12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I 

    25 x 3 = 75
  1. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

  2. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?

  3. மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

  4. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  5. பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?

  6. தன்னாட்சி இயக்கத்தின் இரட்டைக் குறிக்கோளை பற்றி விவாதிக்கவும்.

  7. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக காதர் இயக்கம் கருதப்படுவது ஏன்?

  8. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

  9. பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.

  10. மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.

  11. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  12. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  13. வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  14. சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

  15. பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளைச் சுட்டிக் காட்டுக.

  16. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை?

  17. மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக.

  18. இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?

  19. மறுமலர்ச்சி காலத்தில் இங்கிலாந்தில் ஏற்பட்ட இலக்கிய சாதனைகளை குறிப்பிடவும்.

  20. 1492இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.  

  21. "1789 ஆம் ஆண்டு  புரட்சிக்கு  நீண்ட  காலத்திற்கு  முன்னதாகவே  கருத்துக்களின்  களத்தில் ஒரு புரட்சி  நடந்தது " - விளக்குக.

  22. பாரிஸ் கம்யூனை நோக்கி வழிநடத்திச்சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க.

  23. போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரகமாக எடுத்துக் கூறுக

  24. சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.

  25. நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வரலாறு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium History Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment