பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. கூற்று : இனப்பெருக்க உறுப்புகளில் யானைக்கால் நோய்.
    காரணம்: இது கிளாமிடியா ட்ரோகோமேடிஸ் கிருமியால் வரும்.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி 

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு 

    (c)

    கூற்றுதவறு, காரணம் சரி 

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு 

  3. ஹெர்ஷே மற்றும் சேஸ் ஆகியோர் பாக்டீரியோஃபேஜில் செய்த ஆய்வு எதனைக் காட்டுகிறது?

    (a)

    புரதம் பாக்டீரிய செல்லுக்குள் நுழைகிறது.

    (b)

    டி.என்.ஏ ஒரு மரபுப்பொருள்

    (c)

    டிஎன்.ஏவில் கதிரியக்கத் தன்மையுடைய கந்தகம் உள்ளது.

    (d)

    வைரஸ்கள் உருமாற்றம் அடையும்

  4. உயிர்வழித் தோற்றக் கோட்பாட்டினை உருவாக்கியவர் யார்?

    (a)

    தாமஸ் ஹக்சிலி 

    (b)

    ஹென்றி பாஸ்டியன் 

    (c)

    ஒப்பாரின் 

    (d)

    ஹால்டேன் 

  5. எய்ட்ஸ் வைரஸில் காணப்படுவது ____.

    (a)

    ஒற்றை இழை ஆர்.என்.ஏ

    (b)

    இரட்டை இழை ஆர்.என்.ஏ

    (c)

    ஒற்றை இழை டி.என்.ஏ

    (d)

    இரட்டை இழை டி.என்.ஏ

  6. டி.என்.ஏ தடுப்பூசிகளை மரபியல் நோய்த்தடுப்பு முறையாகப் பயன்படுத்தும் ஒரு புதிய அணுகுமுனை எப்பொழுது நடைமுறைக்கு வந்தது?

    (a)

    1980

    (b)

    1990

    (c)

    2012

    (d)

    1997

  7. உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் ____.

    (a)

    WWF

    (b)

    IUCN

    (c)

    ZSI

    (d)

    UNEP

  8. கைபேசிகளின் மூலம் உருவாகும் மின்னணுக் கழிவுகளில் எந்த உலோகம் அதிகமாகக் காணப்படுகிறது?

    (a)

    தாமிரம்

    (b)

    வெள்ளி

    (c)

    பலேடியம்

    (d)

    தங்கம்

  9. கூற்று: காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமை வகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.
    காரணம்: ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ரான்களை அயனியாக்க  இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச்செல்கிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி.

    (b)

    கூற்று சரி. காரணம் தவறு.

    (c)

    கூற்று தவறு. காரணம் சரி.

    (d)

    கூற்று மற்றும் காரணம் தவறு

  10. டிரான்ஸ்போசான்களின் பயன் அறியப்பட்ட தாவரம் 

    (a)

    அராபிடியாப்ஸிஸ் தாலியான மற்றும் எஸ்செரிசியா கோலை 

    (b)

    எஸ்செரிசியா கோலை மற்றும் ஈஸ்ட் செல்கள் 

    (c)

    சர்ல்மோனெல்லா டைபி மற்றும் பைசம் சாட்டைவம் 

    (d)

    இவை ஏதுமில்லை 

  11. இந்த விதைகள் தான் உலகில் மிகவும் நீடித்த வாழ்நாளைக் கொண்டுள்ளது.

    (a)

    தாமரை 

    (b)

    ஹைட்ரில்லா 

    (c)

    நிம்பேயா 

    (d)

    மார்சீலியா 

  12. சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும் 

    (a)

    ஒரே திசையில் பாய்கிறது 

    (b)

    மேலிருந்து கீழாக 

    (c)

    சங்கிலி அமைப்பில் 

    (d)

    எல்லா திசைகளிலும் 

  13. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?

    (a)

    செஸ்பேனியா மற்றும் அக்கேசியா

    (b)

    சொலானம் மற்றும் குரோட்டலேரியா

    (c)

    கிளைட்டோரியா மற்றும் பிகோனியா

    (d)

    தேக்கு மற்றும் சந்தனம்

  14. அயல் மகரந்தச் சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் வழித்தோன்றல் ______.

    (a)

    தூயவழி

    (b)

    சந்ததிவழி

    (c)

    உட்கலப்புவழி

    (d)

    கலப்பினவீரிய வழி

  15. குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?

    (a)

    மஞ்சள் 

    (b)

    மிளாகாய் 

    (c)

    ஏலக்காய் 

    (d)

    புளி 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. சில இரு சமபிளவுறுதல்,சாய்வுமட்ட இருசமபிளவு முறை என அழைக்கப்படுகின்றது. கரணம் என்ன?

  18. இயற்கை கருத்தடை முறைகள் யாவை?

  19. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.

  20. முழுமை பெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக

  21. rDNA தொழில்நுட்ப வருகைக்கு முன் இன்சுலின் எவ்வாறு பெறப்பட்டது? எத்தகைய பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டன?

  22. ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?

  23. தகுந்த எடுத்துக்காட்டுடன் இரண்டு தரைஒட்டிய தண்டின் மாற்றுருக்களைப் பட்டியலிடுக.

  24. சூழ்நிலையியல் படிநிலைகள் என்றால் என்ன? பல்வேறு சூழ்நிலையியல் படிநிலைகளை எழுதுக.

  25. பல்வகை உணவுத் தாவரங்கள் எவை?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. இனப்பெருக்க மண்டலத்தின் 4 முக்கிய செயல்பாடுகள் எவை?

  28. புதிய சிற்றினத் தோற்றத்தை விளக்கும் டி.விரிஸ்சின் திடீர் மாற்றக் கோட்பாடு, எவ்வாறு லாமார்க் மற்றும் டார்வினியக் கோட்பாடுகளிலிருந்து வேறுபடுகிறது?

  29. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  30. இயற்கை வேளாண்மையின் முக்கியப் பண்புகளை எழுதுக.

  31. ஈரப்பதம் என்றால் என்ன?அதன் வகைகளை பற்றி எழுதுக.

  32. PTC - இல் பயன்படும் சில வளர்வூடகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  33. வெலாமன் என்றால் என்ன?

  34. பொதுவாக மனிதனின் செயல்பாடுகள் சூழல் மண்டலத்திற்கு எதிராகவே உள்ளது. ஒரு மாணவனாக நீ சூழல்மண்டல பாதுகாப்பிற்கு எவ்வாறு உதவுவாய்?

  35. மான்ட்ரியல் ஒப்பந்தம் ஏன் ஏற்படுத்தப்பட்டது?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. மூடுவிதைத் தாவரத்தில் நடைபெறும் கருவுறுதல் நிகழ்விலுள்ள படிநிலைகளின் சுருக்கமான தொகுப்பைத் தருக.

    2. நறுமணப் பொருட்களின் அரசன், அரசி யாவை ? அவற்றை விளக்கி, அவற்றின் பயன்களையும் விளக்குக.

    1. தனியொொரு மரபணுவானது பலபண்புகளைக் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்ற பண்புகளை எவ்வாறு மாற்றி அமைக்கிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக

    2. பயிர் பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக.

    1. நீர் மாசுபாட்டினால் உயிரினங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை?

    2. களைக்கொல்லியைத் தாங்கிக்கூடிய பயிர்களின் நண்மைகள் யாவை?

    1. இந்தியாவில் உயிரிய பல்வகைத்த தன்மையின் பரிணாமத்தை விவரி.

    2. கீழ்கண்ட விவரங்களைக் கொண்டு ஒரு பிரமிட் வரைந்து சுருக்கமாக விளக்குக. 
      உயிரினங்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது-பருந்து - 50, தாவரங்கள் -1000, முயல் மற்றும் எலி - 250 + 250, பாம்பு மற்றும் ஓணான் 100 + 50.

    1. இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.

    2. இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிக்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Biology - Public Model Question Paper )

Write your Comment