருப்பு 

    (b)

    வரவேண்டிய பங்காதாயம் 

    (c)

    பயிர் 

    (d)

    தண்ணீர் 

  33. விமைபெறா  விற்போர் எச்சுசூழலில் போக்குவத்தில் இருக்கும் சரக்கினை நிறுத்தும் உரிமையை பெறுகி்றார்?

    (a)

    வாங்குவோர் நொடிப்பு நிலை அடையும் போது 

    (b)

    விலை செலுத்த மறுக்கும் போது 

    (c)

    சரக்கிளை பெறாத போது 

    (d)

    (ஆ) மற்றும் (இ)

  34. மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 

    (a)

    1981

    (b)

    1881

    (c)

    1994

    (d)

    1818

  35. மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?

    (a)

    2

    (b)

    6

    (c)

    3

    (d)

    4

  36. எந்த வகை மேலெழுத்து மேலெழுதுபவரை மாற்றுமுறை ஆவண மறுப்பினால் எழும் பொறுப்பிலிருந்து விடுவிக்கின்றது.

    (a)

    தடைப்படுத்துதல் 

    (b)

    பொறுப்புதவிர் 

    (c)

    கடமைதவிர் 

    (d)

    நிபந்தனை 

  37. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை? 

    (a)

    துணிகர உணர்வு 

    (b)

    நெளிவு சுளிவு 

    (c)

    தன்னம்பிக்கை 

    (d)

    அனைத்தும் 

  38. கீழ் குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில்முனைவோரைச் சார்ந்தது?

    (a)

    உற்பத்தி 

    (b)

    சந்தையிடுகை 

    (c)

    செயல்பாடு 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  39. கூட்டுப்பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர். 

    (a)

    அகத்தொழில் முனைவோர் 

    (b)

    தோற்றுவிப்பாளர் 

    (c)

    மேலாளர் 

    (d)

    பங்குநர் 

  40. ஸ்டார்ட் அப் இந்தியா இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது.

    (a)

    1996

    (b)

    2016

    (c)

    2019

    (d)

    1992

  41. _______ நிதி ஆதாரங்கள், தொழில் நுட்ப அறிவு, தொழிலாளர் ஆதாரங்கள் மற்றும் மூலப்பொருட்கள், சந்தை திறன் மற்றும் இலாபகத்தன்மை ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டிருக்கிறது. 

    (a)

    தொழில்நுட்ப 

    (b)

    ஸ்டார்ட்டப் இந்தியா 

    (c)

    திட்ட அறிக்கை 

    (d)

    வளர்ச்சி அறிக்கை 

  42. கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு ______ 

    (a)

    சாதாரணப் பங்குகள் 

    (b)

    உரிமைப் பங்குகள் 

    (c)

    முன்னுரிமைப் பங்குகள் 

    (d)

    ஊக்கப் பங்குகள் 

  43. ஒரு நிறுமத்தை கிராமத்தில் (அ) நகரத்தில் மாற்ற வேண்டும் எனப் பதிவு அலுவலகத்தில் அறிவிக்கும் அதிகாரம் உடையது ______ 

    (a)

    சாதாரண முடிவு 

    (b)

    சிறப்பு முடிவு 

    (c)

    வாரிய முடிவு 

    (d)

    அசாதாரண முடிவு 

  44. முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது _________

    (a)

    ஊக்கப் பங்குகள் 

    (b)

    சாதாரணப் பங்குகள் 

    (c)

    உரிமைப் பங்குகள் 

    (d)

    முன்னுரிமைப் பங்குகள் 

  45. ஒரு தனியார் நிறுமம் குறைந்தது ______ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

    (a)

    ஏழு 

    (b)

    ஐந்து 

    (c)

    மூன்று 

    (d)

    இரண்டு 

  46. நிறுமச் சட்டத்தின் படி கீழ்கண்ட அதிகாரங்களில் ஒன்று இயக்குநர்களின் குழுவால் செயல்படுத்த முடியும்

    (a)

    நிறுமத்தை விற்கும் அதிகாரம்

    (b)

    அழைப்பு பணத்துக்கு அழைப்பு விடும் அதிகாரம் 

    (c)

    செலுத்தப்பட்ட மூலதனத்திற்கு மேல் கடன் வாங்கும் அதிகாரம் 

    (d)

    தணிக்கையாளர்களை மீண்டும் பதவி நியமனம் செய்யும் அதிகாரம் 

  47. இயக்குநர்கள் நிறுமத்தின் பணத்திற்கு ______ ஆகி்றார்கள்

    (a)

    வங்கியாளர் 

    (b)

    பங்குதாரர்கள் 

    (c)

    முகவர் 

    (d)

    பொறுப்பாண்மையாளர்கள்

  48. யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும்?

    (a)

    தனிநபர் 

    (b)

    கூட்டாண்மை நிறுமம் 

    (c)

    கூட்டுறவு சங்கம் 

    (d)

    தொழிற்சங்கம் 

  49. நிறுமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் _____ க்கு பேச உரிமை இல்லை. 

    (a)

    தணிக்கையாளர் 

    (b)

    பங்குநர் 

    (c)

    பகராள் 

    (d)

    இயக்குனர் 

  50. சிறப்பு தீர்மானம் ______ க்கு தேவைப்படுகிறது. 

    (a)

    கடனீட்டுப் பத்திரத்தை மீட்க 

    (b)

    பங்காதாயம் அறிவிக்க 

    (c)

    இயக்குநரை பணியமர்த்த 

    (d)

    தணிக்கையாளரை பணியமர்த்த 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வணிகவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Commerce Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment