All Chapter 5 Marks

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 180
    Answer All The Following Question:
    36 x 5 = 180
  1. ஒரு சிறுவன் ax2+bx+c என்ற பாதையில் ( − 6, 8),( − 2,− 12), மற்றும் (3,8) எனும் புள்ளிகள் வழியாக செல்கிறான். P( 7, 60) என்ற புள்ளியில் உள்ள அவனுடைய நண்பனை சந்திக்க விரும்புகிறான். அவன் அவனுடைய நண்பனை சந்திப்பானா? (காஸ் நீக்கல் முறையை பயன்படுத்துக).

  2. λ -வின் எம்மதிப்பிற்கு x+y+3z=0, 4x+3y+λz=0, 2x+y+2z=0 என்ற தொகுப்பிற்கு
    (i) வெளிப்பைடைத் தீர்வு
    (ii) வெளிப்படையற்ற தீர்வு கிடைக்கும்.

  3. f(x)=ax2+ba+c மற்றும் f(1)=0, f(2)=-2, f(3)=-6 எனில் அணிக்கோவை முறையைப் பயன்படுத்தி தீர்க்க.

  4. காஸ்-ஜோர்டன்முறையை பயன்படுத்தி, λ,μ, இன் எம்மதிப்புகளுக்கு 2x-3y+5z=12, 3x+y+λz=μ, x-7y+8z=17
    i) ஒரே ஒரு தீர்வை பெற்றிருக்கும் 
    ii) எண்ணிக்கையற்ற தீர்வுகளை பெற்றிருக்கும் 
    iii) யாதொரு தீர்வும் பெற்றிராது என்பதனை ஆராய்க.

  5. z = x + iy என்ற ஏதேனும் ஒரு கலப்பெண் Im\(\left( \frac { 2z+1 }{ iz+1 } \right) \) = 0 எனுமாறு அமைந்தால் z-ன் நியமப்பாதை 2x2 + 2y2 + x - 2y = 0 எனக்காட்டுக.

  6. சுருக்குக: \({ \left( -\sqrt { 3 } +3i \right) }^{ 31 }\)

  7. சரிபார்க்க
    (i) 2 arg (-1) ≠ arg(-1)2

  8. \({ (2-2i) }^{ \frac { 1 }{ 3 } }\) - ன் எல்லா மூலங்கள் மற்றும் அவற்றின் பெருக்கல் பலனை காண்க

  9. தீர்க்க: (x − 5)(x − 7)(x + 6)(x + 4) = 504

  10. x2-5x+6 மற்றும் x2-5x+16 ஆகிய பல்லுறுப்புக்கோவைகளின் அதிகபட்ச சாத்தியமான மிகை எண் மற்றும் குறையெண் பூச்சியமாக்கிகளின் எண்ணிக்கையை ஆராய்க. வளைவரைகளின் தோராய வரைபடம் வரைக.

  11. இங்கு a,b,c,d மற்றும் p வெவ்வேறான பூச்சியமற்ற மெய்யெண்கள் எனில்(a2+b2+c2)P2-2(ab+bc+cd)p+(b2+c2+d2)≤0. நிரூபிக்க a,b,c,d பெருக்கத் தொடரில் உள்ளன மற்றும் ad=bc.

  12. சமன்பாடுகள் x2+bx+ca=0 மற்றும் x2+cx+ab=0 க்கு சமமான ஒரு மூலம் உள்ளது மற்றும் b≠c எனில் x2+ax+bc=0வை அவைகளின் மூலங்கள் நிறைவு செய்கின்றன எனக் காட்டுக.

  13. முதன்மை மதிப்பு காண்க.
    cosec-1(-1)

  14. d-ஐ பொது வித்தியாசமாகக் கொண்டு a1, a2, a3, ... an ஒரு கூட்டுத் தொடர் எனில், \(\tan \left[ \tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 1 }{ a }_{ 2 } } \right) +\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ 2 }{ a }_{ 3 } } \right) +....\tan^{ -1 }\left( \frac { d }{ 1+{ a }_{ n }{ a }_{ n-1 } } \right) \right] =\frac { { a }_{ n }-{ a }_{ 1 } }{ 1+{ a }_{ 1 }{ a }_{ n } } \) என நிறுவுக.

  15. பின்வரும் சார்புகளின் சார்பகம் காண்க.
    f(x) = sin-1 x + cos x

  16. நிரூபிக்க: \({ tan }^{ -1 }\left( \frac { 1-x }{ 1+x } \right) -{ tan }^{ -1 }\left( \frac { 1-y }{ 1+y } \right) =sin\left( \frac { y-x }{ \sqrt { 1+{ x }^{ 2 } } .\sqrt { 1+{ y }^{ 2 } } } \right) \)

  17. பொறியாளர் ஒருவர் குறுக்கு வெட்டு பரவளையமாக உள்ள ஒரு துணைக்கோள் ஏற்பியை வடிவமைக்கின்றார். ஏற்பி அதன் மேல்பக்கத்தில் 5மீ அகலமும், முனையிலிருந்து குவியம்
    1.2 மீ தூரத்திலும் உள்ளது.
    (a) முனையை ஆதியாகவும், x-அச்சு பரவளையத்தின் சமச்சீர் அச்சாகவும் கொண்டு ஆய அச்சுகளைப் பொருத்தி பரவளையத்தின் சமன்பாடு காண்க.
    (b) முனையிலிருந்து செயற்கைக்கோள் ஏற்பியின் ஆழம் காண்க.

