12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

      பகுதி-I

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

      கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 


    20 x 1 = 20
  1. (AB)-1 =\(\left[ \begin{matrix} 12 & -17 \\ -19 & 27 \end{matrix} \right] \) மற்றும் A-1 =\(\left[ \begin{matrix} 1 & -1 \\ -2 & 3 \end{matrix} \right] \) எனில், B-1= ______.

    (a)

    \(\left[ \begin{matrix} 2 & -5 \\ -3 & 8 \end{matrix} \right] \)

    (b)

    \( \left[ \begin{matrix} 8 & 5 \\ 3 & 2 \end{matrix} \right] \)

    (c)

    \(\left[ \begin{matrix} 3 & 1 \\ 2 & 1 \end{matrix} \right] \)

    (d)

    \(\left[ \begin{matrix} 8 & -5 \\ -3 & 2 \end{matrix} \right] \)

  2. x+2y+3z=1, x-y+=4z=0, 2x+y+7z=1 என்ற தொகுப்பிற்கு_______ 

    (a)

    ஒரே தீர்வு 

    (b)

    இரண்டு தீர்வுகள் 

    (c)

    தீர்வு இல்லை 

    (d)

    எண்ணிக்கையற்ற தீர்வுகள் 

  3. \({ \left( \frac { 1+i\sqrt { 3 } }{ 1-i\sqrt { 3 } } \right) }^{ 10 }\) –ன் மதிப்பு _______.

    (a)

    \(cis\frac { 2\pi }{ 3 } \)

    (b)

    \(cis\frac { 4\pi }{ 3 } \)

    (c)

    \(-cis\frac { 2\pi }{ 3 } \)

    (d)

    \(-cis\frac { 4\pi }{ 3 } \)

  4. z1,z2 என்பன இரு கலப்பெண்கள் மற்றும் \(\left| { z }_{ 1 }+{ z }_{ 2 } \right| =\left| { z }_{ 1 } \right| +\left| { z }_{ 2 } \right| \) எனில் 

    (a)

    \(arg({ z }_{ 1 })+arg\left( { z }_{ 2 } \right) =0\)

    (b)

    \(arg\left( { z }_{ 1 }{ z }_{ 2 } \right) =0\)

    (c)

    \(arg\left( { z }_{ 1 } \right) =arg\left( { z }_{ 2 } \right) \)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. x3-kx2+9x எனும் பல்லுறுப்புக்கோவைக்கு மூன்று மெய்யெண் பூச்சியமாக்கிகள் இருப்பதற்கு தேவையானதும் மற்றும் போதுமானதுமான நிபந்தனை _______.

    (a)

    |k|≤6

    (b)

    k=0

    (c)

    |k|>6

    (d)

    |k|≥6

  6. \(\alpha ,\beta ,\gamma \) என்பன \({ x }^{ 3 }+{ 3x }^{ 2 }+x-4=0\) என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில் \(10\alpha ,10\beta ,10\gamma \) என்பனவற்றை மூலங்களாகக் கொண்ட சமன்பாடு 

    (a)

    \({ x }^{ 3 }+{ 30x }^{ 2 }+10x-40=0\)

    (b)

    \({ x }^{ 3 }+30{ x }^{ 2 }+100x-4000=0\)

    (c)

    \({ 4x }^{ 3 }+{ 12x }^{ 2 }+4x-1=0\)

    (d)

    \({ 10x }^{ 3 }+30{ x }^{ 2 }+10x-1=0\)

  7. sin-1 x + cot-1\((\frac{1}{2})=\frac{\pi}{2}\), எனில், x-ன் மதிப்பு _______.

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    \(\frac{1}{\sqrt{5}}\)

    (c)

    \(\frac{2}{\sqrt{5}}\)

    (d)

    \(\frac{\sqrt3}{2}\)

  8. ∆ ABC ல் C ஒரு செங்கோணம் எனில், tan-1 \(\left( \frac { a }{ b+c } \right) \) + tan-1 \(\left( \frac { b }{ c+a } \right) \) 

    (a)

    \(\frac { \pi }{ 3 } \)

    (b)

    \(\frac { \pi }{ 4 } \)

    (c)

    \(\frac { 5\pi }{ 2 } \)

    (d)

    \(\frac { \pi }{ 6 } \)

  9. x + y = k என்ற நேர்க்கோடு பரவளையம் y2 = 12x -இன் செங்கோட்டுச் சமன்பாடாக உள்ளது எனில் k-ன் மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    -1

    (c)

    1

    (d)

    9

  10. அதிபரவளையத்தின் குவியங்களுக்கு இடைப்பட்ட தூரம் 16 மற்றும் \(e=\sqrt { 2 } \). அதனுடைய சமன்பாடு என்பது 

    (a)

    x- y= 32

    (b)

    y- x= 32

    (c)

    x- y= 16

    (d)

    y- x= 16

  11. \(\vec { \beta } \) மற்றும் \(\vec { \gamma } \) ஆகியவை அமைக்கும் தளத்தில் \(\vec { \alpha } \) அமைந்துள்ளது எனில் _______.

