12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 



    15 x 1 = 15
  1. அளப்புருக்களை அனுப்பும் போது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    impure செயற்கூறு

    (b)

    Partial செயற்கூறு

    (c)

    Dynamic செயற்கூறு

    (d)

    Pure செயற்கூறு

  2. பின்வருவனவற்றுள் எதனை கொண்டு Tuple பிரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    ( ), ,

    (b)

    [ ], ,

    (c)

    [ ], :

    (d)

    ( ), :

  3. ஒரு கணிப்பொறி நிரலை பல துணை நிரல்களாக பிரிக்கும் செயல்முறை எனப்படுவது

    (a)

    தொகுதி நிரலாக்கம்

    (b)

    பொருள்நோக்கு நிரலாக்கம்

    (c)

    இடைமுக நிரலாக்கம்

    (d)

    வரையெல்லை நிரலாக்கம்

  4. ஒரு நெறிமுறையின் பல்வேறு உள்ளீட்டு அளவுக்கான நேர இடச்சிக்கல்களின் மதிப்பிடுவது என்பது

    (a)

    நெறிமுறை மதிப்பீடு

    (b)

    நெறிமுறை யுக்தி

    (c)

    நெறிமுறை செயல்திறன்

    (d)

    நெறிமுறை பகுப்பாய்வு

  5. எந்த செயற்குறியை ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

    (a)

    கணக்கீடு

    (b)

    தொடர்புடைய

    (c)

    தருக்க

    (d)

    மதிப்பிருத்தல்

  6. அளபுருக்களின் பெயரை அடையாளம் கண்ட பின்பு ______ செயலுருப்பானது செயற்கூறினை அழைக்கிறது.

    (a)

    தேவைப்படும் 

    (b)

    தானமைவு 

    (c)

    சிறப்பு சொல் 

    (d)

    மாறும்-நீளம் 

  7. பின்வரும் வடிவமைப்பு குறியிருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?

    (a)

    %e

    (b)

    %E

    (c)

    %g

    (d)

    %n

  8. பின்வரும் எந்த set செயல்பாடு, இரண்டு set - களுக்கும் பொதுவான உறுப்புகள் நீங்கலாக மற்ற அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியது?

    (a)

    சமச்சீரான வேறுபாடுகள்

    (b)

    வேறுபாடு

    (c)

    வெட்டு

    (d)

    சேர்ப்பு

  9. பின்வரும் கூற்றின் வெளிப்பாடு யாது?
    mylist = [34,45,48]
    print [mylist.append (90)]
     

    (a)

    34,45,48,90

    (b)

    90,34,45,48

    (c)

    34,45,90,48

    (d)

    34,90,45,48

  10. பின்வருவனவற்றுள் எது RDBMS?

    (a)

    Dbase

    (b)

    Foxpro

    (c)

    Mongo DB

    (d)

    SQLite

  11. தரவுத்தள உருவாக்கிய பின்னர் பின்வருவனவற்றில் எவற்றில் குறிப்பிட்ட செயல்முறைகளில் தொகுப்பை பயன்படுத்தி தரவுகளை கையாளலாம்?

    (a)

    தரவு கட்டுப்பாட்டு மொழி

    (b)

    தரவு வரையறை மொழி

    (c)

    தரவு கையாளுதல் மொழி

    (d)

    பரிவர்த்தனைக்கான கட்டுப்பாட்டு மொழி

  12. பின்வருவனவற்றுள் எதனை பயன்படுத்தி CSV கோப்பினுள் உருப்புகளை சேர்க்க முடியும்?

    (a)

    add ( )

    (b)

    write ( )

    (c)

    append ( )

    (d)

    addition ( )

  13. சரங்களை எந்த மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt(  ) வெற்றி அணியை திருப்பி அனுப்பும்?

    (a)

    argv மாறி

    (b)

    opt மாறி

    (c)

    args மாறி

    (d)

    ifile மாறி

  14. SQL- ல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் கூற்று ஏது?

    (a)

    cursor

    (b)

    select

    (c)

    execute

    (d)

    commit

  15. பைத்தான் தொகுப்புகளை நிறுவதற்கான ஒரு மேலாண்மை மென்பொருள் எது?

    (a)

    tip

    (b)

    plt

    (c)

    cse

    (d)

    pip

    1. பகுதி-II

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 20க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 2 = 12
  16. தற்சுழற்சி செயற்கூறு என்றால் என்ன?

  17. மாறிகளுக்கு எதற்காக வரையெல்லை பயன்படுத்தப்பட வேண்டும்? காரணம் கூறுக?

  18. பைத்தானில் உள்ள பல்வேறு செயற்குறிகள் யாவை?

  19. பின்வரும் range ( ) எடுத்துக்காட்டுகளின் வெளியீட்டை எழுதுக.
    range (1,30,1)
    range (2,30,2)
    range (30,3,-3)
    range (20)

  20. பைத்தானில் இனக்குழு செயற்கூறுக்கும் சாதாரண செயற்கூறுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  21. CSV கோப்பினை திறக்கும் open கட்டளை எவ்வாறு கொடுக்கப்படல் வேண்டும்?

  22. Scripting மொழிக்கும் மற்ற நிரலாக்க மொழிக்கும் உள்ள தத்துவர்த்த வேறுபாடு யாது?

  23. தரவுத்தள அட்டவணையிலிருந்து அனைத்து பதிவுகளையும் பெறுவதற்கான வழிமுறை எது?

  24. பட்டை வரைபடம் என்றால் என்ன?

  25.             பகுதி-III

      எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 28க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    6 x 3 = 18
  26. செயற்கூற்றை வரையறுப்பதற்கான தொடரியல் விவரி.

  27. தொகுதி - சிறுகுறிப்பு வரைக

  28. இடம் மற்றும் இடச்சிக்கலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?

  29. உள்ளமை மாறிகளுக்கான விதிமுறையை எழுதுக.

  30. Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  31. கார்டீசியன் பெருக்கலை பொருத்தமான எடுத்துகாட்டுடன் விளக்குக.

  32. csv.writer ( ) செயற்கூறின் தொடரியலை எழுதி அதன் அளபுருகளை விளக்கவும்.

  33. Scripting மொழியின் பயன்பாடுகள் யாவை?

  34. பைத்தானில் கூறுநிலைகளை எவ்வாறு தருவித்துக் கொள்வது?

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    5 x 5 = 25
    1. தரவு அருவமாக்கம் எவ்வாறு செயல்படுத்துவாய்? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. கீழேகாணும் நிரலின் வெளியீட்டை எழுதவும்.
      x=20
      x+=20
      print ("The x +=20 is =",x)
      x-=5
      print ("The x-=5 is =",x)
      x*=5
      print ("The x*=5 is =",x)
      x/=2
      print ("The x/=2 is =",x)
      x%=3
      print ("The x%=3 is =",x)
      x**=2
      print ("The x**=2 is =",x)
      x//=3
      print ("The x//=3 is =",x)
      #program End

    1. for மடக்கைப் பற்றி விரிவான விடையளிக்கவும்.

    2. பைத்தானில் பயன்படும் சர செயற்குறிகளை தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. DBMS-ன் கூறுகள் பற்றி விரிவாக விளக்குக.

    2. ALTER கட்டளைப் பற்றி விரிவாக எழுதுக

    1. பைத்தானில் ஒரு கோப்பை படிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை எழுதுக.

    2. பைத்தான் எவ்வாறு C++ நிரல்களின் பிழைகளைத் கையாள்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    1. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
      அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
      தரவுத்தளத்தின் பெயர் :- ABC
      அட்டவணையின் பெயர் :- Item
      நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :-

      Icode :- integer and act as primary key
      Item Name :- Character with length 25
      Rate :- Integer
      Record to be added :- 1008, Monitor,15000
    2. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
      (அ) plt.xlabel
      (ஆ) plt.ylabel
      (இ) plt.title
      (ஈ) plt.legend( )
      (உ) plt.show( )

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Science Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer Key - 2021

Write your Comment