  18. பின்வருவனவற்றிகான முனை, குவியம், இயக்குவரையின் சமன்பாடு மற்றும் செவ்வகல நீளம் காண்க:
     x2-2x+8y+17=0

  19. பரவளையம் y2=4ax மீதமைந்த ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சி புள்ளி பரவளையத்தின் முனையின் மீது அமைந்திருக்கிறது. அதனுடைய நீளத்தை காண்க.

  20. \(\cfrac { { x }^{ 2 } }{ 25 } +\cfrac { { y }^{ 2 } }{ 9 } =1\) என்ற நீள்வட்டமும் ஒரு அதிபரவளையமும் ஒரே குவிங்களை கொண்டுள்ளன. அதிபரவளையத்தின் மையத் தகவு 2 எனில் அதனுடைய சமன்பாடு காண்க.

  21. (2,2,1), (9,3,6) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லக்கூடியதும் 2x+6y+6z=9 என்ற தளத்திற்குச் செங்குத்தாக அமைவதுமான தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.

  22. (2,2,1),(1,2,3) என்ற புள்ளிகள் வழிச் செல்வதும் (2,1,-3) மற்றும் (-1,5,-8) என்ற புள்ளிகள் வழிச் செல்லும் நேர்க்கோட்டிற்கு இணையாகவும் அமையும் தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு, மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.

  23. \(\left| \overset { \rightarrow }{ A } \right| =\overset { \wedge }{ i } +\overset { \wedge }{ j } +\overset { \wedge }{ k } \) மற்றும் \(\overset { \wedge }{ i } =\overset { \wedge }{ j } -\overset { \wedge }{ k } \) என்பன கொடுக்கப்பட்ட இரண்டு வெக்டர்கள் எனில் \(\overset { \rightarrow }{ A } \times \overset { \rightarrow }{ B } =\overset { \rightarrow }{ C } \) மற்றும் \(\overset { \rightarrow }{ A } .\overset { \rightarrow }{ B } =3\) என்ற சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் B யைக் காண்க.

  24. (1, 1, -1) வழிச்செல்லும் மற்றும் தளங்கள் x + 2y +3z - 7 = 0 மற்றும் 2x - 3y + 4z = 0 க்கு செங்குத்து தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாட்டை காண்க.  

  25. y = x2 மற்றும் y=(x-3)2 என்ற வளைவரைகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.

  26. கீழ்க்காணும் சார்புகளை வரைக:
     y = \(\frac { 1 }{ { 1+e }^{ -x } } \)

  27. சார்பு f(x,y) = \(\frac { { x }^{ 2 }-{ y }^{ 2 } }{ { y }^{ 2 }+1 } \)ஒவ்வொரு (x, y)∈ R2 -க்கும் தொடர்ச்சியானது என நிறுவுக

  28. U(x,y,z) = xyz, x=e-t, y=e-t cost, z= sin t t ∊ Rஎனில் \(\frac { dU }{ dt } \) -ஐக் காண்க.

  29. மதிப்பிடுக : \(\int ^1_0\) [2x]dx, [.] என்பது மீப்பெரு முழுக்கள் சார்பு.

  30. பின்வரும் வரையறுத்த  தொகையிடல்களை, தொகையிடலின்  பண்புகளைப்  பயன்படுத்தி மதிப்பு  காண்க:
     \(\int ^{1}_{0} \frac {log(1+x)}{1+x^2} \) dx

  31. தீர்க்க: (x2 - 3y2) dx + 2xydy = 0.

  32. வெப்பநிலை 250C ஆக உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ள நீரின் வெப்பநிலை 1000C ஆகும். 10 நிமிடங்களில் நீரின் வெப்பநிலை 800C ஆகக் குறைந்து விடுகிறது எனில், 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை காண்க.
    (i) 20 நிமிடங்களுக்குப் பின்னர் நீரின் வெப்பநிலை 
    (ii) வெப்பநிலை 40oC ஆக இருக்கும்போது நேரம் காண்க.

  33. ஒரு தனிநிலை சார்பு X -ன் நிகழ்தகவு நிறை சார்பானது

    x 1 2 3 4 5 6
    f(x) k 2k 6k 5k 6k 10k

    எனில், (i) P(2 < X < 6) (ii) P(2 ≤ X < 5) (iii) P(X ≤ 4) (iv) P(3 < X) என்பவற்றைக் காண்க.

  34. ஒரு சமவாய்ப்பு மாறி X-க்கு நிகழ்தகவு நிறைசார்பானது

    x 1 2 3 4 5
    f(x) k2 2k2 3k2 2k 3k

    எனில்
    (i) k மதிப்பு
    (ii) P(2 ≤ X < 5)
    (iii) P(3

  35. \(M=\left\{ \left( \begin{matrix} x \\ x \end{matrix}\begin{matrix} x \\ x \end{matrix} \right) :x\epsilon R-\{ 0\} \right\} \) என்க. * என்பது அணிப் பெருக்கல் எனக் கொள்க. * ஆனது M –ன் மீது அடைவு பெற்றுள்ளதா எனத் தீர்மானிக்க. அவ்வாறெனில், ∗ ஆனது M -ன் மீது பரிமாற்றுப் பண்பு, சேர்ப்புப் பண்புகளையும் நிறைவு செய்யுமா எனச் சோதிக்க.

  36. இரு நிபந்தனைக் கூற்றை நிபந்தனைக் கூற்றுடன் இணைத்து p ↔️ q ≡ (p ➝ q) ∧ (q⟶ p) என்ற சமானமானவை பண்பை நிரூபிக்க.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய  ஐந்து மதிப்பென் வினாக்கள்  (12th Standard Mathematics All Chapter Five Marks Important Questions 2020)

Write your Comment