    (a)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =1\)

    (b)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =-1\)

    (c)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =0\)

    (d)

    \(\left[ \vec { \alpha } ,\vec { \beta } ,\vec { \gamma } \right] =2\)

  12. \(\overset { \rightarrow }{ OA } =2\overset { \wedge }{ i } -3\overset { \wedge }{ j } ,\overset { \rightarrow }{ OB } =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \rightarrow }{ OC } =3\overset { \wedge }{ i } -\overset { \wedge }{ k } \) யை பக்கங்களாக கொண்ட திண்ம இணைக்கரத்தின் கன அளவு காண்க.

    (a)

    \(\frac { 4 }{ 13 } \)

    (b)

    4

    (c)

    \(\frac { 2 }{ 7 } \)

    (d)

    \(\frac { 4 }{ 9 } \)

  13. | 3- x | + 9 என்ற சார்பின் குறைந்த மதிப்பு _______.

    (a)

    0

    (b)

    3

    (c)

    6

    (d)

    9

  14. y = (x -1)3 என்ற வளைவரையின் வளைவு மாற்றப் புள்ளி_______.

    (a)

    (0,0)

    (b)

    (0,1)

    (c)

    (1,0)

    (d)

    (1,1)

  15. u(x, y) = x2 + 3xy - y-2019 , எனில் \({ \frac { \partial u }{ \partial x } | }_{ (4,-5) }\) -ன் மதிப்பு _______.

    (a)

    -4

    (b)

    -3

    (c)

    -7

    (d)

    13

  16. If \(\int _{ 1 }^{ x }{ \frac { { e }^{ \sin u } }{ u } } \)du, x > 1 மற்றும்  \(\int _{ 1 }^{ 3 }{ \frac { { e }^{ { \sin }^{ 2 } } }{ x } } dx=\frac { 1 }{ 2 } \) [f(a) - f(1)] எனில் a பெறக்கூடிய ஒரு மதிப்பு _______.

    (a)

    3

    (b)

    6

    (c)

    9

    (d)

    5

  17. \(\frac { { d }y }{ { dx } } +P(x)y=Q(x)\) என்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகையீட்டுக் காரணி x எனில், P(x) என்பது _______.

    (a)

    x

    (b)

    \(\frac { { x }^{ 2 } }{ 2 } \)

    (c)

    \(\frac { { 1 }^{ } }{ x } \)

    (d)

    \(\frac{ 1 } { { x }^{ 2 } }\)

  18. ஒரு விளையாட்டில் அறுபக்க பகடையை விளையாடுபவர் உருட்டுகிறார். பகடை எண் 6 -ஐக் காட்டினால், விளையாடுபவர் ரூ. 36 வெல்லுவார், இல்லையெனில் ரூ. k2, தோற்பார். இங்கு k என்பது பகடை காட்டும் எண். k = {1, 2, 3, 4, 5}. விளையாட்டில் எதிர்பார்க்கப்படும் வெல்லும் தொகை ரூ _______.

    (a)

    \(\frac{19}{6}\)

    (b)

    \(\frac{19}{6}\)

    (c)

    \(\frac{3}{2}\)

    (d)

    \(\frac{3}{2}\)

  19. ஓர் ஈருறுப்புச் செயலி S என்ற ஒரு கணத்தின் மீது ஒரு சார்பாக பின்வரும் எவற்றிலிருந்து பெறப்படுகிறது.

    (a)

    S➝S

    (b)

    (S X S)➝S

    (c)

    S➝(S X S)

    (d)

    (S X S)➝(S X S)

  20. \((p\vee q)\rightarrow r\) -ன் நேர்மாறுக் கூற்று எது?

    (a)

    \(\neg r \rightarrow(\neg p \wedge \neg q)\)

    (b)

    \(\neg r \rightarrow(p \vee q)\)

    (c)

    \(r \rightarrow(p \wedge q)\)

    (d)

    \(p \rightarrow(q \vee r)\)

    1. பகுதி-II

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 25க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7x 2 = 14
  21. அணி \(A=\left[ \begin{matrix} 4 & 5 & -6 \\ 7 & -3 & 0 \end{matrix}\begin{matrix} 1 \\ 8 \end{matrix} \right] \)-ன் தரம் காண்க.

  22. கீழ்க்காண்பவற்றை செவ்வக வடிவில் எழுதுக:
    \(\bar { 3i } +\frac { 1 }{ 2-i } \)

  23. \(\\ { x }^{ 2 }+{ px }^{ 2 }+qx+r=0\) என்ற சமன்பாட்டின் மூலங்கள் கூட்டுத்தொடரில் எனில், \({ 2p }^{ 3 }-9pq+27r=0\) எனக் காட்டுக.

  24. மதிப்பீடுக. \(sin\left( { cos }^{ -1 }\left( \frac { 3 }{ 5 } \right) \right) \)

  25. பின்வரும் வட்டங்களுக்கு மையத்தையும் ஆரத்தையும் காண்க
    x2+y2-x+2y-3 = 0

  26. எந்த ஒரு \(\vec { a } \) க்கும் \(\hat { i } \left( \vec { a } \times \hat { i } \right) +\hat { j } \times \left( \vec { a } \times \hat { j } \right) +\hat { k } \times \left( \vec { a } \times \hat { k } \right) =2\vec { a } \) என நிரூபி.

  27. கொடுக்கப்பட்ட புள்ளிகளில் பின்வரும் வளைவரைகளுக்கும் தொடுகோட்டின் சாய்வினைக் காண்க.
    \(x=acos^{3}t, y=b sin^{3}t; t=\frac{\pi}{2}\)

  28. சார்பு F(x,y) = \(\frac { { x }^{ 2 }+5xy-10{ y }^{ 2 } }{ 3x+7y } \) படி 1 உடைய சமபடித்தான சார்பு எனக்காட்டுக.

  29. பின்வரும் வகைக்கெழுச் சமன்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை மற்றும் படி (இருக்குமானால்) ஆகியவற்றைத் தீர்மானிக்க.
    \(y\left( \frac { { d }y }{ { d }x } \right) =\frac { x }{ \left( \frac { { d }y }{ { d }x } \right) +{ \left( \frac { { d }y }{ { d }x } \right) }^{ 3 } } \)

  30. p மற்றும் q என்ற கூற்று மாறிகளைக் கொண்டு பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தையும் குறியீட்டு அமைப்பில் எழுதுக.
    19 ஒரு பகா எண் அல்லது ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் சமமல்ல.

  31.             பகுதி-III

      எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 36க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.


    7 x 3 = 21
  32. பின்வரும் அணிகளுக்கு ஏறுபடி வடிவத்தைப் பயன்படுத்தி அணித்தரம் காண்க :
    \(\left[ \begin{matrix} 1 \\ 2 \\ 5 \end{matrix}\begin{matrix} 1 \\ -1 \\ -1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \\ 7 \end{matrix}\begin{matrix} 3 \\ 4 \\ 11 \end{matrix} \right] \)

  33. பின்வருவனவற்றை செவ்வக வடிவில் எழுதுக.
    \(\frac { cos\frac { \pi }{ 6 } -isin\frac { \pi }{ 6 } }{ 2\left( cos\frac { \pi }{ 3 } +isin\frac { \pi }{ 3 } \right) } \)

  34. x2-y = 353702  க்கான மிகை முழுக்கள்) எண்ணிக்கை காண்க.

  35. பின்வருவனவற்றிற்கு சார்பகம் காண்க
    g(x) = 2sin−1(2x−1)−\(\frac{\pi}{4}\)

  36. நீள்வட்டத்தின் மையம் (1, 2), ஒரு குவியம் (1, 3) மற்றும் மையத்தொலைவு \(\cfrac { 1 }{ 2 } \) எனில், நீள்வட்டத்தின் சமன்பாடு காண்க.

  37. \(\vec { a }\) = \(\hat { i }\)+\(\hat { j }\)+\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\) மற்றும் \(\vec { c }\) = c1\(\hat { i }\)+c2\(\hat { j }\)+c3\(\hat { k }\) என்க. c= 1 மற்றும்  c= 2 எனில்\(\vec { a }\), \(\vec { b }\)\(\vec { c }\) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாக இருக்குமாறு c-ன் மதிப்பினைக் காண்க.

  38. \(f(x)=x-x^{2}, 1\le x \le 2\)  என்ற சார்பிற்கு (1, 2) என்ற இடைவெளியில் சராசரி மதிப்புத் தேற்றத்தை நிறைவு செய்யும் மதிப்பினைக் காண்க.

  39. ஒரு மனிதன் x மணி நேரத்தில் கற்கும் y வார்த்தைகளுக்கான தொடர்பு y = 52\(\sqrt { x } \), 0\(\le \)x\(\le \)9 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. x -ன் மதிப்பு பின்வருமாறு மாறும்போது கற்றல் வார்த்தைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் தோராய மாற்றத்தைக் காண்க.
    (i) 1 இலிருந்து 1.1 மணி?
    (ii) 4 இலிருந்து 4.1 மணி?

  40. பின்வரும் நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு காண்க:
    \(cosx\frac { dy }{ dx } +ysinx=1\)

  41. e ன் மீது + என்ற ஈருறுப்புச் செயலி (i) அடைவுப் பண்பு (ii) பரிமாற்றுப் பண்பு (iii) சேர்ப்புப் பண்பு (iv) சமனிப் பண்பு மற்றும் (v) எதிர்மறைப் பண்பு ஆகியவைகளை பெற்றுள்ளதா எனச் சரிபார்க்க. இங்கு ℤe = அனைத்து இரட்டை முழுக்களின் கணம்.

    1. பகுதி-IV

      அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.


    7x 5 = 35
    1. k-ன் எம்மதிப்புகளுக்கு பின்வரும் சமன்பாட்டுத் தொகுப்பு kx − 2y + z =1, x − 2ky + z = −2, x − 2y + kz =1
      (i) யாதொரு தீர்வும் பெற்றிராது
      (ii) ஒரே ஒரு தீர்வைப் பெற்றிருக்கும்
      (iii) எண்ணிக்கையற்ற தீர்வுகளைப் பெற்றிருக்கும் என்பதனை ஆராய்க.

    2. z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.

    1. சமன்பாடுகள் x2+bx+ca=0 மற்றும் x2+cx+ab=0 க்கு சமமான ஒரு மூலம் உள்ளது மற்றும் b≠c எனில் x2+ax+bc=0வை அவைகளின் மூலங்கள் நிறைவு செய்கின்றன எனக் காட்டுக.

    2. முதன்மை மதிப்பு காண்க.
      cosec-1(-1)

    1. எது பெரியது tan1  அல்லது tan-1 1?

    2. ஒரு பாலம் பரவளைய வளைவில் உள்ளது. மையத்தில் 10மீ உயரமும், அடிப்பகுதியில் 30மீ அகலமும் உள்ளது. மையத்திலிருந்து இருபுறமும் 6 மீ தூரத்தில் பாலத்தின் உயரத்தைக் காண்க.

    1. அதிபரவளையத்தின் முனைகள் (9,2) மற்றும் (1,2) மற்றும் அதன் குவியங்களுக்கு இடைப்பட்ட தொலைவு 10 எனில் அந்த அதிபரவளையத்தின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் ஆகியவற்றைக் காண்க.

    2. (4, 3, 2) என்ற புள்ளியில் இருந்து x + 2y + 3z = 2 என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் அடியின் அச்சுத்தூரங்களையும், செங்குத்தின் நீளத்தையும் காண்க.

    1. \(\left( \vec { a } \times \vec { b } \right) .\left( \vec { c } \times \vec { d } \right) +\left( \vec { b } \times \vec { c } \right) .\left( \vec { a } \times \vec { d } \right) +\left( \vec { c } \times \vec { d } \right) .\left( \vec { b } \times \vec { d } \right) =0\) காண்க.

    2. y = f (x) = x2 - x - 2 - 6 என்ற வளைவரையை வரைக.

    1. v(x,y) = log\(\left( \frac { { x }^{ 2 }+{ y }^{ 2 } }{ x+y } \right) \), எனில் \(x\frac { \partial v }{ \partial x } +y\frac { \partial v }{ \partial y } =1\) என நிறுவுக.

    2. x2 + y2 = 4  என்ற வட்டத்தில் ( 1, \(\sqrt {3}\) )  எனும் புள்ளியில் தொடுகோடு , செங்கோடு மற்றும் x-அச்சு ஆகியவற்றால் அடைபடும் அரங்கத்தின் பரப்பை தொகையிடலைப் பயன்படுத்தி காண்க.

    1. வருடத்திற்கு 5% தொடர் கூட்டு வீதத்தில் ஒருவர் ரூ.10,000-த்தை வங்கிக் கணக்கில் முதலீடு செய்கிறார். 18 மாதங்களுக்குப் பின்னர் அவர் வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கும்?

    2. மெய்மை அட்டவணையைப் பயன்படுத்தி ¬( p V q) V (¬p ∧ q) மற்றும் ¬p என்ற கூற்றுகள் தர்க்க சமானமானவை எனச் சோதிக்க.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil medium Maths  Reduced Syllabus Public Exam Model Question Paper With Answer Key - 2021

Write your Comment