12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021

12th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

   பகுதி-I

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

   கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


  20 x 1 = 20
 1. "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்

  (a)

  பாலகங்காதர திலகர்

  (b)

  தாதாபாய் நெளரோஜி

  (c)

  சுபாஷ் சந்திர போஸ்

  (d)

  பாரதியார்

 2. கூற்று:தாதாபாய் நௌரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்:1905 ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் மிதவாத தேசியவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து.

  (a)

  கூற்று காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி,ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு ஆனால் காரணம் சரி 

 3. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்  _______.

  (a)

  புலின் பிஹாரி தாஸ்

  (b)

  ஹோமச்சந்திர கானுங்கோ

  (c)

  ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

  (d)

  குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

 4. கூற்று  : வங்கப்பிரிவினை ரத்து செய்வதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில் 1906 லிருந்து சுதேசி இயக்கம் முக்கிய மாற்றம் பெற்றது.
  காரணம்  : தனிச்சிறப்புடையவர்களில் ஒருவரான ரவீந்திரநாத் தாகூர் தனது எழுத்துக்கள் மூலம் இக்கருத்துக்களைப் பிரபலமடையச் செய்தார்.

  (a)

  கூற்று காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி ஆனால் காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு ஆனால் காரணம் சரி

 5. கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

  (a)

  கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கமல்ல

  (b)

  கூற்று சரி. காரணம் கூற்றிற்கான விளக்கம்

  (c)

  கூற்று தவறு. காரணம் சரி

  (d)

  கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 6. 1916-ல் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் பெயர் யாது?

  (a)

  லக்னோ 

  (b)

  லாகூர் 

  (c)

  சூரத் 

  (d)

  மைசூர் 

 7. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம் _______.

  (a)

  கேதா

  (b)

  தண்டி

  (c)

  சம்பரான்

  (d)

  பர்தோலி

 8. அம்பேத்கர் _____________ கட்சிகளை ஆரம்பித்தார். 

  (a)

  அம்பேத்கர்

  (b)

  கோகலே

  (c)

  W.C பானர்ஜி

  (d)

  M.G.ரானடே 

 9. முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

  (a)

  மதராஸ் – அரக்கோணம்

  (b)

  பம்பாய் - பூனா 

  (c)

  பம்பாய் - தானே 

  (d)

  கொல்கத்தா - ஹீக்ளி 

 10. தென்னிந்தியாவில் பல தொழிற்சங்களை இவர் தோற்றுவித்தார்

  (a)

  காமராஜர்

  (b)

  பெரியார்

  (c)

  திரு.வி.க

  (d)

  அண்ணா

 11. லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் _______.

  (a)

  ரஹமத்துல்லா சயானி

  (b)

  சர் சையது அகமது கான்

  (c)

  சையது அமீர் அலி

  (d)

  பஃருதீன் தயாப்ஜி

 12. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

  (a)

  இந்து மத மறுமலர்ச்சி -1924

  (b)

  கலிஃபா பதவி ஒழிப்பு - ஆரிய

  (c)

  லாலாலஜபதி ராய் - M.S கோல்வாக்கர் 

  (d)

  ராஷ்டிரியா சுய சேவா சங்கம் -இந்து-முஸ்லீம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்

 13. 1946 இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

  (a)

  ஜவஹர்லால் நேரு

  (b)

  மௌலானா அபுல்கலாம் ஆசாம்.

  (c)

  ராஜேந்திர பிரசாத்

  (d)

  வல்லபாய் படேல் 

 14. நேரடி நடவடிக்கை நாள் என்று அறைகூவல் விடுத்தவர் யார்?

  (a)

  காந்தி

  (b)

  நேரு

  (c)

  பட்டேல்

  (d)

  ஜின்னா

 15. ஆசியத் தலைவர்கள் மாநாடு எந்த நகரில் நடைபெற்றது?

  (a)

  டெல்லி

  (b)

  கொழும்பு 

  (c)

  லண்டன்

  (d)

  பெல்கிரேட்

 16. போப்பாண்டவரால் கட்டப்பட்ட  ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தை நவீனமயமாக்கியவர் யார்?

  (a)

  டோனிடெல்லா

  (b)

  ரபேல்

  (c)

  லியானர்டோ  டாவின்சி

  (d)

  மைக்கேல்  ஆஞ்சிலோ 

 17.  ______  தொடக்கத்தில்  செயின்ட் டோமிங்கோ என அறியப்பட்டது.

  (a)

  மெக்சிகோ

  (b)

  பனாமா

  (c)

  ஹைட்டி

  (d)

  ஹவானா

 18. பிரிட்டிஷ், பெல்ஜிய மற்றும் பிரஷ்யக் கூட்டுப் படைகளால் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட வாட்டர்லூ அமையப்பெற்ற இடம்_______.

  (a)

  பிரான்ஸ்    

  (b)

  ஜெர்மனி

  (c)

  பெல்ஜியம்

  (d)

  இத்தாலி

 19. 1879ஆம் ஆண்டில் _______ கட்டண சட்டத்தை இயற்றியது.

  (a)

  ஜெர்மனி

  (b)

  பிரான்ஸ் 

  (c)

  பிரிட்டன் 

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடு  

 20. 1947இன் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து விடுபட்டிருந்த ஒரே நாடு ______.

  (a)

  கிழக்கு ஜெர்மனி

  (b)

  செக்கோஸ்லோவாக்கியா

  (c)

  கிரீஸ்

  (d)

  துருக்கி

   1. பகுதி-II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  7 x 2 = 14
 21. தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?

 22. தன்னாட்சி இயக்கத்தின் வீழ்ச்சி எப்போது ஏற்பட்டது?

 23. பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

 24. கராச்சி அமர்வின் முக்கியத்துவம் குறித்து கூறு.

 25. இந்து மகா சபை பற்றி எழுதுக.

 26. ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

 27. மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.

 28. நாடு விடுதலை அடைந்தபோது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.

 29. 1864இல் துவங்கப்பட்ட முதல் பன்னாட்டு உழைக்கும் ஆண்களின் சங்கம் ஆற்றிய பங்கை விளக்குக.

 30. ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்

 31.             பகுதி-III

   எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


  7 x 3 = 21
 32. இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?

 33. மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.

 34. தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

 35. தனித்தொகுதியும் வகுப்புவாதம் பரவலும் பற்றி எழுதுக.

 36. காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதிஆவணத்தில் கையெழுத்திட்டார்?

 37. இந்திய, பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட மதக் கலவரத்தையை விவரி?

 38. மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன்?

 39. தொழிற்புரட்சியின்  இரண்டாம்  கட்டத்தில்  ஜெர்மனியில்  நடந்தது  என்ன?

 40. பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச்சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க.

 41. போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரகமாக எடுத்துக் கூறுக

  1. பகுதி-IV

   அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


  7 x 5 = 35
  1. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூகப் - பொருளாதாரக் காரணிகளை ஆய்க.

  2. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

  1. சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?

  2. திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

  1. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

  2. கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.

  1. இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள் யாவை?

  2. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

  1. அமைச்சரவைத் தூதுக்குழு பற்றி விவரி.

  2. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  1. நிலச் சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில் தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக.

  2. கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?

  1. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை  ஏற்படுத்தி  உள்ளது?

  2. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன் சொல்லப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021

Write your Comment