12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. கலப்பு பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள்

    (a)

    இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு

    (b)

    இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (c)

    இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்

    (d)

    இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில்

  2. மொத்த மதிப்பிலிருந்து _______ ஐ கழித்தால் நிகர மதிப்பு கிடைக்கும்?

    (a)

    வருமானம்

    (b)

    தேய்மானம்

    (c)

    செலவு

    (d)

    முடிவடைந்த பொருட்களின் மதிப்பு

  3. மாற்றுச் செலுத்துதல் என்பது

    (a)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (b)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (c)

    நலிவுற்றவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (d)

    ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம்

  4. தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

    (a)

    சமநிலை வரவு செலவு

    (b)

    சமமற்ற வரவு செலவு

    (c)

    உபரி வரவு செலவு

    (d)

    பற்றாக்குறை வரவு செலவு

  5. ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

    (a)

    மறைமுக வேலையின்மை

    (b)

    பருவகால வேலையின்மை

    (c)

    வாணிபச் சூழல் வேலையின்மை

    (d)

    கற்றோர் வேலையின்மை

  6. சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

    (a)

    C/Y

    (b)

    C Y

    (c)

    Y/C

    (d)

    C+Y

  7. முதலீட்டு சார்பின் வாய்ப்பாடு 

    (a)

    I=f(y)

    (b)

    I=f(r)

    (c)

    I=f(s)

    (d)

    I=f(K)

  8. இர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு

    (a)

    1908

    (b)

    1910

    (c)

    1911

    (d)

    1914

  9. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  10. நாடுகள் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட அடிப்படை காரணம்

    (a)

    ஒரு நாடு குறிப்பிட்டப் பொருளையும் வேறு நாடு மற்றொரு பொருளையும் உற்பத்தி செய்ய விரும்புகிறது.

    (b)

    உற்பத்தி வளங்கள் நாடுகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுடன் பகிரப்பட்டுள்ளது.

    (c)

    பன்னாட்டு வாணிகம் லாப குவிப்பு வாய்ப்பை அதிகரிக்கப்படுகிறது.

    (d)

    நாடுகளில் நிலவும் வட்டி வீதமும் வெவ்வேறு அளவில் உள்ளது.

  11. பன்னாட்டு பண நிதியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

    வாஷிங்டன் டி.சி

    (b)

    நியூ யார்க்

    (c)

    வியன்னா

    (d)

    ஜெனிவா

  12. பன்னாட்டு பண நிதியமும், உலக வங்கியும் செயல்படத் தொடங்கிய ஆண்டு 

    (a)

    1947

    (b)

    1951

    (c)

    1945

    (d)

    1954

  13. கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?

    (a)

    கலால் வரி

    (b)

    வருமான வரி

    (c)

    சுங்க வரி

    (d)

    சேவை வரி

  14. அரசின் வருவாய், செலவு, கடன்கள் மற்றும் நிதி நிர்வாகம் பற்றி விளக்குவது ______ 

    (a)

    பொதுச்செலவு 

    (b)

    பொதுவருவாய் 

    (c)

    பொது நிதி 

    (d)

    பொதுக் கடன் 

  15. நீடித்த வளர்ச்சி (அல்லது) வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை அடைய விதிக்கப்பட்டிருக்கும் காலம்.______

    (a)

    2020

    (b)

    2025

    (c)

    2030

    (d)

    2050

  16. கால்நடை சாணம், இயற்கை கழிவுகள் ஆகியவற்றை உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்துவது.

    (a)

    இயற்கை பண்ணை முறை 

    (b)

    பசுமை புரட்சி 

    (c)

    சுற்றுச்சூழல் 

    (d)

    நிலையான மேம்பாடு 

  17. நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான ஆங்கில விரிவாக்கம் 

    (a)

    National Institute for Transport in India

    (b)

     National Institute for Trade in India

    (c)

    National Institute for Tomorrow’s India

    (d)

    National Institution for Transforming India

  18. திட்டக்குழுவின் முதல் தலைவர் ...............

    (a)

    J.P. நாராயணன் 

    (b)

    S.N. அகர்வால்

    (c)

    ஜவஹர்லால் நேரு

    (d)

    M. விஸ்வேஸ்வரய்யா

  19. U என்பது ________ 

    (a)

    விலகல் 

    (b)

    திட்டப்பிழை 

    (c)

    பிழைக் கருத்து 

    (d)

    மேற்சொன்ன எதுவும் அல்ல 

  20. புள்ளியியல் என்பது மதிப்பீடுகளை மற்றும் நிகழ்தகவுகளைப் பற்றிய அறிவியல் எனக்கூறியவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    போடிங்டன்

    (c)

    கிராக்ஸ்டன்

    (d)

    கௌடன்

      1. பகுதி-II

        எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 2 = 14
  21.  பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக

  22. தனிநபர் வருமானம் என்றால் என்ன?

  23. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  24.  பெருக்கி-வரையறு

  25. மைய வங்கி என்பதனை வரையறு.

  26. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் என்ன?

  27.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  28. மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பங்கீட்டு அளவை கூறு.

  29.  சூழலியல் என்றால் என்ன?

  30. புள்ளிவிவர வகைகள் யாவை?

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 3 = 21
  32. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  33. காரணி செலவில் NNP-விவரி

  34. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  35. தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக

  36. மீள்பணவீக்கம் பற்றி விளக்குக?

  37. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  38. இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?

  39. ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  40. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  41. வறுமையின் நச்சு சுழற்சிக்கான காரணங்களை வரைப்படத்துடன் தெளிவுப்படுத்துக.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7 x 5 = 35
    1. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

    2. சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்க.

    1. கீன்ஸின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

    2. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

    1. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

    2. பொருளாதாரா முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

    1. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

    2. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

    1. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.

    2. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

    1. பின்வரும் விவரங்களிலிருந்து Y மீது X மற்றும் X மீது Y ஆகியவற்றினை கண்டறிக.

      Y: 45 48 50 55 65 70 75 72 80 85
      X : 25 30 35 30 40 50 45 55 60 65
    2. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment